உத்தமநபி(ஸல்) அவர்கள்மீது ஒட்டக்குடலை போட்டவர்களுக்கு ஏற்பட்டஅழிவு..!*
ஒருதடவை
*அண்ணல்நபி ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்கள்கஃபாவில்
தொழுதுகொண்டு
இருந்தார்கள்."
அப்போது
"அபூ ஜஹ்லும்
அவன் நண்பர்களும்
அங்குஉட்கார்ந்து
இருந்தனர்."
"முஹம்மத், ஸஜ்தா
செய்யும் போது
ஒட்டகத்தின்குடலை
அவர் முதுகின்மீது
போடுவதுயார்?"என
பேசிக்கொண்டனர்.
"உக்பாபின் அபூமுயீத்
என்ற கொடியவன்
எழுந்து சென்று
ஒட்டகத்தின் அசுத்த
குடலைஎடுத்து வந்து.."
"நபியவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது அவர்கள்முதுகில்
போட்டான்.!"
இதனால்
*"அண்ணல்நபி ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்கள் தலையை
தூக்க முடியாமல் தவித்தார்கள்."
"இக்காட்சியைப்
பார்த்து அபூஜஹ்லும்
அவன் கூட்டாளிகளும் ஒருவர்மீது ஒருவர்
விழுந்து விழுந்து
சிரித்துமகிழ்ந்தனர்."
"சிறுமியாகஇருந்த
அன்னை பாத்திமா
(ரலி) அவர்கள்
அதை அப்புறப்
படுத்தியபின்புதான்
நபியவர்கள்தலையை
தூக்கினார்கள்."
பிறகு
*அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
"யா அல்லாஹ்!
குறைஷிகளை
தண்டிப்பாயாக!
என மூன்றுதடவை
சொன்னார்கள்."
"மக்காவில்
கேட்கப்படும்துஆ கபூலாகிவிடுமே!"
எனகுறைஷிகள் பயந்தனர்.
எனவே
"அபூஜஹ்ல்
உத்பா பின் ரபீஆ
ஷைபா பின் ரபீஆ
வலீத் பின் உத்பா
உமய்யா பின் கலஃப்
உக்பா பின் அபூமுஜீத் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு இவர்களை தண்டிப்பாயாக!"என
துஆச்செய்தார்கள்.
இந்த ஹதீஸை
அறிவிக்கின்ற
*அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத்*
(ரலி) அவர்கள் சொல்கிறார்கள்:
"அல்லாஹ்வின்
மீது சத்தியமாக!
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹிவஸல்லம்
எவர்களின்பெயர்களை
குறிப்பிட்டுதுஆச்
செய்தார்களோ அக்கொடியவர்கள்
எல்லோரும்.."
"பத்ருப்போரில் கொல்லப்பட்டு
*கலீபுபத்ரு*
என்ற قليب بدر
பாழடைந்தகிணற்றில்
வீசப்பட்டு(உடல்கள்
அழுகி)கிடப்பததை
நான் பார்த்தேன்." என்கிறார்கள்.
*நூல்:-* புகாரி-240
அண்ணல்நபி (ஸல்) அவர்களை இழிவாகப்பேசினால் அல்லாஹ் இவ்வுலகிலேயே இழிவு படுத்துவான்..!*
மக்கா நகரில்
வலீதுப்னு முகீரா
என்ற கொடியவன்
வாழ்ந்தான்.
"ஒருதடவை
*அண்ணல் நபி*
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களைபார்த்து
பைத்தியக்காரர்
எனக் கூறிவிட்டான்.!"
(நவூதுபில்லாஹ்)
உடனே
"அல்லாஹு தஆலா
கோபம் கொண்டு
அவனைப் பற்றி
கடுமையான
வார்த்தைகளால்
குர்ஆன் வசனத்தை இறக்கி விட்டான்."
*அண்ணல்நபி*
(ஸல்)அவர்களை
ஒருதடவைதான்
அவன் திட்டினான்.
