நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், அக்டோபர் 25, 2023

பைத்துல் முகத்தஸ்,

அசல் யுத்தம் என்ன

*முஃப்தி முஹம்மது தகி உஸ்மானி அவர்களின் முகநூல் பதிவு !*

*பைத்துல் முகத்தஸ் மூன்று மதத்தவர்களின் புண்ணிய தளமாகும்.*

1. முஸ்லிம்களுக்கு இரண்டாம் கிப்லா

2. கிறிஸ்தவர்களுக்கு ஈசா (அலை) பிறந்த இடம்.

3. யூதர்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் உருவாக்கிய தளம்.

இப்போது, இப்ராஹீம் (அலை) அவர்களில் இருந்து நாம் விஷயத்தை  துவங்குவோம்.

அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் ஒன்று இஸ்மாயில் (அலை) மற்றொன்று இஸ்ஹாக் (அலை)

இஸ்ஹாக் (அலை) அவர்களுடைய மகன் யாகூப் (அலை).

இங்கிருந்துதான் இஸ்ராயீல்கள் உடைய கதை ஆரம்பம் ஆகிறது.

இஸ்ராயில் என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருளாகும். 

இந்தப் பெயர் ஹஸ்ரத் யாகூப் (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

ஹஜ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் மிஸ்ருடைய அரசர் ஆன பொழுது அவர்களுக்கு யாகூப் (அலை) அவர்களுடைய அனைத்து வம்சாவளியினரையும் மிஸ்ருக்கு அழைக்கும் படி உத்தரவிடப்பட்டது. 

மேலும் மிஸ்ரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. 

மேலும், யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய  சந்ததியினருக்கு, இந்த பூமியில் நிச்சயமாக உங்களுக்கு பரகத் இருக்கின்றது என்பதாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 சகோதரர்கள் இருந்தார்கள். 

ஆகையினால், அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு 12 நீரோடைகளை  ஓடச் செய்திருந்தான். 

மேலும் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சூட்டப்பட்ட பெயரான இஸ்ராயில் என்பதே அந்த பகுதிக்கும் பெயராக ஆகிவிட்டது.

அதற்கு தற்போது ஜெருசலம் என்றும் சொல்லப்படுகிறது.

யாகூப் (அலை) அவர்கள் வம்சத்தில் சற்று ஏறத்தாழ 70 ஆயிரம் நபிமார்கள் வருகை புரிந்தார்கள்.

ஹஜ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சகோதரர் யஹீதா உடைய வாரிசுகளில் வந்த அனைத்து பனி இஸ்ராயீல்களும் யஹூதிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

காலம் கடந்து சென்றது.

மூஸா (அலை) அவர்களுடைய காலமும் வந்தது. 

பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களுக்கு மிஸ்ரில் நெருக்கடி தந்தபோது, இஸ்ரவேலர்களுடன் மிஸ்ரில் இருந்து புறப்பட நேர்ந்தது.

இக்காலகட்டத்தில் பனிஇஸ்ராயில்களின் மீது அல்லாஹுத்தஆலா அவனது ஏராளமான கருணையும் அருளையும்  பொழிந்தான். 

அதில் ஒன்றுதான் அவர்களுக்கு இறக்கப்பட்ட மன் வ சல்வா ஆகும். 12 நீர் ஓடைகளை ஓடச் செய்ததும் அல்லாஹ்வின் அருளினாலேயே ஆகும். 

அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஒரு குறிப்பிட்ட நாளில் மீன் பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் அளவுக்கு அதிகமாக அருள் புரிந்திருந்தான். 

இது குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் குர்ஆனில் காலை மாட்டை பற்றிய சம்பவமும் கூறப்பட்டுள்ளது. 

அதன் காலடி மண்ணை எடுத்து இறந்தவர்களை கூட அவர்கள் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார்கள். 

அந்த மண்ணைக் கொண்டு, கொலை செய்யப்பட்ட ஒருவன் அல்லாஹ்வுடைய உத்தரவைக் கொண்டு உயிர்த்து எழுந்து தன்னை கொலை செய்தவனை அடையாளம் காட்டினான். 

அந்த மாட்டினுடைய அடையாளங்களை அல்லாஹுத்தஆலா குர்ஆனிலும் கூட குறிப்பிட்டு இருக்கின்றான்.

அது ஒரு சிகப்பு நிற காளை என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

இன்றும் யஹூதிகளிடம் அந்த நிறம் உள்ள காளைக்கு அதிக மதிப்பு இருக்கிறது. 

ஹஜ்ரத் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் தீகர் நபியாக வந்தார்கள்.

அந்த சமயத்தில் மூசா (அலை) அவர்களுடைய காலத்தில் எஞ்சி இருந்த தவ்ராத் வேதத்தின் சில பகுதிகளையும், மன் வ சல்வாவின் மூலமாக இறக்கி வைக்கப்பட்ட உணவின் சிறு பகுதியும், ஒரு சந்தூக்கில் வைத்து அவர்களால் பாதுகாக்கபட்டது.

அந்த பெட்டி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி இருந்த ஒரு விசேஷமான பெட்டியாகும். 

அது அவர்களுக்குப் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக பல நபிமார்களிடம் இருந்தது. 

அது குர்ஆனில் 'தாபூத் சகீனா' என்ற பெயர் கொண்டு அது அழைக்கபடுகிறது.

அது யஹூதிகளுக்கு அவர்களுடைய உயிரை விட மதிப்பிற்குரியதாக கருதப்படுகிறது.

ஹஜ்ரத் தாவூத் (அலை) அவர்கள் எப்போது ஜாலூத்தை வீழ்த்தி அந்த பெட்டியை கைப்பற்றினார்களோ, அப்போது பனி இஸ்ராயீல்கள் அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டார்கள்.

மேலும், தாவூத் (அலை) அவர்கள் அந்த பெட்டியை பாதுகாக்க ஒரு பிரத்தியேகமான கட்டிடத்தை (ஹைகல்) கட்ட துவங்கினார்கள். 

