நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 13, 2023

வானிலை மையம்,

https://forecast7.com/en/13d0880d27/chennai/

மீனவர் நலவாரியம்,

தமிழ்நாடு மீனவர் நல வாரியம் (TNFWB)

தமிழ்நாடு மீனவர் நல வாரியம் 2007 இல் நிறுவப்பட்டது, இது சமூக பாதுகாப்பு மற்றும் மீன்பிடித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் தலைவர் / மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் மீன்வள இயக்குநர் ஆகியோர் உறுப்பினர் செயலாளராக இருந்து, நல வாரியத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார். தமிழக அரசால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்களை வாரியம் கொண்டிருக்கும்.

வாரியத்தில் மொத்தம் 4.50 லட்சம் மீனவர்கள் / மீனவப் பெண்கள் தொழிலாளர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


நல வாரியம்_Org600


தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் விவரங்கள்


Sl. இல்லைநிவாரண உதவி விவரங்கள்ஒரு பயனாளிக்கு நிவாரணம்/உதவி
(தொகை ரூ.)
1விபத்து நிவாரணம்  
 a) விபத்து காரணமாக மரணம் 200,000
 b) இரு கைகளின் இழப்பு200,000
 c) இரு கால்களின் இழப்பு200,000
 ஈ) ஒரு கை மற்றும் ஒரு கால் இழப்பு200,000
 இ) இரு கண்களிலும் பார்வை இழப்பு200,000
 f) ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு100,000
 g) மேற்கூறிய பொருட்களைத் தவிர பெரிய காயங்களால் கைகால் இழப்பு50,000
2மீன்பிடிக்கும்போது அல்லது மீன்பிடித்தபின் விபத்து மரணம் தவிர வேறு காரணங்களால் ஏற்படும் மரணம்200,000
3மீன்பிடிக்கும்போது காணாமல் போன மீனவர்கள்200,000
4இயற்கை மரணம்15,000
5இறுதிச் சடங்கு செலவுகள்2,500
6உறுப்பினர்களின் மகன் மற்றும் மகளுக்கு கல்விக்கான உதவிநாள் அறிஞர்விடுதியாளர்
சிறுவர்கள்பெண்கள்சிறுவர்கள்பெண்கள்
 அ) 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி1,2501,500   ---  ---
 b) 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி1,7502,000   ---   ---
 c) ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்1,2501,7501,4501,950
 ஈ) இளங்கலை பட்டம்1,7502,2502,0002,500
 இ) முதுகலை பட்டம்2,2502,7503,2503,750
 f) பட்டதாரி தொழில்முறை படிப்புகளின் கீழ் (சட்டம், பொறியியல், மருத்துவம் போன்றவை)2,2502,7504,2504,750
 g) முதுகலை தொழில்முறை படிப்புகள்4,2504,7506,2506,750
7திருமண உதவி ஆண்பெண்
 அ) உறுப்பினருக்கு திருமண உதவி3,0005,000
 ஆ) ஒரு உறுப்பினரின் மகன்/மகளுக்கு திருமண உதவி3,0005,000
8அ) டெலிவரி @ ரூ.1,000/- ஒரு மாதத்திற்கு 6 மாதங்களுக்கு6,000
 b) கருச்சிதைவு3,000
 c) கர்ப்பத்தை நிறுத்துதல்3,000

பல நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் உள்ள மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மீன்வளத் துறை எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்கிறது. நலத் திட்டங்களின் பலன்கள் பயனாளிகளுக்கு குறுகிய காலத்திலும், வெளிப்படைத் தன்மையிலும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை தேசிய மின்னணு நிதி மூலம் தனிப்பட்ட பயனாளிகளின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு வரவு வைக்கிறது. பரிமாற்றம் (NEFT).

செவ்வாய், டிசம்பர் 12, 2023

புயலும் ,தனுஷ்கோடியும்,

நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.. ?? புயலின் உக்கிர தாண்டவத்நில் ஒரு செழிப்புமிக்க நகரமே காணாமல் போன விஷயம்.. அதுவும் நம் தமிழ்நாட்டில் !!

நிவர் புயலின் இயற்கைச் சீற்றத்திற்கு நடுவே, நம்மிடம், மொபைல் போன் முதல், நமக்குச் சொந்தமானப் பல சாட்டிலைட்டுகள், வயர்லெஸ் கருவிகள், இலவச வாட்ஸ்அப் தொடர்பு, தமிழக மற்றும் மத்திய அரசசுளின் அவசரக்கால உதவிகள் வரையென நம்மை காப்பாற்ற, பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைய அசுர விஞ்ஞான வளர்ச்சி நம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறது. நாம், மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 

ஆம், பழைய நினைவொன்றை, இன்றையத் தலைமுறையினர் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரமிது. 

சுமார், 55 ஆண்டுகளுக்கு முன், தனுஷ்கோடி என்ற ஒரு வணிக நகரம் என்று ஒன்று இருந்ததும் அது மறைந்தது எப்படி என்றும் நெஞ்சைப் பிளக்கும் கதையை கேளுங்கள்.. !! 

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது, என்று தெரியும்.

 தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த கடுந் துயரத்தைப் பற்றி, இன்று யாருக்கும் தெரியாது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தனுஷ்கோடி.

தனுஷ்கோடியில், அப்போது கோவில்கள், துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில் நிலையம், எனச் சகலமும் இருந்தன. புராணம் காலந்தொட்டே, மிகவும் புகழ் பெற்ற வணிக நகரம் அது. 

மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள், ராமேசுவரம் வருவது கிடையாது. 

நேராக தனுஷ்கோடி சென்று விடும். 
ராமேசுவரத்திற்கு வர விரும்புபவர்கள் பாம்பனிலிருந்து ‘ஷன்டிங்க்’ என்று சொல்லக்கூடிய தனி ரெயிலில் ராமேசுவரம் வருவர்.

டிசம்பர் 22 1964... வரை கலகலப்பாக இருந்த ஊர் யாருமே எதிர்பார்க்காத தினமாக 23.12.1964-ந் தேதி அமைந்தது.

 அன்று இரவில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய கடும் புயலாலும், பலத்த மழையாலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது.

தனுஷ்கோடியின் அன்றைய தினமானதுத், தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. 

கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. 

வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 

இன்று, நம்மிடமுள்ள மிக நவீன உபகரணங்கள் எதுவுமே, அன்று நம் மூத்தோரிடம் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. 

புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்துக் கொண்டாக வேண்டிய காலக்கட்டம் அது. அது வரை, நடக்கவுள்ளக் கொடூரத்தை அறியாது வாழ்ந்தனர் நம் முன்னோர். 

ட்ரைன் நம்பர் 653, 

பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. 

ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. 

இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. 

டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். 

அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

ஊழிக்காலமெனப் பாய்ந்த, ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த ராட்சதப் பேரலையும், இரயிலை வாரி அணைத்துக் கொண்டு, கடலுக்கடியில் மூழ்கடித்துக் கோரத்தாண்டவமாடியது.  

ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். 

ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. 

ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். 

அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். 

'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது. 

தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. 

தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. 

அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, 

''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. 

கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. 

நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. 

உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. 

இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். 

அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். 

இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். 

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. 

அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். 

இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, 

மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . 

ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். 

மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது. 

ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. 

தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. 

தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. 

எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 

இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. 

அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். 

புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, 

தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. 

குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. 

அன்றைய முதல்வர் மாண்புமிகு. அமரர். பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். 

அன்றைய, அவர் சார்ந்தக் காங்கிரஸ் அரசின் உதவியை நாடினார். 

நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. 

தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது. 

இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. 

முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. 

இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. 

உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று. 

மீண்டும் தேடல் தொடங்கியது. 

இறுதியாக முடிவுக்கு வந்தனர். 

புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர். 

இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 

அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். 

பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார். 

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. 

இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. 

தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. 

விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது.

 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது.

சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, 

தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 
''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. 

தமிழக மக்களின் மன நிலை, ஆழ்ந்தச் சோகத்தில் இருக்க, அன்றையப் பத்திரிக்கைகள் பலவும் மிகவும் கவலை கொள்ளத் தொடங்கி எழுதியது.  

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. 

மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். 

அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. 

மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது. 

தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... 

இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில், பிடிவாதமாக, இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. 

இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, 

கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. 

"ராமேஸ்வரத்துக்கு போனா தான் லைட்டைப் பார்க்க முடியும்" 

.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, 

கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, 

இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். 

சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். 

இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். 

மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

தமது மூதாதையர் வாழ்ந்த இந்த இடத்தை விட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். 

இன்றைய, நம் மத்திய அரசின் ஆணையின் பேரில், தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான பொன். ராதாகிருஷ்ணன் அவர்களதுத் துரிதக் கதியிலான அக்கறை மற்றும் செயற்பாட்டு மேற்பார்வையில், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 

கடலின் நடுவே நடைபெற்று வந்த இந்த சாலைப் பணி, வெறும் ஒன்றரை ஆண்டுக்குள், முழுமையாக முடிந்தது. 

சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. 

அரிச்சல்முனை வரை செல்லும் வாகனங்கள், திரும்பிச் செல்ல வசதியும் செய்யப்பட்டு, அதற்கான வளைவின் மைய பகுதியில் தூண் அமைக்கப்பட்டு, அதன் மேலே அசோக சின்னமும் நிறுவப்பட்டது.

தற்போது அங்கு மின்சார இணைப்பு கொடுப்பதற்கும் புதிய குடியிருப்புகள் ஏற்படுத்துவதுக் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. 

இந்த வரலாற்று சோகம் History of Dhanushkodi என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்....

சனி, டிசம்பர் 09, 2023

வக்ஃபு சட்டத்தை நீக்க முயற்சி,

ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும் கண்ணியத்திற்குரிய
இஸ்லாமிய மக்களின்
சிந்தனைக்கு

இந்தியாவில் இருக்கும் வக்ஃபு
சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வக்ஃபு சட்டத்தை
நீக்குவதற்கான (Repeal) முயற்சியை
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா
கட்சி மேற்கொண்டு வருகிறது.

வக்ஃபு சட்டத்தை நீக்க கோரி
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மசோதா தாக்கல் செய்யும் முயற்சி நடந்துவருகிறது
என்கின்ற தகவலை கூட இஸ்லாமிய சமூகம் இன்னும் அறியாமல்
இருக்கிறது என்பதை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்.

இந்த வக்ஃபு சட்டம்
இந்திய மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பாதுகாப்பு வளையம்.

இந்த வக்ஃபு சட்டம் ஏன்
இந்துத்துவா கொள்கை கொண்ட
அரசிற்கு பெரும் வயிற்றெரிச்சலை
ஏற்படுத்தி இருக்கிறது என்பதை
நாம் முதலில் தெரிந்துகொள்வோம்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு
முன்பு இந்தியாவில் ஆட்சி செய்த மொகலாயர்கள் மற்றும் அன்று வாழ்ந்த இஸ்லாமிய செல்வந்தர்கள்
வருங்கால உம்மத்தின் நலன் கருதி
வக்ஃபு செய்த சொத்துக்களின்
எண்ணிக்கை என்பது கணக்கில் அடங்காதவை.

அதாவது இந்திய இராணுவம் மற்றும்
ரயில்வேவிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக
உள்ளது.

தற்போது மொத்தம் 8,65,646 அசையா
சொத்துக்கள் வக்ஃபு வாரியத்தின்
கண்காணிப்பில் பதிவு செய்யப்பட்டு
இருக்கிறது.
1)Andaman & Nicobar Island- 150 அசையா சொத்துக்கள்
2)Andhra Pradesh -10708 அசையா சொத்துக்கள்
3.) Assam- 1616 அசையா சொத்துக்கள்
4.)Bihar (Shia) -1672 அசையா சொத்துக்கள்
5) Bihar (Sunni)-6480 அசையா சொத்துக்கள்
6)Chandigarh-34 அசையா சொத்துக்கள்
7)Chhattisgarh -2665 அசையா சொத்துக்கள்
8)Dadra and Nagar Haveli-32 அசையா சொத்துக்கள்
9) Delhi-1047
10)Gujarat-30881 அசையா சொத்துக்கள்
11) Haryana-23117 அசையா சொத்துக்கள்
12)Himachal Pradesh-4494   அசையா சொத்துக்கள்
13)Jharkhand 435அசையா சொத்துக்கள்
14)Jammu & Kashmir-32506அசையா சொத்துக்கள்
15) Karnataka- 58578அசையா சொத்துக்கள்
16) Kerala -49019அசையா சொத்துக்கள்
17) Lakshadweep- 896அசையா சொத்துக்கள்
18)Madhya Pradesh-31342அசையா சொத்துக்கள்
19)Maharashtra -31716அசையா சொத்துக்கள்
20)Manipu-966அசையா சொத்துக்கள்
21)Meghalaya -58 அசையா சொத்துக்கள்
22.Odisha -8510 அசையா சொத்துக்கள்
23.Puducherry- 693அசையா சொத்துக்கள்
24.Punjab58608அசையா சொத்துக்கள்
25.Rajasthan24774அசையா சொத்துக்கள்
26.Tamil Nadu - 60223அசையா சொத்துக்கள்
27.Tripura2643அசையா சொத்துக்கள்
28.Telangana- 41567அசையா சொத்துக்கள்
29.Uttar Pradesh(Sunni)-199701அசையா சொத்துக்கள்
30.Uttar Pradesh(Shia)-15006அசையா சொத்துக்கள்
31Uttarakhand-5317 அசையா சொத்துக்கள்