ஆனால்
"அல்லாஹுதஆலா
அவனை பலமுறைத்
திட்டி ஆயத்தை இறக்கினான்.
கியாமத்நாள் வரை
அவன்திட்டப்பட்டுக்
கொண்டேஇருப்பான்!"
நபியே! உமது இறைவன் அருளால்
நீங்கள் பைத்தியக்
காரர்அல்லர்! (68:2)
பைத்தியக்காரர்
யார் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
அவர்களும் கண்டுக் கொள்வார்கள்
(68:5-6)
அவன் பொய்சத்தியம்
செய்யும் அற்பன்.
(68:10)
அவன் புறம் பேசி
குறைக் கூறி
கோள் சொல்லி
திரிபவன்.
(68:11)
அவன் நன்மையான செயலை செய்யவிடாமல்
தடுக்கும்
பெரும்பாவி.
(68:12)
அவன் கடின
சுபாவமுள்ளவன்
இழிவான வழியில்
பிறந்தவன்.
(68:13)
இந்தத் திருக்குர்ஆன்
வசனங்கள் இறங்கியதும்...
"வலீதுப்னு முகீரா
வேகமாக
வீட்டுக்குச் சென்று
அவனுடைய தாயின் கழுத்தில் வாளை
வைத்தான்.!"
"என்னைப் பற்றி
முஹம்மத்
சொன்னதெல்லாம்
உண்மைதான் நான் அயோக்கியன்தான்!"
ஆனால்
"முஹம்மத் என்னை
விபச்சாரத்தில்
பிறந்தவன் என
சொல்லி விட்டார்
அவர் பொய்
சொல்லமாட்டார்."
"உண்மையைசொல்
நான் விபச்சாரத்தில்
பிறந்தவனா?
என்தந்தை யார்?
முகீரா இல்லையா?"
எனக் கேட்டான்.
"ஆமாம்..! நான்
ஆட்டு இடையனை வைத்திருந்தேன்
நீ அவனுக்கு
பிறந்தவன் தான்.
என்ற உண்மையை சொன்னதும்
துடித்துப்போய்
விட்டான்.!"
மேலும்
"அவன் மூக்கு
அழகாக இருக்கும்!"
"அவன் மூக்கின் மீது
மிக விரைவில்
ஓர் அடையாளம்
விடுவோம்! (68:16)
என்றும்அல்லாஹ்
ஆயத்இறக்கினான்.
"பத்ருப் போரில்
அவன் மூக்கில்
வாள் முனைப்பட்டு
பெரிய காயம்
ஏற்பட்டதால்
அவன் முகமும்
விகாரமாகிவிட்டது.!"
இதனால்
"வலீதுப்னு முகீரா
மக்களுக்கு முன்
வெளியில் வர வெட்கப்பட்டு
மனம் நொந்து
இறந்து போனான்.!"
*நூல்:-*
இப்னுகஸீர்
குர்துபீ,மஆரிஃப்,
ஷஃபீவுல் அன்வார்.
பூமான்நபி(ஸல்)!அவர்கள்மனதை வேதனைப்படுத்திய கயவனுக்கு... அல்லாஹ்கொடுத்த கொடூரதண்டனை..!*
அகிலத்தின்அருள்
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு நான்கு
பெண் குழந்தைகள்.
ஜைனப்,உம்முகுல்சும்
ருகையா, ஃபாத்திமா
ரலியல்லாஹு அன்ஹும்.ஆவார்கள்.
"கொடியவன்
அபூலஹபின்மூத்த
மகன் உத்பாவுக்கு
உம்மு குல்சும்(ரலி)
அவர்களையும்,
இரண்டாம் மகன்
உதைபாவுக்கு
ருகையா (ரலி)
அவர்களையும்
திருமணம் முடித்து
கொடுக்கபட்டிருந்தது!"
"ஒருதடவை
*அண்ணல்நபி(ஸல்)* அவர்களைபார்த்து
தப்பன் லக
யா முஹம்மத்
நீர்நாசமாகபோக
என அபூலஹப்
மண்ணைஎரிந்தான்.!"
(நவூதுபில்லாஹ்)
உடனே
"அல்லாஹுதஆலா
தப்பத்யதாஅபீலஹப்
அபூலஹபுடைய
இரண்டு கைகளும்
நாசமாகட்டும்"என
அபூலஹபை சபித்து
ஆயத் இறக்கினான்.
இதனால்"அபூலஹப்
கொதித்துப்போய்
தன்னுடைய உத்பா
உதைபா இரண்டு
மகன்களையும்
அழைத்து.."
"உங்கள்மனைவியை
உடனே தலாக் விட்டுவிடுங்கள்..!"
என சொன்னான்.
*"அண்ணால்நபி*
(ஸல்) அவர்களிடம்
உங்கள் மகளை தலாக்விடுகிறேன்
எனஉத்பாசொல்லிக்
கொண்டிருக்கும்போது"
"உதைபாவும்
ருகையா (ரலி)
அவர்களை
முரட்டுத்தனமாக
இழுத்து வந்து..
*"அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹி வஸல்லம் அவர்களைத்தரக்
குறைவாகப்பேசிய
துடன்,அவர்களின்
முபாரக்கான முகத்தில்
உமிழ்ந்து விட்டான்..!"
இதனால்
*"அண்ணல்நபி ஸல்லல்லாஹு*
அலைஹிவஸல்லம்
அவர்கள் மன
வேதனையுடன்
"யா அல்லாஹ்!
இவன் மீது உன் விலங்குகளில்
ஓன்றைச்சாட்டி
விடுவாயாக!" என
துஆக் கேட்டார்கள்.
"நபியவர்கள்
உதைபா விஷயத்தில்
துஆ கேட்டதைக்
கேள்விப்பட்டதும்
அபூலஹப் அதிர்ச்சி
ஆகிவிட்டான்..!"
"முஹம்மதின்
துஆவிலிருந்து நீ
தப்பவே முடியாது
என உதைபாவிடம்
கவலையுடன்
சொன்னான்..!"
சில நாட்களுக்குபின்
"அபூலஹபும்
உதைபாவும்
பெரும் பெரும் வணிகர்களுடன்
வியாபாரத்திற்காக
ஷாம் நகருக்கு
சென்றார்கள்."
"போகும் வழியில்
'ஜர்கா' என்ற
காட்டுப் பகுதியில்
கூடாரமிட்டு இரவு
தங்கினார்கள்."
"எடுத்துச் சென்ற
எல்லாப் பொருட்
களையும் நடுவில்
குவித்து வைத்து
அதன்மேல்
உதைபாவை அபூலஹப்தூங்க
வைத்தான்..!"
"உதைபாவைச்
சுற்றி கூடாரமிட்டு
மற்றவர்களை
அதில் தூங்கச்
சொன்னான்.!"
"கூடாரங்களை சுற்றி நூற்றுக்கணக்கான
ஒட்டகங்களை
வளையம் போல்
பாதுகாப்புக்காகசுற்றி
நிற்கவைத்தான்!"
"நள்ளிரவு நேரம்
காட்டிலிருந்து
திடீரென்று ஒரு
சிங்கம்வெளிவந்தது
ஒவ்வொரு நபராக
மோப்பம் பிடித்தது.!"
"கடைசியாக
பொருள்குவியல்மேல்
உறங்கிக் கொண்டு
இருந்த உதைபாமீது
பாய்ந்தது..!"
"அவன் சப்தம் வெளிவராதபடி
குரல்வளையைக்
கடித்து குதறியது
துடிதுடித்து
இறந்து போனான்..!"
*நூல்:-*
உஸ்துல் காபா
இப்னு ஹிஷாம்
ஜாமிவுல் ஃபவாயித்
அண்ணல்நபி (ஸல்) அவர்களைதிட்டிய அபூலஹபுக்கு அல்லாஹ்கொடுத்த தண்டனை..!
திருமக்காவின்
மாபெரும் குறைஷித் தலைவராக இருந்த
*அப்துல்முத்தலிப்*
அவர்களின் மகன்
களில் ஒருவன்தான்
அபூலஹப் ஆவான்.