அது அவர்களுடைய வாழ்வில் முழுமை அடையவில்லை.

அதற்குப் பின் அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களின் உதவியுடன் அந்த கட்டிடத்தை கட்டி முடித்தார்கள்.

அந்த பணியின் இடையிலேயே அவர்கள் மரணமடைந்தும் விட்டார்கள்.

ஆகையினால் அதற்கு 'ஹைகலே சுலைமானி' என்றும் சொல்லப்படுகிறது.

பின்பு, அஜான் பாபில் உடைய பாதுஷா 
பஹத் நஸர் இஸ்ராயீல் மீது தாக்குதல் நடத்தி, ஹைகலே சுலைமானியையும் இடித்து விட்டார். மேலும் தாபூத் ஸகீனா வையும் தன்னுடன் எடுத்து சென்று விட்டார்.

சைப்ரஸ் - தி - கிரேட் மீண்டும் இந்த நகரத்தை கைப்பற்றி, யஹூதிகளை அங்கு குடியேற்றினார். தாபூத் ஸகீனாவை மீண்டும் அங்கேயே கொண்டு வந்து சேர்த்தார்.

ஹைகல் சுலைமானி மீண்டும் ஒருமுறை நிர்மாணிக்கப்பட்டது.

சில காலம் கழிந்த பின் ஈஸா (அலை) அவர்கள் வருகை புரிந்தார்கள். 

நஊது பில்லாஹ், ஈசா (அலை) அவர்களை தரம் கெட்டவர் என்று பழி சுமத்தினார்கள்.

அதற்கு பின்பு யஹூதிகள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் யூதர்கள் இரண்டு கூட்டமாக பிரிந்து விட்டார்கள்.

யூதர்கள் சதி செய்து ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் அறைய முயற்சி செய்த போது, அல்லாஹ் அவர்களை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான்.

அதன் பின்பு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சிறிய சிறிய யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. 

அதற்குப் பிறகு ரோமைச் சேர்ந்த கிறிஸ்தவ அரசர் டைட்டஸ் ஜெருசலத்தின் மீது கடினமான போர் தொடுத்தார். 

அதன் மூலம் முழு நாட்டையும் அழித்து ஒழித்தார். 
ஹைகலே சுலைமானியையும் தகர்த்தெறிந்தார். 

எனினும், அதில் ஒரே ஒரு சுவர் மட்டும் எஞ்சி இருந்தது. அதற்கு கரியா என்று சொல்லப்படும். அங்கே யூதர்கள் சென்று அமர்ந்து தவ்ராத் வேதத்தை ஓதுவதுண்டு.

மேலும் தாபூத் ஷக்கீனாவும் அந்த தாக்குதலுக்கு பின்பு எங்கோ தொலைந்து போனது. 

டைட்டஸ் அவர்களுடைய போர் தொடுப்பிற்கு பின் யூதர்கள் இறுதி நபியின் வருகைக்காக காத்திருந்தார்கள். 

ஏனென்றால் அவர்களுக்கு மீண்டும் உயர்வு உண்டு என்பதாக அல்லாஹ் வாக்களித்திருந்தான்.

இதைப் பற்றிய வாக்குறுதி சூரத்துல் பகராவிலும் இடம்பெற்று இருக்கின்றது.

பனி இஸ்ராயில்களே, உங்கள் மீது நாம் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். (நீங்கள் ஈமான் கொண்டு) உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஏனென்றால் நாமும் நம் வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடியும்.

ஹைகலே சுலைமானி மூன்று முறை கட்டப்படும் என்பது கியாமத்துடைய அடையாளங்களில் ஒரு அடையாளமாகும்.

அது இரண்டு முறை நிகழ்ந்து விட்டது. 

யூதர்கள் தங்களுடைய மஸீஹ் மற்றும் இறுதி நபிக்கு காத்திருந்தார்கள். 

டைடஸ் போர் தொடுத்து 500 ஆண்டுகளுக்கு பின் இறுதி நபி வருகை புரிந்தார்கள்.

இங்கே யூதர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. 

அனைத்து நபிமார்களும் இஸ்ஹாக் (அலை) அவர்களது சந்ததியிலேயே தோன்றினார்கள். 

ஆனால் இறுதி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததியில் ஏன் தோன்றினார்கள் என்று ஈமான் கொள்ள மறுத்து விட்டார்கள்.

இறுதித் தூதராக வந்த நபி (ஸல்) அவர்களது அடையாளங்களை கண்டு அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்களாகி, ஹைகலே சுலைமானிக்கு 'பைத்துல் முகத்தஸ்'  என்று பெயர் சூட்டினார்கள்.

யூதர்களை திருப்தி படுத்துவதற்காகவே இஸ்லாமியர்களுக்கு பைத்துல் முகத்தஸை முன்னோக்கி சிறிது காலம் தொழும் படி உத்தரவிடப்பட்டது.

ஏனென்றால், யூதர்களும் அப்போது பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது கொண்டு இருந்தார்கள்.

17 மாதங்கள் வரை பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது விட்டு, ஆதம் (அலை) அவர்களாலும், பின்பு இப்ராஹீம் (அலை) அவர்களாலும் கட்டப்பட்ட  முஸ்லிம்களின் முதல் கிப்லாவான கஃபாவை முன்னோக்கி முஸ்லிம்களை தொழுமாறு உத்தரவிடப்பட்டது.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ஜெருசலம் கிறிஸ்தவர்கள் வசம் இருந்தது.

பைத்துல் முகத்தஸை சுற்றியே அவர்கள் ஆலயமும் வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது. 
 
தாபூத் சகீனா இருந்த இடத்தை யூதர்களின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக குப்பைகளை கொட்டும் இடமாக விட்டு விட்டார்கள்.

ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்ட போது அங்கு சென்ற உமர் (ரலி) அவர்கள் மீது கிறிஸ்தவர்கள் சீற்றம் கொண்டார்கள். 