இந்த மொத்த சொத்துக்களின் பரப்பளவு என்பது 9.4 இலட்சம் ஏக்கர்
இந்திய ரயில்வேக்கு சொந்தமான
மொத்த அசையா சொத்தின் பரப்பளவு
11.5 இலட்சம் ஏக்கர் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான அசையா சொத்தின் பரப்பளவு 17.78 இலட்சம் ஏக்கர் .

உலகில் 54 இஸ்லாமிய நாடுகள்
இருக்கின்றன
எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்  அளவிற்கு
வக்ஃபு சொத்துக்கள்
இல்லை.

இந்தியாவில் இருக்கும் அளவிற்கு
தர்காக்கள் , பள்ளிவாசல்கள் மற்றும் மதராசக்களின
எண்ணிக்கை உலகில்
எந்த இஸ்லாமிய நாட்டிலும்
இல்லை.

இதை தவிர இன்னும்
மீட்கப்படாத ஆக்கரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் வக்ஃபு சொத்துக்களின் எண்ணிக்கை
ஏராளம்.

இனாம் நிலங்களாக வக்ஃபு
செய்யப்பட்ட அசையா சொத்துக்கள்
100 ஏக்கர் 200 ஏக்கர் என்று தொடங்கி
2000 ஏக்கர் வரை இருக்கின்றது.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 ஏக்கர் இனாம் செய்யப்பட்ட வக்ஃபு நிலங்கள் மீட்கப்படாமல் அடையாளம் காணப்படnமல்  இருக்கிறது.
திருச்சி பகுதியில் சுமார் 1000 ஏக்கர்
இனாம் நிலங்களும் சங்ககிரி பகுதியில் 300 ஏக்கர் இனாம் நிலங்களும் சத்தியமங்களம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் இனாம் நிலங்களும் திண்டுக்கல் பகுதியில்
100 ஏக்கர் இனாம் நிலங்களும் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் குன்னூர் பகுதியில் மட்டும் 200 ஏக்கர் வக்ஃபு நிலங்கள் இருக்கின்றன ஊட்டில் உள்ள மெயின் பஜார் 80 செண்ட் நிலம் வக்ஃபு நிலம் தனியா ர ஆக்ரமிப்பில் உள்ளது ராம்நாடு திருநெல்வேலி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் உக்ஃபு நிலங்கள் என
மீட்கப்படாத இனாம் வக்ஃபு நிலங்கள்
பல ஆயிரம் கோடி மதிப்பில்
இருக்கிறது.( இனாம் ஒழிப்பு சட்டத்தை
பற்றி தனி பதிவு ஒன்றை வெளியிடுகிறேன்)

இந்த நிலங்களை மீட்கவும்
இதை பற்றி கவலைபடவும் இந்த வக்ஃபு நிலங்களை மீட்டு
இஸ்லாமிய சமூகத்தின் வளர்சிக்கு
பயன்படுத்த வேண்டும் என்கின்ற
அடிப்படை சிந்தனை கூட
இல்லாமல் இருக்கிறோம்.

1963 ம் ஆண்டு இந்த இனாம் நிலங்களுக்கு  டைட்டில் டீடு (TD)
வழங்கப்பட்டது அந்த ஆவணங்கள்
தமிழ்நாடு ஆவண காப்பகத்தில்
இருக்கிறது. (என்னிடம் கோவை மாவட்டத்தை சார்ந்த 20 இனாம் நிலங்களுக்கான விபரங்கள் இருக்கின்றன.)

இந்த வக்ஃபு நிலங்களை
பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வக்ஃபு சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும்.
இந்த சட்டம் வக்ஃபு வாரியங்களுக்கு
வானுயர்ந்த அதிகாரத்தை
வழங்குகிறது.

ஒரு நிலம் வக்ஃபு நிலமா ?
இல்லையா? என்பதை தீர்மானிக்கும்
அதிகாரம் வக்ஃபு வாரியத்திற்கு
இந்த சட்டம் வழங்குகிறது.

ரயில்வே நிர்வாகத்திற்கு இணையாக
நிர்வாக கட்டமைப்புகளை கொண்டு
செயல்பட வேண்டிய வக்ஃபு வாரியங்கள் சாதாண பஞ்சாயத்து அலுவலங்கள் போல செயல்படுகின்றன என்றால் அதன்
முக்கியத்துவம் அறியாமல்
வக்ஃபு வாரியங்களை முழுமையாக
இஸ்லாமிய சமூகம் பயன்படுத்திக்கொள்ளாமல
 இருக்கிறது
என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வக்ஃபு வாரியத்திற்கும்
அந்தந்த மாநில அரசு வருடம் வருடம்
கோடிக்கணக்கில் மானியம் வழங்குகிறது தமிழக அரசு தமிழ்நாடு
வக்ஃபு வாரியத்திற்கு வருடம்
2 .5 கோடி ருபாய் மானியம் வழங்குகிறது. இதை தவிர வருமானம்
வரும் வக்ஃபு நிர்வாகங்களிடம்
இருந்து வருமானத்தில் 7 சதவீதத்தை
ஈவு தொகையாக வக்ஃபு வாரியம்
வசூலிக்கிறது.

இந்த இரண்டு தொகையும்
சேர்ந்து வக்ஃபு வாரியத்திற்கு வருடத்திற்கு கணிசமான தொகை
நிதியாக கிடைக்கிறது.

Section 4 (2) of the Muslim Women (Protection of rights on Divorce) Act, 1986
ன் படி வக்ஃபு வாரியம் விதவைகளுக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்
அதன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரியம்
வருடம் 67800/ - ருபாய் செலவிடுகிறது. தமிழகம் முழுவதும்
நம் இஸ்லாமிய சமூகத்தில் வறுமையில் வாடும் விதவைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவர்களுக்கு கண்ணியமாக வாழ தேவையான பராமரிப்பு தொகையை பெற்று கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் . பள்ளிவாசல்களில் பிச்சை கேட்டு நிற்கும் அநாதை பெண்களுக்கு
வழி பிறக்கும்.

உலாமாக்களுக்கு மாதம் மாதம்
ரூபாய் 3000 பென்ஷன் வழங்க பென்ஷன் திட்டம் 1981 உருவாக்கப்பட்டு உள்ளது அதன்படி
2600 உலமாக்களுக்கு பென்ஷன்
வழங்க தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் 1350 உலமாக்கள் மட்டுமே
இது வரை மாத பென்ஷன் தொகை
பெற்று வருகிறார்கள்.
இந்த தொகையின் அளவை மாதம்
5000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

ஆக்காமிப்பில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை
மீட்டு குடியிருப்பு வீடுகளாக
மாற்றியமைத்து குறைந்த வாடகைக்கு
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு
வழங்க முயற்சி மேற்கொள்ள
வேண்டும்.

இதற்கு வக்ஃபு சட்டத்தையும்
வக்ஃபு வாரியங்களையும் பாதுகாக்க வேண்டும்.

ISLAMIC FEDERATION OF INDIA
அமைப்பு வக்ஃபு நிலங்களை மிட்டெடுக்கவும் அதை நம் உம்மத்தின்
வளர்ச்சிக்கு பயன்படுத்தவும்
தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இஸ்லாமிய இளம் வழக்கறிஞர்கள்
மற்றும் வக்ஃபு நிர்வாகிகளுக்கு
வக்ஃபு சம்பந்தமான சட்ட பயிற்சி 
அளித்திடவும் 
வக்ஃபு சொத்துகளை மீட்டு டெடுக்க
வழிகாட்டிடவும் தமிழகத்தில்
Wakf Training Institute ஒன்றை
உருவாக்கிட ISLAMIC FEDERATION OF INDIA அமைப்பின் சார்பில்
திட்டமிடப்பட்டு உள்ளது.

உறுப்பினர்களாக தன்னார்வலர்களாக
ஒருங்கிணைப்பாளர்களாக இந்த அமைப்பில் இணைந்து செயல்பட
விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயர் மற்றும் முகவரி உங்களை பற்றிய
விபரங்களை 8610496476 என்கின்ற
 வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும்.

------------------------------------------

M.rahamathulla B A,B.L.,
Cheif Co-ordinator
ISLAMIC FEDERATION OF INDIA
8610496476
--------------------------------------------

பிரபல்யமான பதிவுகள்