*"அண்ணல் நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை
*அப்துல்லாஹ்* அவர்களின்..
"உடன்பிறந்த
சகோதரனாக
இருந்தும்...
*பெருமானார்*
(ஸல்)அவர்களை
கடுமையாக எதிர்த்துவந்தான்.!"
இதனால்
"அல்லாஹு தஆலா
அவன் இயற்பெயர்
அப்துல் உஸ்ஸா
என்பதைசொல்லாமல்
'நரக நெருப்புப்
பிழம்பு' எனும்
பொருள் கொண்ட
அபூலஹப் என்றே
திருமறையில்
கூறுகிறான்..!"
ஒருதடவை
*அண்ணல் நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹி வஸல்லம் அவர்கள்
"கஃபத்துல்லாஹுக்கு
அருகிலுள்ள
ஸஃபா மலைமீது
ஏறிநின்று மக்களை
அழைத்தார்கள்."
"நான் சொல்வதை
நீங்கள்நம்பிக்கை கொள்ளவில்லை
என்றால்உங்களுக்கு
கடும்வேதனைவரும்.!"
என சொன்னதும்
உடனே
அக்கூட்டத்தில்
நின்ற அபூலஹப்
ஆத்திரத்துடன்
சொன்னான்:
"முஹம்மதே!
நீ நிரந்தரமாக
நாசமடைவாய்'
(நவூதுபில்லாஹ்)
இதற்காஎங்களை
அழைத்தாய்..?"
என்றான்.
உடனே
அல்லாஹு தஆலா
*தப்பத்யதா அபீலஹப் என்ற*
அத்தியாயத்தை
இறக்கினான்.
"தப்பத்யதாஅபீலஹப்
*அபூலஹபுடைய*
*இரண்டுகைகளும்*
நாசமாகட்டும்.!"
என அல்லாஹ் ஏன்
சொன்னான்என்றால்
"கொடியவன்
அபூலஹப்
அண்ணலாரை
கடுமையாக
சாபமிட்டதோடு..
இரண்டு கைகளால்
கற்களை அள்ளி
*அண்ணல்நபி*
(ஸல்)அவர்கள்மீது
எரிந்தான்,இதனால்
அவர்களின் குதிங்காலில்அடிபட்டு
இரத்தம்வழிந்தது..!"
பின்பு
"அல்லாஹுதஆலா
அபூலஹபுக்கு
விநோதமான
பெரியம்மைநோயை
கொடுத்தான்.
அதனால்
அபூலஹபின்
உடல் கோரமாகக்
காட்சியளித்தது..!
அவனைப் பார்த்து மக்கள் பயந்தனர்.!!"
"அவனுக்கு வந்த
நோய் நமக்கும்
ஒட்டிக் கொள்ளுமோ
என பயந்து
அவனைதனிவீட்டில்
அடைத்தனர்.அவன்
அங்கேயேஇறந்து
போனான்..!"
"அபூலஹப்இறந்து
3 நாட்களாகியும்
ஊர்மக்களோ,அவன்
குடும்பத்தினரோ
அவனைஅடக்கம்
செய்யவில்லை
இதனால்அபூலஹபின்
உடல்அழுகி
துர்வாடைவீசியது..!"
"மக்கள்எல்லோரும்
தூரத்தில் நின்று
அபூலஹப் உடலின்
மீது கற்களை அள்ளி
அள்ளி வீசினார்கள்
அக் கற்குவியல்களே
அவனுக்கு மண்ணரை
ஆகிவிட்டது..!"
*"அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹி வஸல்லம்
அவர்கள் மீது
அபூலஹப்ஒருதடவை
கற்களைவீசினான்.."
"அல்லாஹுதஆலா
ஊர் மக்கள்
எல்லோரையும்
கற்களைவீசவைத்து
கேவலப்படுத்தி
விட்டான்..!"
*நூல்:-*
புகாரி-702, மஆலிம்
இப்னுகஸீர்
அல்அன்வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக