♦️பெயர் :- அய்யூப் (யோபு)
♦️தோற்றம் :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயரமாகவும், கருநிறக் கண்களும் சுருள்முடியும் பெற்றிருந்தார்கள். இவர்களின் தலை பெரியதாகவும், கழுத்து குட்டையாகவும், கை கால்கள் நீண்டவையாகவும் இருந்தன. இவர்கள் பழுப்பு நிறமுடையவர்களாக இருந்தார்கள்.
♦️பிறப்பு :- கிமு 1540
♦️தந்தை பெயர் :- ஆமூஸ்
♦️மனைவியர் :- ரஹ்மா
♦️பிள்ளைகள் :- துல்கிப்லி, ஹுமைல்
♦️தொழில் :- ஆடு மேய்த்தல், துணி வியாபாரம்
♦️வசிப்பிடம் :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரியாவிலுள்ள மித்னா எனும் நகரில் வாழ்ந்தார்கள்.
♦️செல்வம் :- அய்யூப் அலைஹிஸ்ஸலாம் செல்வந்தராக இருந்தார்கள். அவர்களிடம் சுமார் 1000 பெண் குதிரைகளும், 1000 ஆண் குதிரைகளும், இரண்டாயிரம் கோவேறு கழுதைகளும், 700 ஒட்டகங்களும், 1000 காளைகளும், 1000 பசுக்களும், ஆயிரம் ஆடுகளும் வைத்திருந்தனர்.
♦️நோய் :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷைத்தானின் தீங்கின் மூலம் நோய் ஏற்பட்டது. எந்த அளவுக்கு என்றால்! இவர்களின் உடல் மீது கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. வேதனை அதிகமான போது அல்லாஹ்வின் கையேந்திய போது நோய் நீங்கியது.
♦️பிரச்சாரம் :- ஏகத்துவ கலிமாவை மக்களுக்குப் போதித்தனர். ரோம் நாடு சென்று அங்கும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தனர். சுமார் 27 வருடங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர்.
♦️ஆயுட்காலம் :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 140 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
♦️மரணம் :- கிமு 1420
♦️கப்ரு :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஓமான் நாட்டிலுள்ள ஸல்ஸலா என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஈராக், லெபனான், யமன், ஓமான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
♦️குர்ஆன் :- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 4 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இறைவணக்கத்தை மக்களுக்குப் போதித்தனர். ரூம் நாடு சென்று அங்கும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தனர். சுமார் 27 வருடங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். தம் மகனார் ஹுமைலை உலகில் தம் பிரதிநிதியாக நியமித்து விட்டு காலமாயினர். இவர்களின் அடக்கவிடம் திமிஷ்கின் அண்மையில் உள்ள நாவா என்ற இடத்தில் இருக்கிறது.
நோய் குணமடைய நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
ﺃَﻧِّﻲ ﻣَﺴَّﻨِﻲَ ﺍﻟﻀُّﺮُّ ﻭَﺃَﻧﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
‘நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.’ (அல்குர்ஆன் 21: 83)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக