நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
திங்கள், நவம்பர் 28, 2022
பணம், பணம், பணம் ,
வெள்ளி, நவம்பர் 25, 2022
மரணத்தை பற்றி இஸ்லாம்,
வியாழன், நவம்பர் 24, 2022
நாற்பது நாட்கள் (40) மகத்துவம்,
கத்தார் கால் பந்து உலக கோப்பை,
வெள்ளி, நவம்பர் 18, 2022
காதியானிகள் யார்.
காதியானிகள் முஸ்லிம் இல்லை
முஸ்லிம் யாரும் அவர்கள் பேச்சை கேட்க வேண்டாம் அவர்கள் இந்துக்கள்
காதியானிகளும் அவர்களது வழிகெட்ட கொள்கைகளும்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
யார் இந்த காதியானிகள்?
ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் மார்க்கத்தை விட்டும் குறிப்பாக முஸ்லிம்களின் வீரதீரமிக்க ஜிஹாது சிந்தனைகளிலிருந்தும் அவர்களை அகற்றி அதனால் தாங்கள் முஸ்லிம்களின் எதிர்ப்புகளிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் சதி வேலையின் மூலம், ஒருங்கினைந்த இந்தியாவில் பஞ்சாப் மாகானத்தில் உள்ள காதியான் என்ற ஊரில் வசித்து வந்த, ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக விளங்கிய மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (1839-1908 CE) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட (1876 CE) வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தான் காதியானிகள். இவர்கள் தங்களை ‘காதியானிகள்’ என்றழைத்துக் கொள்வதைவிட ‘அஹ்மதியாக்கள்’ அல்லது ‘அஹ்மதிய்யா ஜமாஅத்’ தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தாங்களும் ‘முஸ்லிம்களின் ஒரு பிரிவினர்’ போன்று முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்..
காதியானிகளின் வழிகெட்டக் கொள்கையின் தோற்றம்:
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக முஸ்லிம் நாடுகளையெல்லாம் கைப்பற்றி காலனியாதிக்கத்தைச் செலுத்தி வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஸ்பெயினின் வீழ்ச்சிற்கு பிறகு இந்தியாவின் பக்கம் பார்வையைச் செலுத்தினர்.
ஆனால் இந்திய முஸ்லிம்களின் உணர்வில் ஊறித் திளைத்திருந்த ஈமானிய சக்திகளுக்கு எதிராக அவர்களை அடக்கியாள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நன்கு புரிந்துகொண்டனர். மேலும் ஆங்கிலேயருக்கெதிராக ஜிஹாது செய்வது மார்க்கக் கடமையென வலியுறுத்தி தாமும் பல போர்களில் ஈடுபட்ட முஸ்லிம் உலமாபெருமக்களின் வீரதீர செயல்களும் அவர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான ஃபத்வாக்களும் இந்திய முஸ்லிம்களின் உள்ளங்கிளில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரனத்தினால் ஆங்கிலேயர்கள் செய்வதறியாது தவித்தனர்.
பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பெயர் போன ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களிடம் பிளவை ஏற்படுத்தி அவர்களின் ஈமானை சிதைத்து அவர்களுடைய ஜிஹாது சிந்தனையை அவர்களிடம் இருந்து எப்படியாவது ஒழித்துக் கட்டினால் தவிர தங்களால் நிம்மதியாக இந்தியாவில் ஆட்சி செய்திடவும் தங்களின் மிஷனரிகளால் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிட இயலாது என்பதை நன்கு உணர்ந்தனர்.