மேலும் அந்த இடத்தை சுத்தம் செய்து, குர்ஆனில் கூறப்பட்டுள்ள மிஃராஜ் சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இடத்தில் அமையப்பெற்ற மஸ்ஜிதுக்கு, 'அக்ஸா' என்று பெயர் சூட்டினார்கள்.

யஹூதிகளின் 'திவார் கரியா' - கரிய்யா சுவர்' அதன் சூழலியே இருந்தது. 
 
அதனை தரிசிக்க வருபவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் அங்கு வருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்பாஸிய்யாக்களின் காலம் வரை ஜெருசலம் ஒரு முஸ்லிம் நகராகவே இருந்தது. 

பிறகு மீண்டும் கிறிஸ்தவர்கள் அதன் மீது போர் தொடுத்து அதனை கைப்பற்றி கொண்டார்கள்.

சலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் 50 க்கும் மேற்பட்ட முறைகள் போர் தொடுத்து மீண்டும் அதனை கைப்பற்றினார்கள்.

பின்பு 700 ஆண்டுகள் வரை உஸ்மானியர்களின் ஆட்சியின் கீழ் ஜெருசலம் இருந்தது

யஹுதிகளுக்கும் அவர்களது கரிய்யா சுவர் வரை வந்து செல்வதற்கு சுதந்திரம் இருந்தது. பின்பு அவர்கள் சிறிது சிறிதாக ஜெருசலத்தில் குடியேற துவங்கினார்கள்.

பின்பு கிறிஸ்தவரான ஹிட்லர், சிப்பாயியாக இருந்து பின் ராணுவ தளபதியாகி, ஒரு பெரும் படையெடுப்பின் மூலம் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தார்.

யஹூதிகள் இதன் காரணமாக நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெறியேற வேண்டிய நிர்பந்தம் உண்டானது.

அத்துடன் யூதர்கள் தனக்கு  என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டார்கள்.

மேலும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போல் யூதர்கள் உலகில் இறுதியாக ஏற்றம் பெறுவதற்கு முன் நிகழ வேண்டிய அனைத்து அடையாளங்களும் வெளிப்பட்டு விட்டதை உணர்ந்தார்கள்.

மேலும் அவர்கள் உலகில் மீண்டும் பிரபலமாக பேசப்படுவதற்கு காரணமான இறுதி மஸீஹ், தஜ்ஜால் தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

யஹூதிகள் பிரிட்டனில் ஆயதமேந்தி தனக்கு என்று ஒரு தனித் தலைமையை உருவாக்கி கொண்டார்கள்.

தங்களுக்கான இருப்பை ஒரு நாட்டின் தோற்றத்தில் உலக வரைபடத்தில் யஹூதிகள் இப்படித்தான் இடம் பெறச் செய்தார்கள்.

பிறகு சிறிது சிறிதாக ஃபலஸ்தீன் மற்றும் எகிப்தின் தீகர் பகுதிகளையும் கைப்பற்றினார்கள்.

அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். 
  
எனினும் அப்போது ஒரு சிறிய நாட்டிடம் மிக மோசமாக தோற்றுப் போகும் அளவிற்கு யஹூதிகள் தங்களை தாங்களே வலிமை படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

கிறிஸ்தவர்களும் இதனைப் பார்த்து, இவர்களுடன் போரிட்டு தங்களுக்கு எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று அறிந்து, பாதிரியார்கள் மூலமாக சர்ச்சுகளிலும் வீடுகளிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து யூதர்களை மன்னிப்பதாக அறிவிப்பு செய்து விட்டார்கள்.

இப்படியாக ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார மோகம், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் பிறருடைய உயிருக்கு நிரந்தர எதிரியாக இருந்த இரு சமூகத்தவர்களை ஓரணியில் நிறுத்தி விட்டது.

அத்துடன் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஒருவர் பிறருக்கு நண்பர்கள் என்ற குர்ஆனின் கூற்றும் உண்மையாகிவிட்டது.

யஹூதிகளின் நம்பிக்கையின் பிரகாரம் அவர்களால் 'ஹைகலே சுலைமானி' யை தங்களால் காப்பாற்ற முடியாமல் போனால், தங்களை  குற்றவாளிகள் என்று தாங்களே நிந்தித்துக்  கொள்வார்கள்.
 
மேலும் அவர்கள் சங்கிலியாலும் தோலினால் ஆன சாட்டைகளினாலும் தங்களை அடித்தும் கொள்வார்கள். 

மேலும் கரியா சுவற்றிற்கு அருகில் சென்று கூட்டமாக ஒப்பாரி வைப்பார்கள்.

யஹூதிகள் மூன்றாவது முறை முழு உலகையும் ஆளும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 

அது 'மஸ்ஜிதுல் அக்ஸா' வை அவர்கள் இடிக்க வேண்டும். 

அதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து விட்டார்கள். 

மஸ்ஜிதுல் அக்ஸாவின் அடியில் வெடிபொருள்களைக் கொண்டு நிரப்பப்பட்ட  சுரங்கங்களை அவர்கள் அமைத்து விட்டார்கள்.

பின்பு 'ஹைகலே சுலைமானி' யை மீண்டும் கட்டி அங்கே 'தாபூத் சகீனா' வை மீண்டும் வைக்க வேண்டும். 

அதற்காக தாபூத் சகீனாவை இரண்டாவது முறையாக அவர்கள் கைப்பற்றி தங்களது வசம் வைத்துள்ளார்கள்.

ஆனால் பிரச்சினை தற்போது 'சிகப்புக் காளை' தான்.

ஏனென்றால் அவர்களின் நம்பிக்கை படி 'ஹைகலே சுலைமானி' இடம் பெற்றுள்ள இடம் பரிசுத்தமற்றதாக உள்ளது. 

அது எது வரை பரிசுத்தமாக்கப்படாதோ, அது வரை 'ஹைகலே சுலைமானி' யை மீண்டும் கட்ட முடியாது.

அதனை பரிசுத்தப்படுத்துவதற்கு ஒரு சிகப்பு காளையை குர்பானி கொடுக்க வேண்டும்.

அந்த சிகப்பு காளையின் அடையாளங்கள் குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது. 

அந்த காளையை கண்டு பிடிப்பது தான் அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

தற்போது கூட 100 ஆண்டுகளாக அப்படி ஒரு சிகப்பு காளையை அவர்கள் தேடிக் கொண்டு தான் இருந்தார்கள்.
  
டெக்னாலஜி - தொழில் நுட்பத்தைக் கொண்டு குழந்தைகளை பிறக்க வைக்கும் வழிமுறைகளில் வெற்றி கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு.

பின்பு அந்த தொழில் நுட்பத்தை கொண்டு சிகப்பு காளையை பிறக்க வைக்க செய்த முயற்சிகள் அவர்களுக்கு பலன் அளிக்க வில்லை.

2019 ல் ஒரு அமெரிக்கரிடம் இருந்து அது போன்ற ஐந்து மாடுகள் அவர்களுக்கு கிடைத்தது. அதன் உடலில் சிகப்பு நிறம் அல்லாத வேறு ரோமமே இருக்கவில்லை. மேலும் அவைகள் எந்த வேளையிலும் ஈடுபடுத்தப் பட்டிருக்கவும் இல்லை. 

மேலும், அந்த காளைகளின் மீது எந்த நோயுடைய தாக்கமும் இருக்காது என்பது பலியிடத் தகுதி உடைய அத்தகைய காளைகளின் இரண்டாவது அடையாளமாகும். 

ஆகையால் கோவிட் - கரோனா வியாதியை உலகம் முழுவதும் பரப்பி அதன் தாக்கம் மற்ற மிருகங்களில் ஏற்பட்டது போல் இந்த காளைகளின் மீது ஏற்படுகிறதா என்று பார்த்த போது, அவைகளின் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

இந்த விஷயத்தை Google ல் தேடிப் பார்த்து நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளவும் முடியும்.

Red heifer found -
Mastery of Red heifer என்று கூகுளில் நீங்கள் டைப் செய்தால் இந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

கியாமத் நாள் சமீபத்தில் தஜ்ஜால் வருகை உடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று விட்டன.

தனது விருப்பப்படி டாக்டர், இன்ஜினியர் பிள்ளைகளை பிறக்க செய்வது, 9 D டெக்னாலஜியின் உதவியுடன் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் இருப்பது, தான் விரும்பிய தட்ப வெப்ப நிலையை உருவாக்குவது, எப்போது வேண்டுமோ அப்போது மழையை பொழியச் செய்வது, சில நாட்களில் முழு உலகையும் சுற்றி வந்து விடுவது என இவைகள் அனைத்தும் தஜ்ஜாலுடைய அடையாளங்கள். 

இவைகள் இந்த காலத்தில் சிரமமான காரியம் அல்ல. 

நம்முடைய இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள கியாமத்துடைய அனைத்து அடையாளங்களையும் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார்கள். 

கியாமத் நாளின் சமீபத்தில் யஹூதிகள் தங்களை காத்துக் கொள்வதற்காக மரங்களுக்குள்  மறைந்து கொள்வார்கள். 

அந்த கர்கத் மரங்களையும் அவர்களே நட்டுவிட்டார்கள்.

பாப் லத் - ஹதீஸ்களின் அடிப்படையில் எந்த இடத்தில் தஜ்ஜால் ஈசா (அலை) அவர்களுடைய கரங்களால் கொலை செய்யப்படுவான் என்று சொல்லப்பட்டுள்ளதோ,  அங்கே அவன் தப்பி செல்வதற்காக ஏர் போர்ட்டும் கட்டி விட்டார்கள்.

இவைகள் அனைத்தும் கியாமத் நெருங்குவதற்கான அடையாளங்கள்.

அத்துடன் 'ஹைகலே சுலைமானி' யும் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.

*அப்படி என்றால் அசல் யுத்தம் என்ன ?*

*அசல் யுத்தம் நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாகும்.*

*தொழுதாலும் தொழாவிட்டாலும் எந்த வித்தியாசத்தையும் உணராத அளவு நம் ஈமான் பலவீனமாகிவிட்டது.*

*இரண்டுக்கும் நமக்கு வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.*

*நம் சகோதர சகோதரிகளின் உரிமைகளை நாம் விழுங்கிவிட்டு சந்தோஷத்தையே உணருகிறோம்.*
  
*மேலும் பிளவு பட்டவர்களின் கட்டுக்கதைகளால் குழம்பிப் போய் இருக்கிறோம்.*

*ஃபலஸ்தீனத்துக்காக துஆ செய்வதையும், எதிர்ப்புகளை தெரிவிப்பதையும் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்.*

*நமக்கு பண மயக்கம் ஏற்பட்டு  விடாமல் இருக்கும் அளவு நமது ஈமான் உறுதி உடையதாக இருக்கிறதா ?*

*யஹூதிகளுக்கு எதிராக புறப்படும் குராசான் முஜாஹிதீன்களைப் போன்றவர்களா நாம் அல்லது சமூக வளைதளங்களில் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களா ?*

*ஒரு வேளை இன்று தஜ்ஜால் வெளி வந்து விட்டால் தவ்பா உடைய வாசல் அடைக்கப்பட்டு விடும்.*

*நமது ஆகிரத்திற்கு நாம் என்ன தயார் செய்துள்ளோம்.*

வெள்ளி, அக்டோபர் 06, 2023

ஆடையூம் இஸ்லாமும்,



 

ஆடைகளை அழகாக்குவோம்

 

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا

 

ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். திருக்குர்ஆன்:- 7:26

 

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள். மனிதர்களையும் மிருகங்களையும் வேறுபடுத்தி காட்டுவது ஆடைகள் தாம். மனிதனைத் தவிர வேற எந்த படைப்பினமும் ஆடைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. மனிதனுக்கு உணவிற்கு அடுத்து ஆடையே பிரதான தேவையாகும். உடலையும் மறைக்கவும் வெயில் மற்றும் குளிரிலிருந்து காக்கவும் ஆடை அவசியம். ஆடை ஒருவரது இயல்பை வெளிப்படுத்தும் அடையாளம் எனலாம். அதனால் தான்ஆடை அலங்காரத்திலும் இஸ்லாம் கவனம் செலுத்துகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களிடம் நீங்கள் செல்லும்போது உங்கள் வாகனம் உங்களின் ஆடைகளை சரியாக்கி கொள்ளுங்கள். ஏனெனில்மக்களிடம் உங்களைப் பற்றி அருவெறுப்பு ஏற்படாமல் இருக்கும். அருவெறுப்புகளை செய்யவோசெய்யப்படவோ அல்லாஹ் விரும்புவதில்லை.

 

தன்னிடம் உள்ளவற்றை கொண்டே அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். தன் சக்திக்கு அப்பாற்பட்டு கடன் வாங்கியோ அல்லது அடுத்தவருடைய பொருளை அபகரித்தோ அல்லது தடுக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்தோ தன்னை அழகுபடுத்தக் கூடாது. தம்மையும் வாகனங்களையும் வீடுகளையும் அழகு படுத்துவதற்கு வீண்விரயம் செய்யலாகாது. அல்லாஹ் வீண்விரயத்தை விரும்புவதில்லை. வெறுக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

 

வசதிக்கேற்ப

 

அபூ அஹ்வஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பழைய மட்டமான ஆடை (அணிந்த நிலை)யில் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபியவர்கள், ( ( أَلَكَ مَالٌ"உம்மிடம் செல்வம் உண்டா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்று பதிலளித்தேன். நபியவர்கள், ( مِنْ أَىِّ الْمَالِ )  "எந்த வகையான செல்வம் இருக்கிறது?" என்று கேட்டார்கள்.

 

நான் "ஒட்டகம்ஆடுகுதிரைஅடிமை ஆகியவை அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ளான்" என்று கூறினேன். அப்போது நபியவர்கள், ( فَإِذَا أَتَاكَ اللَّهُ مَالاً فَلْيُرَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ عَلَيْكَ وَكَرَامَتِهِ ) "அல்லாஹ் உமக்குச் செல்வத்தை வழங்கினால்அல்லாஹ் உமக்குப் புரிந்திருக்கிற அருட்கொடைஅவன் (உனக்கு வழங்கி இருக்கும்) கண்ணியம் ஆகியவற்றின் வெளிப்பாடு உன் மீது தென்படட்டும்" என்று கூறினார்கள். நூல்:-  அபூதாவூத்-3541, நசாயீ-5128, முஸ்னது அஹ்மத்

 

மனிதர்கள் தங்கள் வசதிக்கேற்ப சிறந்த ஆடைகளை அணிய வேண்டும். இதில் கருமித்தனம் கூடாது. அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளை வெளிப்படுத்தி காட்டுவதின் மூலம் அல்லாஹ் மகிழ்ச்சி கொள்கிறான்.

 

ஜனாதிபதியாக இருந்த உமர் (ரலி) அவர்கள் ஒட்டு போட்ட ஆடை அணியவில்லையாஉயரமான ஆடைகளை தான் அணிந்தார்களாஎன்று கருமித்தனம் செய்வோர் கேள்வி கேட்கலாம். உமர் (ரலி) அவர்களோ சந்தர்ப்பத்திற்கேற்ப ஆடை அணியவில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

 

தொழுகையில்

 

ஆதமுடைய மக்களே! தொழும் போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 7:31

 

பேரறிஞர் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபித்தோழர் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் ஆயிரம் வெள்ளிக்காசுகள் கொடுத்து மேலங்கி ஒன்றை வாங்கி அதை அணிந்து தொழுது வந்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராப் வசனம்-31

 

மார்க்கத்தில் தடுக்கப்படாத ஆடைகளில் விலை உயர்ந்த ஆடைகளை பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் அணிந்திருந்தார்கள். ஆனால்இப்படி அணிவதை தொழுகையில் மட்டும் வழக்கமாக்கி இருந்தார்கள்.

 

அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அழகிய கம்பீர ஆடையில் இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். இவர்களின் ஆடை உயர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் உள்ளம் பணிவை மேற்கொண்டு இருக்கும்.

 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது உயர் ரக ஆடை அணிந்துகொள்வதும்தொழுகைக்கு வரும்போது மட்டும் பனியனுடனோ அல்லது மட்ட ரகமான சாதாரண ஆடைகிழிந்த ஆடை இவைகளை அணிந்து வருவதும் இன்று சாதாரணமாகிவிட்டது. காரணம்இறைவணக்கத்தில் ஈடுபட வரும் போது ஆடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. சராசரியான நேரங்களில் எந்த ஆடையோடு வெளியே செல்ல மாட்டோமோஅந்த ஆடையை அணிந்து தொழுவது (மக்ரூஹ் எனும்) வெறுக்கத்தக்க செயல் என்பது மார்க்கச் சட்டமாகும்.

 

ஆடம்பத்திற்காக  

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبًا مِثْلَهُ ) பேருக்காகவும் புகழுக்காகவும் வேண்டி எவர் (ஆடம்பர) ஆடைகளை அணிகிறாரோ அவருக்கு இறைவன் மறுமைநாளில் இழிவுக்குரிய ஆடைகளை அணிவிப்பான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3511

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا رَجُلٌ يَمْشِي قَدْ أَعْجَبَتْهُ جُمَّتُهُ وَبُرْدَاهُ إِذْ خُسِفَ بِهِ الأَرْضُ فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ حَتَّى تَقُومَ السَّاعَةُ ) ‏  (முற்காலத்தில்) ஒரு மனிதன் தற்பெருமை கொண்டவனாக தன் ஆடைகளை அணிந்து கர்வத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன்மறுமைநாள் நிகழும் வரை அவ்வாறே பூமிக்குள் குலுங்கியபடியே அழுந்திச் சென்று கொண்டே இருப்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4240

 

ஆள் பாதிஆடை பாதி என்பர். ஆடை ஆளுமையை மேம்படுத்தும். ஆடைகள் மானத்தை மறைத்து மனிதனை கண்ணியப்படுத்த வேண்டுமே தவிரபடோடாபத்தையும் கர்வத்தையும் பறைசாற்றுவதாக இருக்கக்கூடாது. ஆடை விஷயத்தில் மட்டும்தான் கர்வம் கொள்ளக்கூடாது என்பதில்லை. மற்ற எந்த விஷயத்திலும் கர்வம் கூடாது. ஏனெனில்மனிதர்கள் கர்வம் மற்றும் தற்பெருமை கொள்வதை இறைவன் விரும்புவதில்லை.

 

ஏதேனும் சில நேரத்தில்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ) “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்.

 

உடனே(மெலிந்த உடல்வாகு கொண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், ( إِنَّ أَحَدَ شِقَّىْ ثَوْبِي يَسْتَرْخِي إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ ) “நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கிவிடுகின்றது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட நபியவர்கள், ( إِنَّكَ لَسْتَ تَصْنَعُ ذَلِكَ خُيَلاَءَ ) “நீங்கள் அதைத் தற்பெருமைக்காகச் செய்வதில்லையே” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-3665

 

எவரேனும் எனது ஆடை கரண்டை காலுக்கு கீழே தொங்குவது பெருமையினால் அல்ல என்று கூறி தம்மைத்தானே பரிசுத்தவானாகக் கூறிக் கொண்டாலும் அதை ஏற்க தகுந்ததுல்ல. ஏனெனில்பெருமையுடன் தொங்கவிடுபவருக்கு மட்டுமே தண்டனை என மார்க்கத்தில் வரையறுக்கப்படவில்லை.

 

ஒரு நல்ல மனிதர் ஏதேனும் சில நேரத்தில் கவனமின்மையால் அல்லது ஏதேனும் நோயின் காரணமாக அவரது ஆடை கரண்டைக் காலுக்கு கீழே இறங்கிவிட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கக்கூடும். ஆனால், அது தொடர்படியாக நிகழக்கூடாது.  

 

ஆடை கரண்டைக் காலுக்கு கீழே தொங்குவதின் மூலம் வீதியில் கிடக்கின்ற அசுத்தங்கள் அணிந்துள்ள ஆடையில் தொற்றிக் கொள்வதினால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

மேலும்மனிதன் அத்தகைய அசுத்த ஆடைகளுடன் இறை இல்லதிற்குள் செல்வதினால் இறை இல்லத்தையும் அசுத்தப்படுத்திவிடுகிறான். ஆகையால்கரண்டைக் காலுக்கு கீழே ஆடை தொங்க விடக்கூடாது. மேலும்முட்டுக்காலுக்கு மேல் கீழாடையை மடித்து கட்டிக் கொள்வதற்கும் மார்க்கம் தடை விதித்துள்ளது. ஏனெனில்மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளியே தெரிவதால் இஸ்லாத்தின் சட்டத்தை ஒழுங்காக பேணாதவர் என்ற குற்றத்திற்கு ஆளாக வேண்டியது வரும். எனவேஇவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

 

நிறங்களின் குணங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ) நீங்கள் வெண்ணிற ஆடை அணியுங்கள். ஏனெனில்அது தூய்மையானதும் அழகானதும் ஆகும். உங்களில் இறந்துவிட்டவர்களுக்கு வெண்ணிறத்திலேயே சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2731

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். நபியவர்கள் தொழுகையை முடித்த பின்பு ( اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي ) “என்னுடைய இந்த ஆடையை கொண்டுபோய் அபூஜஹம் என்ற தோழரிடம் கொடுத்துவிட்டு அவருடைய (வண்ணங்கள் இல்லாத) ஆடையை கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையைவிட்டு என் கவனத்தை திருப்பிவிட்டது” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-373, முஸ்லிம்-963

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வண்ணங்களில் ஆடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு பிடித்தமானது வெண்ணிற ஆடை தான். இதையே அணியும் படி பிறருக்கும் வலியுறுத்தியுள்ளார்கள்.

 

நிறங்கள் மனதை விருப்பு - வெறுப்பு அடையச் செய்கிறது என்பதை பற்றி நபியவர்கள் கூறியவற்றை பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலத்தில் மருத்துவ நிபுணர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

 

கவனம் சிதறாமல் இருக்க வெண்ணிற ஆடையை நபியவர்கள் அணிந்து தொழுதார்கள். வெண்மை நிறம் ஒளியை பிரதிபலிப்பதில்லை. கவனம் சிதறாது. அமைதியின் நிறம் வெண்மை. தொழுகைக்கு மிகவும் ஏற்றமான நிறமாக கருதப்படுகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட தினத்தன்று தம் மீது கருப்பு நிற தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவில் நுழைந்தார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2638, நஸாயீ-5347

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் காலை பொழுதில்  அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கருப்பு நிற கம்பளியாடை அணிந்து வெளியே புறப்பட்டார்கள். நூல்:- திர்மிதீ-2734

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பர்தாவுடைய வசனம் (24:31) இறங்கிய பிறகு அன்சாரி பெண்கள் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டனர். كَأَنَّ عَلَى رُءُوسهنَّ الْغِرْبَان ) "அவர்களின் தலையின் மீது (கருநிற முக்காடுகள் இருந்ததால்) காகங்கள் இருப்பதைப் போன்று இருந்தது". நூல்:- அபூதாவூத்-4101, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்இப்னு கஸீர்

 

கருப்பு நிற ஆடையை சிலர் பீடையாகவும் துர்குறியின் அடையாளமாகவும் நினைக்கிறார்கள். இதற்கு இஸ்லாத்தில் எந்த சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால் கருப்பு நிற ஆடைகளை நபியவர்கள் அணிந்துள்ளார்கள்.

 

அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என் தந்தையுடன் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் இரண்டு பச்சை நிற சால்வைகளை (கீழாடையாகவும்மேலாடையாகவும்) அணிந்திருந்ததை நான் கண்டேன். நூல்:- அபூதாவூத்-3543, திர்மிதீ-2737 நசாயீ-1554, முஸ்னது அஹ்மத்

 

சொர்க்கவாசிகளுக்கு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும் என திருக்குர்ஆன் (76:21) கூறுகிறது. எனவே தான் அறிஞர் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் "பச்சை நிற ஆடைகள் சொர்க்கத்தின் ஆடையாகும்" என்று கூறியுள்ளார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

இயற்கை நிறம் பச்சை. பச்சை நிறம் ஒருவருக்கு பிடித்தால்அவர் ஆற்றல் மிக்கவர் என்று தெரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பச்சை நிறம் துன்பத்தை போக்கி உற்சாகமூட்ட வல்லது. அலுவலக அறைபடிக்கும் அறைகளுக்கு பச்சை நிறம் உகந்தவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனாலேயே நூலகங்கள் சட்ட நிபுணர்களின் அலுவலக அறைகள் போன்றவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கின்றன.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது  சிவப்பு நிறமுடைய இரு ஆடைகளை அணிந்த ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர் நபியவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார். ஆனால்நபியவர்கள் அவருக்கு பதில் முகமன் (சலாம்) கூறவில்லை. நூல்:- அபூதாவூத்-3547, திர்மிதீ-2731

 

ஆண்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிவதை நபியவர்கள் விரும்பவில்லை. வெறுப்பை வெளிப்படுத்துவதற்காகவே அந்தத் தோழரின் சலாத்திற்கு நபியவர்கள் பதில் கூறவில்லை என்று தெரிய வருகிறது.

 

சிவப்பு நிறம் ஒருவருக்கு பிடித்தால் அவர் தீவிர போக்கு உடையவர் என்று அறியலாம். சிவப்பு நிறம் நமது இதயத்துடிப்பையும் மூச்சு விடுதலையும் அதிகப்படுத்துகிறது. திசுக்களை சூடாக்குகிறது. உடல் வெப்பநிலையை உயர்த்துகிறது. ஹார்மோன் செயல்பாட்டையும் பாலுணர்வையும் ஊக்குவிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் செம்மஞ்சள் நிறச்சாயம் இடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( أَأُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا ) "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிற சாயமிட்டு அணியுமாறு) உமக்கு கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள். நான், "அவ்விரண்டையும் கழுவி செம்மஞ்சள் நிற சாயத்தை அகற்றிக் கொள்கிறேன்" என்றேன். நபியவர்கள், ( بَلْ أَحْرِقْهُمَا ) "இல்லைஅவ்விரண்டையும் எரித்து விடு" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4219

 

சுருங்கக் கூறின்: சிவப்புமஞ்சள் நிறங்கள் சூடான நிறங்களாகும். அவை நம்மை உஷ்ணப்படுத்துகின்றன. அவற்றை தவிர்ந்து கொள்வது மிகவும் நல்லதாகும்.

 

ஜுப்பா சுன்னத்தா?

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اتَّقُوا الْحَدِيثَ عَنِّي إِلاَّ مَا عَلِمْتُمْ فَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ) என்னிடமிருந்து நீங்கள் தெரிந்து கொண்டதைத் தவிர (தெரியாத வேறு எதையும்) நபிமொழி என்று அறிவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆகவேஎன் மீது யார் வேண்டுமென்றே (நபிமொழி அல்லாததை நபிமொழி என்று இட்டுக்கட்டி) பொய் கூறுவாரோஅவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2868

 

நம் நாட்டில்இரு பக்கவாட்டில் கிழித்து தைத்துஇரு பக்கம் அல்லது ஒரு பக்கம் பாக்கெட் வைத்துமுழங்காலுக்கு சற்று மேல் அல்லது சற்று கீழ் வரை தைத்துகைகளை தளர்த்தி தைத்து அணிவது தான் "ஜுப்பா" எனப்படும்.

 

நாம் "ஜுப்பா" என்று சொல்லிக்கொண்டு அணியும் ஆடை (நபிவழி எனும்) சுன்னத் என்று சொல்வது தவறாகும். அவ்வாறு சொல்லிக் கொள்பவர்கள் மேற்காணும் நபிமொழியை நினைவில் கொள்ளட்டும்.

 

நபிமொழிகளில் இடம்பெறும் "ஜுப்பா" என்ற சொல்நமது நடைமுறையில் அணியும் ஜுப்பாவை குறிக்காது. நபியவர்களின் ஆடைகளைப் பற்றி வரும் நபிமொழிகளை கூர்ந்து படித்தால் புரிந்துவிடும்.

 

நிர்வாண கோலத்தைப்போல்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள் மெல்லிய ஆடையை அணிந்திருந்ததால் நபியவர்கள் அஸ்மாவை பார்க்காமல் முகம் திருப்பிக்கொண்டார்கள்.

 

பிறகு நபியவர்கள், ( يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلاَّ هَذَا وَهَذَا ‏"‏ ‏.‏ وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ ) "அஸ்மா! ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால்அவளிடமிருந்து இன்ன இன்ன உறுப்புகளைத் தவிர (மற்றவை) பார்க்கப்படுவது சரியல்ல" என்று கூறினார்கள். நபியவர்கள்இன்ன இன்ன உறுப்பு என்று சொல்லும்போது தமது முகத்தையும்தம் முன் கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். நூல்:- அபூதாவூத்-3580

 

இன்றைய இஸ்லாமிய எதிரிகள் தங்களுடைய அநாகரீகக் கலாச்சார ஆடைகளை நம்மிடையே புகுத்திவிட்டனர். அவர்களால் திணிக்கப்பட்ட இந்த ஆடைகள் பெண்ணின் மறைக்க வேண்டிய பகுதிகளையும் மறைக்காத வகையில் குட்டையாகவோ அல்லது உடல் பகுதியில் தெரிகிற வகையில் மிக மெல்லியதாகவோ உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. அலங்கோல ஆடைகளை அலங்காரமாக எண்ணிக் கொள்கின்றனர். இன்று அநாகரீகம் வளர்பிறையானதால் ஆடைகள் தேய்பிறையானது.

 

நிர்வாணத்தை மறைத்து மானத்தை காப்பது தான் ஆடையின் பிரதான நோக்கம். கவர்ச்சியான ஆடைகளில் சேலையும் ஒன்றாகும். சேலை அணிவதின் மூலம் கழுத்துவயிறுமுதுகுஇடுப்பின் சில பகுதி போன்ற மறைக்க வேண்டிய சில பகுதிகள் வெளியே தெரிகிறது. பெண்கள் தங்களுக்குள்ளோ தந்தைசகோதரன் போன்ற மணமுடிக்க அனுமதியில்லாத ஆண்களுக்கு மத்தியிலோ கூட உடல் முழுவதையும் மறைக்காத சேலை போன்ற ஆடைகளை அணியக்கூடாது. மேலாடை இன்றி பெண்களெல்லாம் பேண்ட்டீ சர்ட் போன்ற  ஆண்களுக்குரிய ஆடைகளை அணிவதும்சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்தாலும் மார்பகங்கள் மீது துப்பட்டாக்களை அணியாமல் வெறுமென உலா வருவது இன்றைய நாகரீகமாக ஆகிவிட்டது

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல் (ஆடை விஷயத்தில்) ஒப்பாகுபவர்களையும் பெண்களில் ஆண்களைப் போல் (ஆடை விஷயத்தில்) ஒப்பாகுபவர்களையும் சபித்தார்கள். நூல்:- புகாரீ-5885, அபூதாவூத்-3574

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ) ‏ இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். (அவர்களில் ஒரு பிரிவினர்)   மெல்லிய உடையணிந்து(அது அவர்களை மறைக்காதபடி) நிர்வாணமாக காட்சியளித்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். இவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். (ஏன்)  சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே கமழ்ந்துகொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4316

 

இந்த நபிமொழியை கண்டு கொள்ளாமல் நபியவர்களின் சாபத்திற்குரிய ஆடைகளை பெண்கள் அணிந்து கொள்வதற்கு பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்நவநாகரீக நங்கையர் ஆண்களைப் போன்று ஆடை அணிந்துபெண்மையின் தனித்தன்மையை இழந்து ஞானத்தை நட்டாற்றில் விட்டு விடுகின்றனர்.

 

இஸ்லாம் கூறும் ஆடைகளே பெண்களுக்கு அழகு தரும்போதுநாகரீகம் என்ற பெயரால் அலங்கோல ஆடைகளை அலங்கார ஆடைகளாகக் கருதும்போதுதான் வாழ்க்கையும் அலங்கோலமாக ஆகிவிடுகிறது.

 

அநாகரீக செயல்

 

நாகரீகம் என்ற பெயரில் பிறரை வசீகரிக்க கவர்ச்சிகரமான ஆடைகள், அரை நிர்வாண ஆடைகள் அரங்கேறுகின்றன‌ என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம். மேனி தெரியும் வண்ணம் மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் குற்றமாகும். அங்கங்களை எடுத்துக்காட்டுவது போல் இறுக்கமான ஆடை அணிவதை இஸ்லாம் வெறுக்கிறது.

 

உடலைப் பற்றி பிடிக்கும் ஆடை அணிந்தால்இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு, உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும். இறுக்கமான ஆடைகள் மூலம் உடல் அழகு வெளியே தெரிந்து காமக் கிளர்ச்சியை தூண்டுவதற்கு காரணமாகிவிடுகிறது. பெண்களுக்கெதிரான வன்புணர்வுக்குபெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

 

மேலும்இறுக்கமான ஆடை அணிவதின் விளைவாக சொறி சிரங்குசரும நமச்சல்கால்களில் சரும வெடிப்புகள் மற்றும் பலவித நோய்களும் உண்டாக்குகின்றன என்று அமெரிக்க நாட்டின் மருத்துவ நிபுணர் "லிண்டா ஆலன்" என்பவர் கூறுகிறார். உடலைப் பற்றி பிடிக்காதபடி தளர்ந்திருக்கும் ஆடை அணிதலை ஆரோக்கியமாகும்.

 

சினிமா நடிகை நடிகர்கள்கிரிக்கெட் வீரர்கள்அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் உருவங்கள் மற்றும் மிருகங்கள்பறவைகளின் உருவங்கள் பொரித்த ஆடைகள்கொச்சை வார்த்தைகள் எழுதப்பட்ட ஆடைகள் இஸ்லாமிய சமூகத்தினர்களால் பரவலாக அணியப்படுகின்றன. இதைத் தவறாகக்கூட கருதுவதில்லை. இவை அனைத்தும் அந்நியர்களால் புகுத்தப்பட்ட சீர்கேடுகள் என்பது நினைவிருக்கட்டும். இவைகளை நாம் முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

 

நாட்டுக்கு நாடு ஆடை கலாச்சாரம் வேறுபட்டாலும் எந்நாட்டவரும் போற்றும் மானத்தை மறைக்கும் முழுமையான ஆடைகள் தான் மதிப்பையும் மரியாதையும் தரவல்லது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடைகளை அணிவதின் அல்லாஹுத்தஆலாவின் அன்பைப் பெறுவோமாக! ஆமீன்!

பிரபல்யமான பதிவுகள்