இந்த சூழ்நிலையில் இவர்களுக்குச் சாதகமாக அமைந்தவர் தான் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவர். ஏற்கனவே மிர்ஸா குலாம் அஹ்மதுவின் குடும்பமே ஆங்கிலேயர்களுக்கு மிகவும் விசுவாசமானதாக இருந்து வந்தது. மிர்ஸா குலாம் அஹ்மதுவின் தந்தை மிர்ஸா முர்தளா ஆங்கிலேயர்களுக்கு அடிபனிவதில் தன்னை அர்பனித்துக் கொண்டு அதன் மூலம் ஆங்கிலேயர்களிடமிருந்து பல நற்சான்றிதழ்களையும் வெகுமதிகளையும் பெற்றார். அவரோடு சேர்ந்து மிர்ஸா குலாம் அஹ்மதுவின் சகோதரரான மிர்ஸா குலாம் காதிரும் ஆங்கிலேயப் படைகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்தவர்களுடன் போராடினார்.
ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களிடம் தம் தந்தைக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஸியால்கோட் – ல் பணிபுரிந்த (1864-1868) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியர்களிடம் மிக நெருக்கமாக இருந்தார். ஆங்கிலேய அரசின் உளவுத்துறையின் மிக முக்கிய நபரும் ”ஸியால் கோட்” பகுதிக்கு மிஷனரி வேலைகளுக்கான பொறுப்பாளருமான கிறிஸ்தவ பாதிரியார் பட்லர் M.A .வுடன் மிர்ஸா குலாம் காதியானிக்கு மிகவும் நெருக்கமான தொடர்ப்பு ஏற்பட்டது. இருவருரிடையே நீண்ட சந்திப்புகள், இரகசிய உரையாடல்கள் நடந்து வந்தன. ஒருமுறை இந்தப் பாதிரியார் காதியானுக்கே நேரடியாகச் சென்று மிர்ஸா குலாம் அஹ்மதுவிடம் நீண்ட நேரம் இரகசிய சதி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி தமது வேலையை திடீர் என ராஜினாமா செய்துவிட்டு இஸ்லாத்திற்கெதிரான ஆங்கிலேயர்களின் சதி வேலைகளுக்கு ஆதரவாக முழுநேரமும் ஈடுபடத் தொடங்கினார்.
ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் அவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவரும் தன்னுடைய எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக நடந்துக் கொண்டு அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்மவமான ஹதீஸ்களின் போதுமான மொழி பெயர்ப்புகள் அந்தக் காலத்தில் இல்லாத காரணத்தால் போதிய கொள்கைத் தெளிவில்லாமலும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களிலும் அனாச்சாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களிடம் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துக்களை திரித்து தமது விஷக் கருத்துக்களை பரப்பினார். மார்க்கம் அறியா பாமர மக்களில் சிலர் இவருடைய விஷமப் பிரச்சாரத்திற்கு மயங்கினர்.
‘ஜாமிய்யத் அஹ்லல் ஹதீத் ஃபீ உமூம் அல்-ஹிந்த்’ என்ற இமைப்பின் தலைவராக விளங்கிய ஷைய்க் அபுல் வஃபா தானா அல்-அம்ரிஸ்தரி என்ற மார்க்க அறிஞர் இந்த மிர்ஸா குலாம் அஹ்மது காதியானியோடு விவாதித்துப் பார்த்தும் எவ்வித பலனும் இல்லாததால் இவருடன் முபாஹலா செய்துகொண்டார். அதாவது இருவரும் சேர்ந்து அல்லாஹ்விடம், ‘இருவரில் யார் பொய் கூறுகிறாரோ அவர் மற்றொருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதே மரணிக்கவேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தனர். அவ்வாறு செய்த சில நாட்களிலே மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி 1908 ஆம் ஆண்டு மரணித்தார். மிர்ஸா குலாம் அஹமதுவிற்குப் பிறகு அவரின் வழித் தோன்றல்களும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர் விதைத்துச் சென்ற நச்சுக்கருத்துக்களை மக்களிடையே பரப்பி முஸ்லிம்களின் ஈமானை சிதைத்து வருகின்றனர்.
காதியானி வழிகெட்டக் கொள்கைகளின் மூல நூல்கள்:
மிர்ஸா குலாம் காதியானி இறக்கும் போது 50 க்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விட்டுச் சென்றார். அவைகளில் முக்கியமானவைகள்:
‘இஜாலத் அல்-அவ்ஹாம்’, ‘இஹ்ஜாஸ் அஹ்மதி’, ‘பராஹீன் அஹ்மதிய்யா’, ‘அன்வார் அல்-இஸ்லாம்’, ‘இஹ்ஜாஸ் அல்-மஸீஹ்’, ‘அல்-தப்லீக்’, ‘தஜாலிய்யாத் இலாஹிய்யாஹ்’
மிர்ஸா குலாம் அஹ்மதுவிற்குப் பிறகு ஆங்கிலேய அரசினால் காதியானிகளின் முதல் கலீபாகவாக முடிசூடப்பட்ட நூருத்தீன் என்பவர் ‘பஸ்ல் அல்-கிதாப்’ என்ற நூலை எழுதினார்.
காதியானியிஸத்தை முழுமையாக வடிவமைத்தவரும் ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் உளவாளியுமான லாகூரிய்யா காதியானிகளின் தலைவர் முஹம்மது அலி என்பவர் குர்ஆனுக்கு தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர் ‘ஹகீகத் அல்-இக்திலாஃப்’, ‘அல்-நுபுவ்வாஹ் ஃபில்-இஸ்லாம்’, ‘அல்-தீனல் இஸ்லாமி’ என்ற நூல்களையும் எழுதினார். மேலும் இவர் லாகூரிய்யா காதியானிகளின் ஊதுகுழலாக விளங்கிய பத்திரிக்கையின் பொறுப்பாளராகவும் இருந்துவந்தார்.
லாகூரிய்யா காதியானிகளின் மற்றொரு தலைவராக விளங்கிய கோஜா கமாலுதீன் என்பவர் ‘அல் மதால் அல்-அஃலா ஃபில் அன்பியா’ மற்றும் சில நூல்களை எழுதினார்.
மிர்ஸா குலாம் அஹ்மது காதியானியை லாகூரிய்யா காதியானிகள் இஸ்லாத்தை சீர்திருத்தவந்த ஒரு சீர்திருத்தவாதியாக கருதுகின்றனர். ஆயினும் இவர்களின் கொள்கைகளில் பெரும்பான்மையானவை காதியானிகளின் கொள்கைகளோடு ஒத்துப்போவதால் இதுவும் வழிகேடே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!
காதியானிகளின் முஃப்தியாக விளங்கிய முஹம்மது சாதிக் என்பவர் ‘காத்திம் அல்-நபிய்யீன்’ என்ற நூலை எழுதினார்.
பஷீர் அஹ்மத் இப்னு குலாம் என்பவர் ‘சிராத் அல்-மஹ்தி’ மற்றும் ‘கலிமத் அல்-பஸ்ல்’ என்ற நூல்களை எழுதினார்.
காதியானிகளின் இரண்டாவது கலீபாவாக விளங்கிய மஹ்மூத் அஹ்மத் இப்னு குலாம், ‘அன்வார் அல்-கிலாஃபா’, ‘துஹ்ஃபத் அல்-முலூக்’ மற்றும் ‘ஹகீகத் அல்-நுபுவ்வாஹ்’ ஆகிய நூல்களை எழுதினார்.
காதியானிகளின் வழிகெட்டக் கொள்கைகள் / நம்பிக்கைகள்:
1) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி முதலில் தன்னை ஒரு ‘தாயியாக – இஸ்லாமிய அழைப்பாளராக’ காட்டிக்கொண்டார். அவரைச் சுற்றி கூட்டம் சேர்ந்ததும் பிறகு தன்னை இஸ்லாமிய ஃபிக்ஹ் கலைகளை ஆய்வு செய்கின்ற ‘முஜ்தஹிதாக’ காட்டிக்கொண்டார். பின்னர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் ‘எதிர்பார்த்திருக்கும் மஹ்தி (அலை)’ தாமே என்று பறைசாற்றினார். அதன் பிறகு ‘தானும் ஒரு நபி’ என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘நபித்துவத்தை விட தன்னுடைய நபித்துவம் சிறந்தது’ என்றும் கூறலானார். காதியானிகளும் அதை நம்புகின்றனர்.
2) காதியானிகள், ‘நபித்துவம் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு முற்றுப் பெறவில்லை; நபித்துவம் தொடரும்’ என்று கூறுகின்றனர். இதற்கு விளக்கமாக குர்ஆனின் வசனத்திற்கு வேறு வியாக்கியானத்தை கொடுக்கின்றனர். அதாவது, ‘காத்தமுன்னபிய்யீன்’ என்பதற்கு முஸ்லிம்கள் கொடுக்கும் பொருளான ‘நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர்’ என்பது தவறாகும். அதன் உண்மையான அர்த்தம் ‘நபிமார்களில் சிறந்தவர்’ என்பதே சரியான பொருளாகும் என தம் மனம் போன போக்கில் உளறுகின்றனர்.
3) மிர்ஸா குலாம், தனக்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் 10,000 க்கும் அதிகமான வேதவசனங்கள் வஹியாக அருளப்பட்டதாகவும் ‘இதை நிராகரிப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்’ என்றும் கூறிவந்தார்.
4) மிர்ஸா குலாம் அஹ்மது காதியனியின் வசனங்களையும் அவருடைய போதனைகளையும் பின்பற்ற வேண்டுமேயல்லாது முஸ்லிம்கள் குர்ஆனையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை பின்பற்றக் கூடாது என;றும் காதியானிகள் கூறுகின்றனர்.
5) ‘காதியான் நகரம் மக்கா மற்றும் மதினாவைப் போன்று புனிதம் நிறைந்தது’ என்றும் ‘முஸ்லிம்கள் காதியான் நகருக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும்’ என்றும் மிர்ஸா குலாம் கூறிவந்தார். மேலும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற மக்ஸிதுல் அக்ஸா என்பது காதியான் நகரைக் குறிக்கிறது என்றார். இவைகள் ‘பராஹீன் அஹ்மதிய்யா’ மற்றும் ‘தப்லீக் ரிஸாலத்’ என்ற அவருடைய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
6) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானியின் மகனும் ஆண்மீக வாரிசுமான மிர்ஸா பஷீருத்தீன், தன்னுடைய ‘அஈனா-இ-சதகாத்’ என்னும் நூலில், ‘எதிர்பார்க்கப்பட்ட மேசியாவை (மிர்ஸா குலாம் அஹ்மதை) பற்றிக் கேள்விபட்டோ அல்லது கேள்விபடாமலோ அவரிடம் பைஅத் செய்யாத ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்” என்று கூறுகிறார். (பக்கம் 35)
7) காதியானிகள், முஸ்லிம்களின் அடிப்படையான அல்லாஹ், ரஸூல், குர்ஆன் தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய எல்லாவற்றினின்றும் முற்றிலும் மாறுபடுகின்றனர். இதை அவர்களே தங்களின் பத்திரிக்கையான அல்-.பதல் 30-ஜூலை-1931 பதிப்பில் கூறுகின்றனர்.
8) அவர்களின் அதே பத்திரிக்கையின் மூன்றாவது வால்யூமில், குர்ஆனில் அத்தியம் 61 வசனம் 6 -ல் கூறப்பட்டிருக்கின்ற ‘அஹ்மது’ என்ற இறைத்தூதர் ‘மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி’ குறிக்கின்றது என்கின்றனர்.. (இன்ஜார் அல்-கிலாஃபா, பக்கம் 21)
9) ஒருங்கினைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடாமல் இருப்பதற்காகவும், தனது எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாகவும் ‘ஜிஹாது’ என்ற ஒன்றே இல்லையென்று ஃபத்வா கொடுத்து அறியாமையில் இருந்த சில முஸ்லிம்களை வழிகெடுத்து அவர்களை ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வைத்தார் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி.
10) ‘ஈஸா நபி மரணித்துவிட்டார். யூதர்கள் அவரை கொன்று விட்டனர். கியாமத் நாளின் அடையாளமாக ஈஸா நபியை அல்லாஹ் உலகிற்கு அனுப்பமாடான்’ – இதுவும் காதியானிகளின் உளறல்கள்.
காதியானிகள் கொள்கை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான வழிகேடாகும்!
அல்லாஹ்வின் வேதமும் பல்வேறு நபிமொழிகளும் முஹம்மது நபி (ஸல்) அவர்களே நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் அவருக்குப் பின்னர் யாராலும் நபியாக வரமுடியாது என்றும் வலியுறுத்துவதோடல்லாமல், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு 30 பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை நபியென வாதிடுவர் என்றும் உணர்த்துகிறது. நபி (ஸல்) காலத்திலேயே தன்னை நபியென வாதிட்ட சிலர் தோன்றினர். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் கூட அத்தகைய போலியானவர்களுடன் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் போர் செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (33:40)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
“நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3 போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4 எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5 நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6 என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
“தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை“. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள், “என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! “(முபஸ்ஸராத்) நற்செய்திகள்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ” (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் “ஆகிப்” (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை“ என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் “ஆகிப்” என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “தமக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லாதவர்” என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.
‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை“ என்று சொன்னார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
மேற்கண்ட அல்-குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி என்பதை விளக்குகின்றது. தனக்குப் பிறகு வேறெந்த நபியும் இல்லையென்ற முஹம்மது (ஸல்) அவர்கள், தனக்குப் பிறகு பல பொய்யர்கள் தோன்றுவர் என்றும் அவர்களனைவரும் தம்மை நபியென்று வாதிடுவர் என்றும் எச்சரித்திருக்கின்றார்கள்.
தன்னை நபியென வாதிடும் பொய்யர்கள் தோன்றுவர் என்ற நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி
நபி என வாதிடுபவர்கள் அனைவரும் பொய்யர்கள் வழிகேடர்கள் என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் முஸ்லிம்கள் எந்த தடுமாற்றமுமின்றி இந்த காதியானிகளை புறக்கனித்து விடவேண்டும். முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபி என வாதிப்பவர்கள் அனைவரும் விஷமிகள் என்பதனாலேயே அவர்களுக்கெதிராக அபூபக்கர் (ரலி) அவர்களும் அவருக்குப் பின் வந்த கலீபாக்களும் நடவடிக்கை எடுத்தார்கள் என்ற பாடத்தை மறந்துவிடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த யூத, கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். 72 கூட்டங்கள் நரகில் (பிரவேசிப்பார்கள்) ஒரு கூட்டத்தினர் மட்டுமே சுவர்க்கத்தில் (பிரவேசிப்பார்கள்). அந்தக் கூட்டம்தான் (ஸுன்னத் வல்) ஜமாஅத்தாகும்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்
வேறு சிலரின் மற்றொரு ரிவாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘(ஒரே) ஒரு கூட்டத்தைத் தவிர அவர்கள் அனைவரும் நரகம் பிரவேசிப்பார்கள். நானும் எனது ஸஹாபாக்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அவ்வழியில் இருப்பவர்கள் தான் அந்த ஒரு கூட்டமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: திர்மிதி: (ஸஹீஹ்)
மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி என்றும் அவர்களுக்குப் பிறகு தன்னை நபி என்று கூறிக்கொண்டு வருபவர் பொய்யரே என்பதையும் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் எந்த மார்க்கத்தில் இருந்தார்களோ அந்த மார்க்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பதையும் நாம் தெள்ளத்தெளிவாக அறியலாம்.
காதியானிகள் நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களின் மார்க்கத்தை உதறி தள்ளிவிட்டு வேறொரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துவிட்டதால் அவர்களும் வழிகேட்டில் இருக்கும் கூட்டத்தினர்களைச் சேர்ந்தவர்களாவர் என்பதையும் அறியலாம்.
காதியானிகள் காஃபிர்களே – முஸ்லிம் உலமா கவுன்ஸின் ஏகோபித்த முடிவுகள்.
ஹிஜ்ரி 1394 (ஏப்ரல் 1974) ஆம் ஆண்டு உலகின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்குபெற்ற மக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய அகில உலக முஸ்லிம்களின் மாநாட்டில், காதியானிகளின் கொள்கைகளை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆய்வுசெய்த பிறகு, ‘காதியானிகள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்கள்’ என்றும் ‘முஸ்லிம்கள் அவர்களின் தீய கொள்கைகளை எதிர்க்க வேண்டும்; அவர்களுக்கு எவ்வகையிலும் உதவி ஒத்தாசைகள் புரியக் கூடாது’ என்றும் ‘காதியானிகள் இறந்தால் முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களில் அவர்களை புதைக்கக்கூடாது’ என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
முஸ்லிம்களுக்கான எச்சரிக்கைகள்:
காதியானிகளின் கொள்கைகள் முஸ்லிம்களின் ஈமானைப் பறித்து அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுவதால் காதியானிகளை மேற்கத்திய உலகமும் குறிப்பாக பிரிட்டனும் முஸ்லிம்களின் பரம எதிரியான யூதர்களும் நன்றாக ஆதரிக்கின்றனர். அதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அரசு பதவிகளும் கொடுக்கப்படுகின்றன. அவர்களில் அதிகமானோர் இங்கிலாந்திலும் மற்றும் சிலர் இஸ்ரேலிலும் வசிக்கின்றனர்.
இஸ்ரேலிய அரசு காதியானிகளுக்காகவும் அவர்களின் கொள்கைகள் பரவுவதற்காகவும் மிகப்பெரும் அளவில் உதவிகள் புரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் சிறந்த கல்வியாளர்களாகவும் விவாதத் திறமையுடையவர்களாகவும் இருப்பதால் போதிய கல்வியறிவில்லாதவர்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுகின்றனர். ஏன் ஏகத்துவச் சிந்தனையாளர்களில் சிலர் கூட அவர்களின் வாதத்திறமையிலும் அவர்கள் விரித்த மாய வலையிலும் விழுந்துவிடுகின்றனர்.
எனவே தமிழ் பேசும் முஸ்லிம்கள் காதியானிகளின் வழிகெட்டக் கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதோடல்லாமல் சக முஸ்லிம்களுக்கும் அவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்யவேண்டும். அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர்வழி காட்டி அதில் நிலைத்திருக்கச் செய்வானாகவும்.
ஞாயிறு, நவம்பர் 06, 2022
வியாழன், நவம்பர் 03, 2022
இஸ்லாம் கூறும் மருத்துவம் ,
இஸ்லாம் கூறும் மருத்துவம்
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ (அல்குர்ஆன் 62 : 2 )
இன்றைய நவீன மருத்துவம் கூறும் செய்தி;ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல உடல்,உள்ளம்,சிந்தனை, செயல்,பேச்சு,இயல்பு அனைத்தும் சரியாக அமைவதாகும்.சுருக்கமாக வாழ்வியல் முறை சீராக இருப்பதே ஆரோக்கியமாகும்.வாழ்வியல் முறை சீர்கெடும் போதும்,இயற்கை சீதோஷ்ணம் சமநிலை மாறுப்படும் போதும் மனிதனின் ஆராக்கியம் பாதிக்கப்பட்டு நோய்வாய் படுகிறான்.
இன்றைய நவீன மருத்துவத்தின் முன்னோடி இஸ்லாம்,இன்று மருத்துவ உலகம் கூறுவதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுப்படுத்திவிட்டது.
இஸ்லாம் மனிதனுக்கு வழிகாட்டும் வாழ்வென்பது இறைப்பொருத்தத்தை பெற்றுத்தருவதோடு இவ்வுலகில் ஆரோக்கியமாக வாழ வழிவகைச்செய்கிறது.அதனால் தான் இஸ்லாத்தை "இயற்கை மார்க்கம்"என்பர்.மனிதன் இயற்கையோடு ஒன்றி ஆரோக்கியமாக வாழ அழகிய வழிகட்டுகிறது.
ஆரோக்கியமாக வாழ இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை காண்போம்.
ஆரோக்கியத்தின் அடிப்படை தூய்மை.
இஸ்லாம் தூய்மையை வலியுறுத்தும் மார்க்காம்.அகத்தூய்மை எவ்வளவு முக்கியமோ அதுப்போல புறத்தூய்மையும் மிக முக்கியமாகும்.
தூய்மையை வாழ்வின் நோக்கங்களில் ஒன்று என்கிறது குர்ஆன்...
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
(அல்குர்ஆன் : 87:14)
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.(அல்குர்ஆன் : 87:15)
بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.(அல்குர்ஆன் : 87:16)
وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.(அல்குர்ஆன் : 87:17)
நபிகளாரின் முக்கிய பணிகளில் ஒன்று தூய்மை...
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.(அல்குர்ஆன் : 62:2)
மேற்கூறிய வசனங்களில் தூய்மை என்பதன் நோக்கம்,அகம் புறம் இரண்டின் தூய்மை அவசியமாகும். தனிமனித வாழ்வு,கூட்டுவாழ்கை அனைத்திலும் சொல்,செயல்,சிந்தனை அனைத்திலும் அகம் புறம் இரண்டும் தூய்மையாக இருந்தால் தான் அங்கீகரிக்கப்படும்.
காரணம் தூய்மை,ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்,வெளிரங்கமான செயல்களில் தூய்மையில்லையெனில் அது ஆரோக்கியத்தை கெடுத்து நோயை உண்டாக்கும்.
வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின் பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஷரிஅத் சட்டங்களில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு விதிவிலக்களிக்கப்படும்.(எ.க)நோன்பு நோயாளியின் மீது கடமையில்லை ஆனால் அவர் குணமானால் நோன்பை களாச்செய்யவேண்டும்.
இப்படி பல்வேறு வணக்கங்களுக்கு ஆரோக்கியம் அவசியமாகும்.அதனால் ஆரோக்கியத்தை கெடுக்கும் அசுதத்தை விட்டும் நீங்க தூய்மை அவசியமென்கிறது இஸ்லாம்.
எல்லா நோய்க்கும் மருந்துண்டு.
நாயகம் ﷺஅவர்கள் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பல நபிமொழிகளில் வலியுறுத்தியுள்ளார்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக பலமருத்துவ முறைகளையு காட்டிதந்திருக்கிறார்கள்.நபிமொழிகளில் طبُّ النَّبِي "நபிவழி மருத்துவம்" என்பதற்கு தனிப்பிரிவே ஹதிஸ் கிதாபுகளில் உள்ளன.
மனிதன் நோய்வாய்ப்டும் போது அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும்,தகுந்த மருத்துவரை அனுகுமாறும் இஸ்லாம் அறிவுத்துகின்றது.
حديث أبي هريرة t: أن النبي r قال: "إن الله لم ينـزل داءً إلا أنزل له شفاء" رواه البخاري
அல்லாஹ் அதற்கான நிவாரணியை இறக்காமல் எந்த நோயையும் இறக்குவதில்லை.
حديث جابر t قال: قال رسول الله r : "لكل داء دواء، فإذا أصيب دواء الداء برئ بإذن الله عزّ وجل "، رواه مسلم([2]).
ஒவ்வோரு நோய்க்கும் மருந்துண்டு.நோயின் மருந்தை(மருத்துவதை)பெற்றுக்கொண்டால்,அல்லாஹ்வின் நாட்டப்படி நோய்குணமாகும்.
எல்லா நோய்க்கும் மருந்துண்டு என்றால் நாமே நமக்கு சுயமாக மருந்தை எடுத்துக்கொள்வதல்ல,அத்துறைச்சார்ந்த மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொள்வதாகும் இதனை இன்னொரு ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது..
எவரொருவர் தனக்கு அனுபவமில்லாத நோய்க்கு யாருக்காவது சிகிச்சையளித்து,அதனால் (அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் )அவரின் பாதிப்புக்கு (சிகிச்சையளித்த)இவரே பொருப்புதாரியாகும்.(سنن ابن ماجہ، کتاب الطب)
நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று கூறியது போல உடலில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நல்வாழ்வினை வாழ முடியும் அதிகமான வணக்க வழிபாடுகள் செய்திட முடியும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்....
1. ஆரோக்கியம் 2. ஓய்வு
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி-6412
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً)).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 5678)
மூன்று மருந்துகள்.
قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- أَوْ يَكُونُ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ)).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை,என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 5683)
தேன் எனும் அருமருந்து.
மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் தேன். ‘வயிற்றின் நண்பன்’ என தேனைக் கூறுவது உண்டு. தேன், உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டிய பொருள் இது. தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.
தேன் ஆற்றல் நிறைந்தது. தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் தேனில் 304 கலோரி அடங்கியிருக்கிறது.
குர்ஆன் தேனை ஷிஃபா அருமருந்து என்கிறது.தேனின் சிறப்பைக்கூறும் பல ஹதீஸ்கள் உள்ளன.
ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(அல்குர்ஆன் : 16:69)
தேனின் பயன்கள்.
தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.ஊட்டச்சத்து.சுவாசப் பிரச்சனைகள்.நோயெதிர்ப்பு சக்தி.எடை குறைவு.உடல் சோர்வு.முகப்பரு பிரச்சினை.சரும சுருக்கம்.காயங்களை குணமாக்க.சொறி, சிரங்கு, படை.முதுமை தோற்றத்தை தடுக்கும்.தசைப் பிடிப்பு.கொலஸ்ட்ரால் போன்ற என்னற்ற பிரச்சினைகளை நீக்குகிறது.ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.
குர்ஆன் பொய்யாகாது.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்கள்:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார். ( புகாரி 5684)
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ءَؔاَعْجَمِىٌّ وَّعَرَبِىٌّ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَشِفَآءٌ وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِىْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًى اُولٰٓٮِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِيْدٍ
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). (அல்குர்ஆன் : 41:44)
பால் எனும் அமிர்தம்.
பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.
நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.
நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது.
பால் குறித்து குர்ஆன்...
وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.(அல்குர்ஆன் : 16:66)
கருஞ்சீரகம்.
காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் :
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 5687)
இரவு தூக்கம்.
ஒரு காலத்தில் இருட்டியதும் விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் உறங்கி விடுவார்கள். அதனால் அதிமான மனிதர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் இருந்தனர்.
எப்பொழுது மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றிலிருந்து மனிதன் தூக்கத்தை இழந்தான்.இரவுகளில் வேலைக்கு செல்வது அல்லது இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது நண்பர்களோடு அரட்டை அடிப்பது இவைகளினால் நோய்கள் அதிகமாகி விட்டது ஆனால்
'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' (ஸஹீஹ் புகாரி 568)
பிஸ்மில்லாஹ் கூறுவது.
ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உண்ணு! உனது வலது கரத்தினால் சாப்பிடு! (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு” என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். (நுல் : புஹாரி)
இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது.
1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
2. வலது கரத்தினால் சாப்பிட வேண்டும். 3. தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது.
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள். (நூல் : நஸாயீ)
விஞ்ஞானம் : மனிதன் கரங்களை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் (Invisible Rays) ஒன்று சேர்ந்திருக்கும். கைகளை கழுகாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது.
உணவே மருந்து.
மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன.
நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற இந்த பழமொழிக்கேற்ப
குர்ஆனில்...
وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:31)
இங்கு "இஸ்ராஃப்" என்பதன் பொருள் வெறுமனே உணவை வீணடித்தல் மட்டும் அல்ல,அளவுக்கதிகமாக உணவுஉட்கொள்வதும்,ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக்கொள்வதையும் குறிக்கும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஆரோக்கியத்தை தந்து அவன் கருணையால் வாழச் செய்வானாக! ஆமின்...
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...