நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஏப்ரல் 28, 2024

கணவன் மனைவி விளையாட்டு,

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உலக மக்கள் அனைவர்களின் மீதும் நிலைத்து உண்டாவதாக.            

27.04.2024 சனிக்கிழமை

இன்று ஒரு தகவல்

வழங்குபவர்
மெளலவி.பீ.நைனா முகம்மது கெளசி
நாட்டு வைத்தியர் நைனார் குழு 1 முதல் 6 வரை அட்மின்
3-119, ஆதிவிநாயகர் நகர்,செதலபதி
34- கூத்தனூர்
பூந்தோட்டம் - 609603
திருவாரூர் மாவட்டம்
தொடர்புக்கு 9843288240...With WhatsApp & Telegram

தாம்பத்யத்தில் முழுமை பெற.,.

தாம்பத்யத்தில் முழுமைபெற உடல் மட்டும் வலுவாக இருந்து பயனில்லை.மனமும் வலுவாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தில் பெண்கள் மிக வலிமையை உடையவ்ர்களாகவும் ஆண்கள் வலிமை அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆண் தன் வேலையை முடித்துக் கொள்வதிலேயே மிக அதிக ஆர்வம் காட்டுகிறான்.பெண்ணைப்பற்றி கவலைப்படுவதில்லை.

கணவன் மனைவி உறவில் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது உறவு கொண்டு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ மனைவியை நெருங்கவே கூடாது.இருவரும் பரஸ்பரம் மனம் விரும்பி சேரும் உறவே மிகச்சிறந்ததும் ஆரோக்கியமானதும் ஆகும்.

மனைவியின் மனம் அறிந்தும் அவள் உடல் நிலை அறிந்தும் உறவுக்கு தயாராக வேண்டும்.அதிகமான ஆர்வம் உறவை பாதியில் முடித்து விடும்.நிதானமும் டென்ஷன் இல்லாமல் இருப்பதும் உறவுக்கு மிகமிக அவசியம்.

விரைந்து முடிக்கப்படும் உறவுகள் அனைத்தும் ஆணின் மனவலிமை இல்லாததையே வெளிப்படுத்தும்.

நம் உறுப்பிலிருந்து வெளியாகும் விந்து நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.நாம் நினைத்தால்தான் வெளியாக வேண்டும்.

இந்தக்கட்டுப்பாட்டில் யார் மனதை வைத்து இருக்கின்றார்களோ அவர்களால் மட்டும்தான் பெண்ணை முழுமையாக திருப்தி படுத்த முடியும். மற்றவர்களால் உறவு கொள்ள முடியுமே தவிர திருப்தி படுத்த முடியாது.

உலகில் வாழும் பெண்களில் அதிகமானோர் முழுமையான திருப்தி கிடைக்காமல்,கணவனின் திருப்திக்காகவே வாழ்ந்து வருகின்றனர்.

மனவலிமை ஏற்பட என்ன செய்ய வேண்டும்...
உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் நடைப்பயிற்சி அவசியம் வேண்டும்.

மனதை ஓர்மைப்படுத்தும் ஏதாவது தஸ்பீஹ் ஓதிக்கொள்ளலாம்.அல்லது பொறுமையாக 1 முதல் 100 வரை நேராகவும் பிறகு 100 முதல் 1 வரை தலைகீழாகவும் எண்ணிக்கொண்டே உங்கள் முழு கவனத்தையும் எண்ணிக்கையில் வைய்யுங்கள். இது உறவுக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செய்ய வேண்டும்.

இப்படி செய்து மனதை கட்டுப்படுத்தினால் கணவன் மனைவி தாம்பத்ய உறவு நன்றாக இருக்கும்.அவர்களுக்குள் பிரிவு வராது. அவர்களின் வாழ்வு முழுமையானதாக இருக்கும்.சிறப்பான தம்பதியர்களாக வாழ்வார்கள்..இன்ஷா அல்லாஹ்..

ஆண்மைக்கு ராஜ தாது மருந்து கிடைக்கும்.

திங்கள், ஏப்ரல் 08, 2024

தஆலாவினால்வழங்கப்பட்டுள்ளஅருட்கொடைகளுக்காக ,செல்வங்களுக்காக,நற்பாக்கியங்களுக்காக நான் யார் மீதும்பொறாமை கொள்வதுமில்லை!

ஒரு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் தம் தோழர்களுடன் அமர்ந்து கொண்டு இருக்கும் வேளையில் தமது தோழர்களைப் பார்த்து 
*"சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்!"* என்று  கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் உள்ளே நுழைந்தார், அவருடைய தாடியிலிருந்து வுழூவின் காரணமாக  தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இடது கையில் செருப்பைப் பிடித்தபடியே எமக்கு ஸலாம் கூறினார்.

.அடுத்த நாளும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 *"சுவர்க்கவாசிகளில் ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்!* என்று கூறினார்கள். அப்போது முதல் நாள் நுழைந்த அதே அன்சாரி உள்ளே நுழைந்தார். 

மூன்றாம் நாளும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  *"சுவர்க்கவாசிகளில் ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்"* என்று கூறினார்கள்.திடீரென்று,அதே அன்சாரி மனிதர் தான்மஸ்ஜிதுக்குள் நுழைகிறார்!

சபை முடிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெளியேறியதும், ​​*அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ்,*எனும் ஸஹாபியவர்கள்  எழுந்து சென்று அந்த அன்ஸாரியிடம் இவ்வாறு  கூறினார்: *"நான் என் தந்தையிடம் வாக்குவாதப்பட்டு , மூன்று நாட்களுக்கு அவரைப் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்தேன், நீங்கள் விரும்பினால், இந்த மூன்று நாட்கள் கழியும் வரை நீங்கள் என்னை உங்களுடன் தங்க வைத்துக்கொள்வீர்களா?"* என்று அவரிடம் வினவினார்.

அதற்கு அந்த அன்சாரி அவர்கள் *"உங்கள் வரவு நல்வரவாகட்டும்"* என்று அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்துச் சென்றார்.  அப்துல்லாஹ் இப்னு அம்று இப்னு ஆஸ் (றழி) அவர்களும் அவருடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.

ஆனாலும், அவர் அந்த அன்சாரி இரவுத் தொழுகைக்கு எழுவதைப் பார்க்கவில்லை, இரவில் விழிக்கும் சமயத்தில் அல்லாஹ் தஆலாவை திக்ர் செய்வதைத் தவிரவும்,பகலிலும் இரவிலும் பர்ழான தொழுகைகளைத்தவிரவும் ஏனைய நபித்தோழர்கள் செய்வதைப் போன்ற   வேறு எந்த மேலதிகமான இபாதத்தையும் அவர் செய்யவில்லை.இரவில் விழித்துக்கொண்டால் முஅத்தின் பஜ்ர்  தொழுகைக்கு அதான் சொல்லும் வரை அவரது படுக்கையில் இருந்தவாறு *திக்ர்* செய்தவாறு இருந்தார். அதான் ஒலித்ததும் எழுந்து தொழுகையை நிறைவேற்றுபவராக இருந்தார்.மூன்று நாட்கள் கடந்தும் , அப்துல்லா இப்னு அம்று இப்னு ஆஸ் அவர்கள் ஸஹாபாத் தோழர்கள் செய்யும் இபாதத்தின் அளவிற்கு மேலதிகமாக இந்ந அன்சாரி எதையும் செய்ததைக்காணாததால். அந்த அன்சாரியின் *இபாதத்* விடயத்தில் சிறிது தரக்குறைவாக அவரைக் கருதினார்.

பின்னர் அவர் அந்த அன்சாரி மனிதரிடம்  *"தோழரே! எனக்கும் எனது தந்தைக்கும் இடையில் எந்தப் பிரிவினையோ சண்டையோ இல்லை.  நாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில்  மஸ்ஜிதில் அமர்ந்து இருக்கும் வேளை   "மூன்று முறை, சுவர்க்கவாசிகளில் இருந்து ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார் என்று கூறினார்கள். , அந்த மூன்று முறைகளிலும் நீங்கள் தான் வந்தீர்கள்,எனவே நானும்  சுவர்க்கத்தை அடைந்து கொள்ளும் வேட்கையில், நீங்கள் என்ன விஷேட அமல்கள் செய்கிறீர்கள் என்பதை அறியவிரும்பினேன்.அதனால்தான் உங்கள் வீட்டில் தங்கினேன். ஆனாலும், நீங்கள் பர்ழான தொழுகையை நிறைவேற்றுவதைத் தவிரவும்,  இரவில் விழிக்கும் நேரங்களில் திக்ர் செய்வதைத் தவிரவும்  நபித்தோழர்கள் செய்வதைப் போன்ற   மேலதிகமான எந்தவொரு அமலை நீங்கள் செய்வதையும் நான்  உங்களிடம் காணவில்லையே!"* என்று ஆச்சரியமாக  கூறவே, அதற்கு அந்த அன்சாரி தோழர் இவ்வாறு கூறினார்:*"ஆம்,நீங்கள் பார்த்ததைத் தவிர மேலதிகமான  வேறு எந்த இபாதத்தும் என்னிடம் இல்லை.*
*ஆனாலும் எந்த  முஸ்லிம்சகோதரர்களைப்பற்றி எத்தகைய குரோதமோ, வஞ்சகமோ, தீய எண்ணங்களோ எனக்கு  கிடையாது.*

*அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் தஆலாவினால்வழங்கப்பட்டுள்ளஅருட்கொடைகளுக்காக ,செல்வங்களுக்காக,நற்பாக்கியங்களுக்காக நான் யார் மீதும்பொறாமை கொள்வதுமில்லை!*
என்று கூறினார்.

இதைக்கேட்ட 
அப்துல்லாஹ்  இப்னு இப்னு அம்று இப்னு ஆஸ் அவர்கள் அவரைப் பார்த்து  இவ்வாறு கூறினார்கள்:
 *"ஓ..அப்படியா? உங்களது இந்த நற்பண்பு தான் சுவர்க்கவாசி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான காரணமாக இருந்திருக்கும்."அதனைத் தான் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எம்மிடம் மூன்று நாட்களும் சுவர்க்கவாசி என்று உங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள்"*

*படிப்பினை:*
 *1.உங்கள் இதயத்தை சீர்திருத்திக்கொள்ளுங்கள்,அதனை பொறாமை, குரோதம், வஞ்சகம் போன்றவற்றை விட்டும்  தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பர்ழான, கடமையான அமல்களை மாத்திரமே செய்கிறீர்கள் என்பது உங்களை வருத்தாது, உங்களைக்காயப்படுத்தாது.*

 *ஏனென்றால் மக்களின் இதயங்களை அழித்து விடக்கூடிய  செயல்களை நீங்கள் செய்தால் மட்டுமே அது உங்களைக் காயப்படுத்தும், உங்களை வருத்தும்!*

*2 "நான் எவருடனும் வஞ்சகத்துடன் நடந்து கொள்வதும் இல்லை" என்றஅவரது கூற்று அதாவது:வியாபாரத்தில் நேர்மை, கொடுக்கல் வாங்கலில்  நேர்மை , விற்பதில் நேர்மை , வாங்குவதில் நேர்மை,அறிவுரை கூறுவதில் கூட நேர்மை  இப்படி எல்லா விஷயங்களிலும், என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் "யார் எங்களை ஏமாற்றுவாறோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல" என்று  நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.*

 *3."அவர்களுக்கு  அல்லாஹ் தஆலாவினால்வழங்கப்பட்டுள்ளஅருட்கொடைகளுக்காக ,செல்வங்களுக்காக, நற்பாக்கியங்களுக்காக நான் யார் மீதும் பொறாமையோ, குரோதமோ கொள்வதுமில்லை! என்பதன் அர்த்தம்: "ஷிர்க்" என்ற தீய கொள்கைக்கு அடுத்தபடியாக இதயத்தை மாசுபடுத்தும் தீயகொள்கை பொறாமை எனும் தீயபண்பாகும்  , மற்றும் "பொறாமை" என்ற தீய பண்பு தான்  அல்லாஹ் தஆலாவின் கட்டளைக்கு ,அடிபணியாது மாறு செய்யப்பட்ட  முதல் பாவம்,  அல்லாஹ் தஆலாவின் கட்டளை பிரகாரம்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸ்  ஸஜ்தா செய்ய மறுத்ததன் காரணம் பொறாமை என்ற இத்தீயபண்பு தான்.அவன் ஆதம் மீது வெறுப்பு கொள்வதற்கும் அல்லாஹ் தஆலாவின்  கட்டளைக்குஅடிபணிய மறுத்ததற்கும் இந்த பொறாமையைத் தவிர வேறொன்றுமிருக்கவில்லை.ஆதமை விட அவன் சிறந்தவன், அவன்  தான் அந்தஸ்தில் உயர்ந்தவன், ஆதமை விட, தானே இந்த நிலைக்கு  அதாவது ஸஜ்தா செய்யப்படுவதற்கு  தகுதியானவன் என கருதினான்.*

*4.* *"அல்லாஹ் தஆலா உங்களுக்கு அருளியிருப்பவற்றில் திருப்தியடையுங்கள், அப்படியாயின், நீங்கள் தான் மக்களிலே மிகவும்  செல்வந்தராக இருப்பீர்கள், மற்றவர்களிடம் உள்ள அருட்கொடைகளைப் பார்க்காதீர்கள், ஏனென்றால்,நீங்கள் அவ்வாறு  செய்யுமிடத்து,அல்லாஹ் தஆலா உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக அவனைப்புகழுவதற்கு, நன்றி சொல்வதற்கு  நேரம் இருக்காது.* 

*5.நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்:*

 *"பொறாமையைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், நெருப்பு மரத்தை எரிப்பது போல பொறாமை நல்ல செயல்களை எரித்து விடும்"!* 

       அல்லாஹ் போதுமானவன்❤️

சனி, ஏப்ரல் 06, 2024

இசையும். இஸ்லாமும்,

இசை இஸ்லாத்தில் ஹராம் (தடை செய்யப்பட்டுள்ளது) என்பது உங்களுக்கு  தெரியாதா...??

இசை இஸ்லாத்தில் ஹராம்? தடை செய்யப்பட்டு உள்ளது. 

இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

صحيح البخاري

5590 – وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللَّهِ مَا كَذَبَنِي: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ – يَعْنِي الفَقِيرَ – لِحَاجَةٍ فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمُ اللَّهُ، وَيَضَعُ العَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ القِيَامَةِ "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, #இசைக்_கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.

நூல் :  புகாரி 5590

விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவற்றை ஆகும் எனக் கருதுவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து இசை ஆகுமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

مسند أحمد

3274 – حدثنا زكريا أخبرنا عُبيد الله عن عبد الكريم عن قيس بن حَبْتَر عن ابن عباس قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: "إن الله حرم عليكم الخمر والميسر والكُوبة"، وقال: "كل مسكر حرام".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், #மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மத்

مسند أحمد

4965 – حدثنا الوليد بن مسلم حدثنا سعيد بن عبد العزيز، ومَخْلَد بن يزيد أَخبرنا سعيد، المِعنى، عن سليمان بن موسى عن نافع مولِى ابن عمر: سمع ابن عمر صوت زَمارة راع، فوضع إصبعيه في أذنيه، وعدل راحلتَه عن الطريق، وهو يقول: يا نافع، اتسمع؟، فأَقول: نعم، قال: فيمضي، حتى قلت: ِ لا، قال: فِوضع يديه، وأعاد الراحلة إلى الطريق، وقال: رأيت رسول الله -صلي الله عليه وسلم – وسمِع صوت زَمّارة راع فصنَع مثل هذا.

ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)

நூல் : அஹ்மத்

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வெள்ளி, ஏப்ரல் 05, 2024

ஸதகத்துல் பிஃத்ர் ,

கத்துல் ஃபித்ர் என்றால் என்ன?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரை நோன்பாளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்கள், தீய வார்த்தைகளை விட்டு தூய்மைப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் கடமையாக்கினார்கள்.


🔗 *ஸதகத்துல் ஃபித்ர் கடமையாவதற்கான நிபந்தனைகள்*


1. முஸ்லிமாக இருக்க வேண்டும். 


2. நிஸாபை அடைந்து இருக்க வேண்டும் அதாவது, தங்கம் 87.480 கிராம் ( _சுமார் 11 பவுன்_ ), வெள்ளி 612 கிராம் அல்லது வெள்ளியின் மதிப்பளவுள்ள தொகை. ( *தற்சமயம் வெள்ளி ஒரு கிராம் 80 ரூபாய் வீதம் ரூ.48,960/-* ) பணமாகவோ, வியாபார சரக்காகவோ தனக்கு தரவேண்டிய கடனாகவோ இருந்தால் அவர் மீது ஸதகத்துல் ஃபித்ர் கடமையாகும்.


3. ஸதகத்துல் பித்ர், ஈதுப் பெருநாள் தினத்தில் ஃபஜ்ருடைய நேரம் வரும் போது கடமையாகும்.


📌 *எப்போது கொடுக்க வேண்டும்?* 


ஸதகத்துல் பித்ர், ஈதுப் பெருநாள் தினத்தில் ஈத்காவிற்கு செல்வதற்கு முன்பாக நிறைவேற்றி விடுவது முஸ்தஹப்பாகும்.

( *குறிப்பு* : _பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் கொடுப்பதும் கூடும்_ )


➡️ *யார் யாருக்காக கொடுக்க வேண்டும்?* 


ஸதகத்துல் ஃபித்ர் ஒருவர் *தனக்காகவும், தன்னுடைய வீட்டில் உள்ள சிறிய பிள்ளைகளுக்காகவும்* கொடுக்க வேண்டும்.


➡️ *எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


 *1 கிலோ 633 கிராம்* கோதுமை அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் *90 ரூபாய்* என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


🔗 *ஸதகத்துல் ஃபித்ர் யாருக்கு கொடுக்க வேண்டும்?*


ஜகாத் வாங்க தகுதி உள்ளவர்களுக்கு ஸதகத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டும்.


 *அதன் விபரமாவது:* 


1️⃣ *மிஸ்கீன்* : எதுவும் இல்லாத ஏழை.


2️⃣ *ஃபகீர்* : ஜகாத் உடைய நிசாப் அளவு நகையோ, பணமோ, வியாபார சரக்கோ கையிருப்பு இல்லாதவர்.


3️⃣ *கடனாளி:* கொடுக்க வேண்டிய கடன் போக மேல் மிச்சமாக நிசாப் அளவு பணம் இல்லாதவர்.


4️⃣ *பிரயாணி* : பயணத்தில் வந்த இடத்தில் கை செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர். அல்லது பணத்தை தவற விட்டு ஊருக்கு திரும்பி செல்ல வழியின்றி சிரமப்படுபவர். இத்தகையோர் சொந்த ஊரில் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் ஜகாத் தொகை பெறுவது கூடும்.


5️⃣ *ஜகாத் வசூலிப்பவர்* : ஏழைகள் மற்றும் வசதியற்ற மாணவர்களுக்காக ஜகாத் தொகையை வசூல் செய்யும் நபருக்கு அவரது உழைப்பிற்கு தோதுவாக ஜகாத் தொகையிலிருந்து ஊதியம் பெறுவது ஆகுமானதாகும்.


 *குறிப்பு* : _ஸதகத்துல் ஃபித்ருக்கு ஜகாத்தை போல நிசாப் ஒரு வருடம் கடந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை._ 


ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

எவ்வளவு? எவர்களுக்காக?

‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.

”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.

இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.

எப்போது? எதற்காக!

‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).

இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.

நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.

இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)

எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.

எங்கே? எவர்களுக்கு?

‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.

எதை வழங்குவது?

‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.

இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)

இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.

இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.

இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,

(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.

(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.

(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.

(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.

எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.

ஒரு ஆலோசனை:

ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்

நபி ஈஸா அலை அவர்கள் வரலாறு ,

நபி ஈசா  (அலை) அவர்கள் வரலாறு :-

பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் இப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் நபிமார்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்து வருகின்றோம் நாம் முன்னைய நபிமார்கள் வரலாற்றில் நேற்றைய தினம்  நபி ஈசா  (அலை) அவர்கள் தாயார் மர்யம்   (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்தோம். மேலும் இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ் அவர்கள் புதல்வன்  நபி ஈசா (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ்.

நபி ஈசா  (அலை) அவர்கள் வரலாறு :-

யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும். பைளாவி இமாமோ இது ஹீப்ருமொழி சொல் என கூறுகிறார்கள். ஆனால் ஏனையோர் இது வெள்ளை என்று பொருள்படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது என்று சொல்கின்றனர்.

ஈஸா மஸீஹ் எனும் பெயர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. கிரேக்கமொழியில் ‘ஜீஸஸ் கிறைஸ்ட்‘என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது. மஸஹ் என்றால் தடவுதல் என்று பொருள்படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதால் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்று சொல்லுவார்கள். அதுவே கிரேக்க மொழியில் கிரைஸ்ட் ஆகியிருக்கிறது.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 20இருக்கும்போது தங்களது சிற்றன்னை நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஈஷாஉ அவர்கள் வீட்டிற்குச் சென்று ஒரு மறைவான இடத்திற்குச் சென்று குளிப்பதற்காக உடைகளை மாற்றி உடுத்திக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற சம்பவத்தை பற்றி அல்லாஹ் தனது திருமையில் கூறுகிறான்.

இவ்வேதத்தில் (ஈஸா நபியின் தாயாராகிய) மர்;யமைப் பற்றியும் (சிறிது) கூறும். அவர் தம் குடும்பத்தினரை விட்டு விலகி,கிழக்குத் திசையிலுள்ள (தம்) அறைக்குச் சென்று, (குளிப்பதற்காகத்) தம் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில், (ஜிப்ரயீல் என்னும்) தம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.(மர்யம் அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான், உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… (இங்கிருந்து அப்புறப்பட்டுவிடும்)’ என்றார்.

அதற்கவர், ‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப் பெற்ற (மலக்காகிய) ஒரு தூதன்தான் என்றார்.

அறத்கவர்> ‘எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே’ என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே (நடைபெறும்) அது எனக்கு எளிது. அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும்,நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் கற்பனை செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம்’ என்றுஉமதிறைவன் கூறுகிறான்’ என்றார். பின்னர் (தானாகவே) மர்யமுக்குக் கர்ப்பமேற்பட்டுக் கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலிருந்தே வெளியேறித்) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.’

– அல்-குர்ஆன் 19:16-22

இச்சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்;>

‘(மேலும் மர்யமை நோக்கி) மலக்குகள் (ஆகுக! என்ற) ஒரு சொல்லைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாரயங் கூறுகின்றான். அதன் பெயர், ‘மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்’ என்பதாகும். இவர் இம்மை-மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்’ என்று கூறினார்.

அன்றி, ‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போது (தம் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி)யும், (தம் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்'(என்றும் கூறினார்கள்)

(அதற்கு மர்யம் தம் இறைவனை நோக்கி) ‘என் இறைவனே! எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும்போது,எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்’ என்று கூறினார். (அதற்கு) ‘இவ்வாறே,அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால்,அதனை ‘ஆகுக’ என அவன் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்’ என்று கூறினான்.’

-அல்-குர்ஆன் 3: 45-47

அதன்பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஊதினார்கள். உடனே கர்ப்பம் உண்டாயிற்று. இவ்வாறு அவர் இறைவனுடைய ஆவியை ஊதி இவர்கள் பிறந்ததினால் ரூஹுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர். சில காலத்திற்குப் பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடம்பில் மாறுதல் உண்டானது. கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட்டன. இதனைக் கண்ட ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் கவலை கொண்டார்கள். இதனை தமது மனைவியிடம் மெதுவாக சொன்னார்கள்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ஜகரிய்யா நபி அவர்களின் மனைவியார்,”நல்ல செய்தியைச் சொன்னீர்கள். இதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?”என்ற கேட்டார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் எவ்வளவு பெரிய அவமானச் செய்தியை உன்னிடம் கூறுகிறேன். நீ அதிர்ச்சியடைவாய் என்று பார்த்தேன். ஆனால் நீ ஆனந்தப்படுகிறாயே! என்று கூறினார்கள்.

உடனே ஈசாஉ அவர்கள், ‘தகப்பன் இல்லாமல் ஒரு நபி பிறப்பார். அவர் மக்களுக்கு நேர்வழி காட்டுவதோடு,அவர்களின் பிணிகளையும் நீக்குவார். மரித்தவர்களை உயிர்ப்பிப்பார். அவரால் மற்றும் பல அற்புதங்களும் நிகழும் என்று நீங்கள் தவ்ராத் வேதத்தில் படித்ததில்லையா? என்றும், அந்த நபியின் கரு இதுவாகத்தான் இருக்கும் என்றும் என் மனசாட்சி கூறுகிறது. எனவே மர்யமை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்து வரப்பட்டதும்,நீ ரெம்ப அதிர்ஷ்டசாலிதான். உன் வயிற்றில் உள்ள குழந்தை பிறந்து பல்வேறு அற்புதங்களை செய்யப் போகிறது என்று சொன்னார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ இது உண்மைதானா? என்று கேட்டார்கள். ஆம் அவற்றையெல்லாம் நான் தவ்றாத்தில் படித்துள்ளேன் என்று சொன்னார்கள். இந்த குழந்தை அந்த நபிதான் என்று எப்படி நம்புவது? அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உனது வயிற்றிலிருக்கும் குழந்தை அந்தநபியேதான். இதற்குரிய இப்பொழுதைய ஆதாரம் என்னவென்றால்,நான் உன்னைச் சந்தித்ததுமே எனது வயிற்றிலிருக்கும் குழந்தை உனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தலை தாழ்த்துவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது’ என்றார் ஈஷாஉ. அச்சமயத்தில் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈசாஉ அவர்களின் கர்ப்பத்தில் இருந்தார்கள்.

அதேசமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ‘அச்சமயத்தில் எனது கருவிலிருக்கும் குழந்தையும் அசைவதை நான் உணர்ந்தேன்;’ என்றார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிற்றன்னையின் மகன் ஒருவர் யூசுஃபுந் நஜ்ஜார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தச்சுச்தொழில் செய்து கொண்டு,மீதியுள்ள நேரத்தில் இறைவனை வணங்கி வந்தார். அவருக்கு இச்செய்தி கிடைத்ததும்,மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களி;டம் அவர்கள் கர்ப்பமான விசயத்தை பற்றி கேட்டார்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சுத்தமானவள் என்றும்,இது அல்லாஹ்வின் நாட்டம் என்றும் கூறினாள்.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிரவச காலம் நெருங்கியது. அனைவரும் ஆலோசனை செய்து,யூசுஃப் நஜ்ஜார் உடன் வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள். பைத்துல் லஹ்ம் என்னும் இடத்தை அடைந்ததும் பிரவச வேதனை ஏற்பட்டு அங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தனர்.

கவலை மிகுதியால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ,இறைவன் அசரீரி மூலமாக ஆறுதல் கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பட்டுப்போன பேரீத்தம் பழ மரத்தன் கிளைகளைப் பிடித்து உலுக்குமாறு கூற, அவர்களும் அவ்விதமே செய்ய,கனிகள் உதிர்ந்தன. அருகில் நீருற்றும் உருவாயிற்று. பேரீத்;தங்கனிகளை உண்டும்,அங்கிருந்த நீரை அருந்தியும் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பிறந்தத எட்டாம் நாள் அவர்களுக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்து ‘ஈஸாஹ்‘ என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு யூசுப் நஜ்ஜாருடன் தங்கள் வீடு வந்து சேர்ந்ததும் உறவினர்கள்,ஜனங்கள்,எல்லோரும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்தது அந்த குழந்தையைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? இதற்கு தந்தை யார்? நல்ல குடும்பத்தில் பிறந்த நீ இப்படி செய்வது உனக்கு வெட்கமில்லையா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர். இச்சமயம் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கேள்வவிகளுக்கெல்லாம் எவ்விதப் பதிலும் கொடுக்காமல் குழந்தையை ஜாடை காட்டி குழந்தையிடம் கேளுங்கள் என்று சைகை மூலம் அறிவித்தார்கள்.

அச்சமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவுபடி நோன்பு நோற்றிருந்தார்;கள். அக்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் பிறருடன் பேசுவதையும் தடைபடுத்திக் கொண்டிருந்தனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=313656229587078&id=100028281103831

தங்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறாது குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டுகிறார்களே! என்று குழந்தை எப்படி பேசும்? நாங்கள் பைத்தியக்காரர்களா? என்று அகங்காரத்துடன் வந்திருந்தவர்கள் கடும்கோபம் கொண்டனர்.

உடனே பால்குடித்துக் கொண்டிருந்த அக்குழந்தைத பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அக்கூட்டத்தினரைப் பார்த்து, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு இன்ஜீல் என்ற வேதத்தை அருளி,என்னைத் தனது நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும்,என் மீது பேரருள் புரிந்து கொண்டே இருப்பான். நான் இவ்வுலககில் இருந்து வரும்வரை,தொழுது கொண்டும்,ஏழை வரியைக் கொடுத்துக் கொண்டும் வருமாறு என்னை ஏவியுள்ளான். எனது தாய்க்கு நன்றி செலுத்தி வருமாறும் கூறியுள்ளான். என்னை அவன், என் வாழ்நாள் முழுவதும் வழி தவறச் செய்ய மாட்டான். என்மீது என்றென்றும் அவனது சாந்தியும்,சமாதானமும் நிலைத்து நிற்கும்’ என்று பேசினார்கள். அப்போது அவர்களது வயது நாற்பது நாட்கள்தான்.

இந்தச் சம்பவங்களை அல்லாஹ் தனது திருமறையில்:

அப்பால்,மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து,முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா”என்று கூறி(அரற்றி)னார்.

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்”என்று அழைத்து கூறினார்.

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால்,“மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்”என்று கூறும்.

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”

“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால்,தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?”என்று கூறினார்கள்.

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும்,என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

“இன்னும்,நான் எங்கிருந்தாலும்,அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும்,நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும்,ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

. “இன்னும்,நான் பிறந்த நாளிலும்,நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்”என்று (அக்குழந்தை) கூறியது.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

-அல்-குர்ஆன் 19:23-34

பிறந்து நாற்பதே நாள் ஆன குழந்தை பேசியதும் வந்தவர்களிடையே ஒரே குழப்பம் ஏற்பட்டது. ஜகரிய்யாவையும்,யூசுஃபுந் நஜ்ஜார் ஆகியோர்தான் இதற்கு காரணம். அவர்களை கொன்று விட வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம் என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

இதற்கிடையே வானஇயல் நிபுணர்கள் வானத்தில் புதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘இது உலகில் ஒரு நபி தோன்றியிருப்பதற்கான அடையாளமாக இருக்கிறது’ என்றார்கள். பனீஇஸ்ரவேலர்களளின் மதகுருமார்கள் வேதங்களைப் புரட்டிப் பார்த்து,இச்சமயத்தில் எங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தேவத் தூதர் பெத்லஹேமில் பிறந்து விட்டார்’ என்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்நாட்டு மன்னனான ஐரதூஸ் இச்செய்தி கேட்டு ஆத்திரப்பட்டான். அந்த குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று எண்ணி அக்குழந்தையை கொன்றுவிட அவன் தீர்மானித்தான்.

அரசனின் இந்த எண்ணத்தை வஹீ மூலம் அல்லாஹ் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிவத்து, உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றுவிட கட்டளையிட்டான். யூசுபு நஜ்ஜாரின் துணையைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி எகிப்து சென்று அங்கு நூல் நூற்று அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டும்,வயல்களில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி உணவு சமைத்தும் மிகவும் கஷ்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யூசுப் நஜ்ஜாரும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி விற்று,அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்து உதவி செய்து வந்தார்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வயது ஆனதும் அவர்களை அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கல்வி கற்க ஒரு ஆசிரியரிடம் சேர்த்தார்கள். ஆசிரியர் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை முழுமையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதனைக் கண்ட ஆசிரியர் அவர்கள்,இந்த குழந்தை அறிவில் என்னைவிட பன்மடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே அதற்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீங்கள் கற்றுக் கொடுக்காவிட்டாலும் இவனை உங்கள் அருகிலேயே சிறிது காலம் இருக்கவிடுங்ககள்’ என்று கூறி பாலகரான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த ஆசிரியரிடமே விட்டுச் சென்றார்கள். இப்படியே சில காலம் சென்றது.

வாலிபரான ஈஸா அவர்கள்,மக்களை நேர்வழிபடுத்த எவ்வளவோ முயன்றார்கள். அவர்களைக் கண்டாலே மக்களுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. தகப்பனில்லாது பிறந்த நீரா எமக்கு புத்தி சொல்ல வந்தீர்? காலம் காலமாக நமது மூதாதையர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நிந்திக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சொன்னதோடு, அவர்களை தீர்த்துக் கட்டவும் முயன்றார்கள்.

பனீ இஸ்ரவேலர்களிடம் தான் நபி என்பதை அறிவித்ததோடு,அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வருகையைப் பற்றிக் குறிப்பட்டதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

‘மர்யமுடைய மகள் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான்,உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துகிறேன். எனக்குப் பின்னர், ‘அஹ்மத்‘என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான், (உங்களுக்கு) நன்மாராயம் கூறுகிறேன்’ என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த சமயத்தில், (அவரை விசுவாசிக்காது) ‘இது தெளிவான சூனியம்!’ என்று அவர்கள் கூறினர்.’

-அல்-குர்ஆன் 61:6

ஒரு சமயம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலுள்ள நைல் நதியோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நதி கரையோரத்தில் சில சலவைத் தொழிலாளிகள், அழுக்கு துணிகளை மூட்டை மூட்டையாகக் குவித்து வைத்துக் கொண்டு துவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கொண்டு உங்கள் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று உபதேசம் செய்தார்கள். இவர்களின் உபதேசத்தைக் கேட்டு சலவைத் தொழிலாளிகள் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் மீது விசுவாசம் கொண்டார்கள்.

துணிக்கு சாயம் ஏற்றும் தொழில் செய்பவரிடம் சென்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழில் கற்க ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு, ஒவ்வொரு பானையிலும் சாயத்திற்கு ஏற்றவாறு துணிகளை போட்டு சாயம் ஏற்றச் சொன்னார்கள். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனைத்து துணிகளையும் ஒரே பானையில் போட்டு சாயத்தில் ஏற்றினார்கள். சாயக்காரர் வந்து, மிகவும் கோபப்பட்டு, துணிக்காரர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று அங்கலாய்த்தார். அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி ஒவ்வொரு துணியாக எடுங்கள். நீங்கள் நினைத்த சாயம் அந்தந்த துணிகளில் இருக்க காண்பீர்கள் என்று சொன்னார்கள். அதன்படி அவன் செய்ய, அவ்வாறே வந்தது. இதைக் கண்டு அவன் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஈமான் கொண்டான்.

மன்னன் ஐரதூஸ் இறந்த சேதி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், யூசுப் நஜ்ஜார் அவர்களையும் அழைத்துக் கொண்டு பைத்துல் முகத்தஸ் திரும்பினார்கள். வழியில் அவர்கள நாசரேத் என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தார்கள். இந்த நாசரேத் என்ற ஊரில் அவர்கள் தங்கியிருந்ததன் காரணமாகத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனிலல் கிறித்துவர்களை ‘நஸரா’ என்று குறிப்பிட்டுள்ளான்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 30ஆகியது. ஒலிவ இலைகளைச சேகரித்து வருவதற்காக அவாக்ள் தங்கள் தாயுடன் ஒரு மலைமீது ஏறினர். சில இலைகளைப் பறித்துத் தாயிடம் ஒப்படைத்து விட்டு,அந்த மலையின் ஓரிடத்தில் அமர்ந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அச்சமயத்தில் அவர்களின் முன் ஒரு பேரொளி தோன்றியது. திடுக்கிட்ட அவர்கள் அதனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விடத்தில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது இன்ஜீல் வேதமாகும். அல்லாஹ் பனீ இஸ்ரவேலர்களுக்கு நேர்வழிக்காட்டக் கூடிய தூதராக உங்களை நியமித்துள்ளான். அவர்களை விக்கிரக ஆராதனையை விட்டு விலக்கி, அல்லாஹ்வை மட்டும் வணங்கிவர வைப்பீர்களாக!’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பாஷையான சுர்யானீ (அரேமிய பாஷை)பாசையில் வேதம் இறக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த உபதேசங்களெல்லாம் அவர்களது நெஞ்சத்தில் ஆழப் பதிந்து விட்டன. இந்த இன்ஜீல் வேதம் இறக்கபட்டது ரமலான் மாதம் 18அன்று. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்ட ஜபூர் வேதம் இறக்கப்பட்ட 1,200வருடங்களுக்குப் பிறகுதான் இந்த இன்ஜீல் வேதம் இறக்கப்பட்டதென்று ஒரு குறிப்பு காணப்படுகிறது.

அதன்பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தாயிடம் தான் நபியாக அனுப்பப்பட்ட விசயத்தையும்,அதனால் தங்களுக்கு சேவை புரிவதில் அதிகமாக ஈடுபட முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னுடைய இந்த நிலையைப் பற்றி அல்லாஹ் நீ பிறக்கும் முன்பே எனக்கு அறிவித்து விட்டான். அதனால் நீ எதற்கும் கவலைப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வா என்று சொன்னார்கள்.

மலையிலிருந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் வழியில் ஒரு குஷ்டரோகி தென்பட்டான். அவனை ஈஸா நபியவர்கள் தடவி இறைவனிடம் நோயை குணமாக்கும்படி இறைஞ்சினார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவன் பரிபூரணமாக குணமடைந்தான். அவன் இச்செய்தியை பைத்துல்முகத்தஸ் சென்று மக்களிடம் சொன்னான். இச்செய்தி காட்டுத்தீ போல நகரெங்கும் பரவி விட்டது.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகருக்குள் நுழைந்ததும், பிறவிக் குருடர்கள், ஊமையர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள் ஆகியோர் அவர்கள் முன்னால் கூடிநின்று தங்களையும் குணப்படுத்துமாறு வேண்டிநின்றனர். ஈஸா நபியவர்கள் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினார்கள்.

இப்பெரும் கூட்டத்தினரிடையே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்தியம்பினார்கள். விக்கிரக வணக்கத்தை விட்டு விலகுமாறு வேண்டினார்கள். பனீ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது செய்துள்ள கிருபைகளையும்,உதவிகளையும் மறந்து விக்கிரகத் தொழும்பர்களாக மாறிவிட்டதையும் மதகுருமார்கள் இறைப் பணியை மறந்து விட்டு பேராசை பிடித்து வீண் ஆடம்பரவhழ்வில் அலைக்கழிந்து கிடப்பதையும் கடுமையாக சாடினார்கள்.

இதனால் பனீ இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியினரும்,மதகுருமார்களும் அவர்களுக்கு பரமவிரோதிகளாக மாறினர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சனிக்கிழமை அன்று குளக்கரையில் அமர்ந்து கொண்டு,களிமண்ணால் பறவைகளைப் போன்று உருவங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. ஈஸா நபியின் இச்செயலை அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும்,நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

– அல்குர்ஆன் 3:49

அப்படியானால் எலும்பில்லாத ஒரு பறசையைச் செய்து அதனைப் பறக்கச் செய்யுங்கள் பார்ப்போம் என்று கிண்டலாகக் கூறினர். ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வவ்வாலைப் போன்று ஒரு பறவையைக் களிமண்ணில் செய்து,அதன்மீது ஊதினார்கள். உடனே,அது உயிர்ப்பெற்று பறக்க ஆரம்பித்தது.

இவ்வளவு மகத்தான அற்புதத்தை ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டியும்,அந்தப் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாது,இது ஒரு கண்கட்டு வித்தை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் யாரும் இதைப் போல் செய்யலாம் என்றனர்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ என்னை நம்புங்கள். நான் அல்லாஹ்வின் தூதனே! இதனை நிரூபிப்பதற்காக அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு இது போன்ற இன்னும் பல அற்புதங்களை செய்து காட்டுவேன். பிறவிக் குருடர்களுக்கும்,பார்வை வரச் செய்வேன். குஷ்டரோகத்தையும் குணப்படுத்துவேன்’ என்று கூறினார்கள்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,இதனைப் பரிசோதிப்பதற்காக வேண்டி,அப்பகுதியிலிருந்த அத்தனைப் பிறவிக் குருடர்களையும்,குஷ்டரோகிகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் முன் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் அதிசயிக்கத்தக்க விதத்தில் அனைவரும் குணமாயினர். ஒரு நாளில் மட்டும் 50,000பேர் குணமடைந்ததாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

இச்செய்தி வெளியில் தெரியவாரம்பித்ததும் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களை நாடி வந்தனர். அவர்கள் அனைவரின் நோய்களையும் குணப்படுத்தினார்கள். இவ்வளவு செய்தும் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை நபி என்று நம்ப மறுத்தனர். மாறாக,இவர் பெரிய சூனியக்காரர் என்றே கூறி வந்தனர்.

ஈஸா நபியவர்கள் அவர்களை நோக்கி ‘நான் எத்தகைய அற்புதத்தை செய்து காட்டினால் என்னை நபி என்று நம்புவீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பனீ இஸ்ரவேலர்கள் ‘இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘சரி’ யென்று சொன்னார்கள்.

இதனால் ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மக்கள், அக்காலத்தில் மிகப் பெரிய அறிவாளியாகவும்,மருத்துவ நிபுணராகவும் இருந்த ஜாலினூஸ் என்பவரிடம் வந்து,இது பற்றி கேட்டனர். அவர் ஈஸா அவ்வாறு இறந்தவர்களை உயிர்ப்பிக்ச் செய்தால் அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றார்கள்.

உடனே அவர்கள் ஈஸா நபி அவர்களிடம் வந்து மூன்று நாட்களுக்கு முன்னர் ஆஸர் என்பவர் இறந்துவிட்டார். அவரது சடலத்தை உயிர்ப்பித்து காட்டுங்கள் என்றனர்.

அவர் அடக்கப்பட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றனர் ஈஸா நபி அவர்கள். அங்கு அவர்கள் அந்த சமாதிக்கருகில் சென்று, ‘அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். என்ன ஆச்சரியம். அவர் தூங்கியெழுந்தவரைப் போன்று சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பனீ இஸ்ரவேலர்களுக்கு அதை நம்பவே முடியவில்லை. இப்பவாது என்னை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டார்கள் ஈஸா நபியவர்கள்.

அதற்கு என்ன பதில் சொல்வது? என்று புரியாமல் நழுவிவிட்டனர். புதிதாக இறந்தவரைத்தான் உயிர்ப்பித்து விட்டார். இறந்து நீண்ட காலமாகிவிட்டவர்களை இவரால் எழுப்ப முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு பனீ இஸ்ரவேலர்கள் மீண்டும் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகி,புதிதாக இறந்துவிட்டவரைத்தான் நீங்கள் உயிர்ப்பித்து விட்டீர்கள். இறந்;து நீண்ட காலமாகிவிட்டவரை உங்களால் உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்கள்.

அல்லாஹ் நாடினால் எதுதான் நடக்காது? என்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமொழி பகர்ந்தனர்.

பனீ இஸ்ரவேலர்கள் மிகவும் சிதிலமடைந்து போயிருந்த ஒரு சமாதியைக் காட்டி,இங்கு அடக்கமானவர் நான்காயிரம் வருடங்களுக்கு முன் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெயர் ஸாம் என்றனர்.

உடனே ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் கூறியது போலவே அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஒரு மனிதர் எழுந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார். இம்மாதிரி இறந்து போன பலரை உயிர்ப்பித்து காட்டியும் பனீ இஸ்ரவேலர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவர்களில் 12பேர் மட்டும் அவர்கள் மீது விசுவாசம் கொண்டனர். இவர்களுக்கு ஹவாரிய்யூன்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையோர் சலவைத் தொழிலாளியாக இருந்தனர்.

இந்த ஹவாரிய்யூன்கள்தாம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதம சீடர்களாகச் செயல்பட்டு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கூடவே சென்று வருவார்கள். அவர்கள் காடு,மேடு,பள்ளம்,மலை,பாலைவனம் போன்ற இடங்களில் சுற்றித்திரிந்து மக்களுக்கு நற்போதனை புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் சீடர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்கள்.

தமது சீடர்களுக்கு பசி ஏற்படின் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு தரையில் தட்டுவார்கள். அதிலிருந்து ரொட்டி வரும். அதை பங்கிட்டுக் கொடுப்பார்கள். தண்ணீரையும் அவ்வாறே பெற்றுக் கொடுத்தனர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெட்டையாகவும் இல்லாது,குட்டையாகவும்இல்லாது நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள். அதிக வெண்மையும்,அதிக கறுப்புமில்லாது பொதுநிறமாக இருந்தார்கள்.கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடையையும் தொப்பியையும்அணிந்து வந்தார்கள். அவர்களது உடையில் பல ஒட்டுகள் இருந்தன. கிழிபடும் உடைகளை அவ்வப்போது தைத்துக் கொண்டனர். அதற்காக ஊசியையும்,நூலையும் தம் சட்டையில் வைத்துக் கொண்டனர். அவர்களின் கரத்தில் எப்போதும் ஒரு கம்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் சுற்றுப்பிராயணம் செய்யும் போது எவ்விடத்தில் இரவு வருகிறதோ அங்கேயே இரவை கழித்துக் கொள்வார்கள். படுக்கையில் மிருதுவான விரிப்புகளை விரிப்பதில்லை. அடிக்கடி நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்

நல்லோர்களின்அடி சுவடுகள் ..,

நல்லோர்களின்
அடி சுவடுகள்  .....

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப்  பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….
அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார். 

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார். 
ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).
நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்… 

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” 
(36:12)♥️

புதன், ஏப்ரல் 03, 2024

வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே,

வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே.* 
=========================

பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து அபூதர் (ரலி), “கறுப்பியின் மகனே! நீயுமா என்னைக் குறை சொல்கிறாய்?” என்று கேட்டபோது;

பிலால் (ரலி) திகைப்புடனும் கோபத்துடனும் எழுந்து சொன்னார்: “அல்லாஹ் மீதாணை! அல்லாஹ்வின் தூதரிடத்தில் இதை நான் சொல்வேன்”.

செய்தி அறிந்த நபிகளாரின் முகம் சிவந்தது. கேட்டார்கள்: “அபூதர்! அவருடைய தாயாரை இணைத்து அவரைக் குறை கூறினீரா? அறியாமைக் கால பழக்கம் இன்னும் உம்மிடம் இருக்கிறது”.

அதைக் கேட்ட அபூதர் (ரலி) அழுதார். தான் இன்னும் முழுமையாக இஸ்லாத்தில் நுழையவில்லையோ என்று நடுங்கினார். “அல்லாஹ்வின் தூதரே! என்னை மன்னியுங்கள்” என்று கூறியவர், அழுதவண்ணமே அங்கிருந்து வெளியேறி பிலால் (ரலி) அவர்களைத் தேடினார்.

நடந்து சென்றுகொண்டிருந்த பிலாலுக்கு முன்பாக வந்து தரையில் கன்னத்தை வைத்து பிலாலுடைய காலைப் பிடித்தவாறு, “பிலால்! உமது காலால் என் கன்னத்தை மிதிக்காதவரை என் கன்னத்தை நான் உயர்த்த மாட்டேன். நீர்தான் உயர்ந்தவர், நான் இழிவானவன்” என்றார்.

தாங்க முடியாமல் அழுதுவிட்டார் பிலால் (ரலி). தரையில் கிடந்த அபூதர்ரை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். கூறினார்: “ஒருமுறையேனும் அல்லாஹ்வுக்கு ஸுஜூத் செய்த இந்த முகத்தையா நான் மிதிப்பேன்? ஒருபோதும் இல்லை” என்றார்.

இருவரும் அழுதனர். கட்டியணைத்தனர்.

இன்று சிலர்... ஒருதடவையல்ல.. பலமுறை தவறாக நடக்கின்றனர். ஆயினும் ஒருமுறைகூட வருத்தம் தெரிவிப்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு “ஸாரி” கூட கேட்பதில்லை.

வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே. உயரிய பண்பாடு. வருத்தம் தெரிவிப்பதன் மூலம் இரு தரப்பிலும் பொறாமையும் கோபமும் அகன்றுவிடும்.  வருத்தம் தெரிவிப்பதற்குக் காலமோ பெரு முயற்சியோ தேவையுமில்லை. 

அனைவருக்கும் ஒருநாள் இறுதிப் பயணம் உண்டு. நமது கட்டுச்சாதமோ குறைவாக உள்ளது. வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மறுமை வெற்றியைப் பெற முயற்சி செய்ய வேண்டும்

இஸ்லாம்,

முதாயக் காவலரே!

 

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

  

இறைநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங்(கள் நன்மைக)ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறைநம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும்இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.   திருக்குர்ஆன்:- 9:128

 

நம்மைப் படைத்த ஏகனான அல்லாஹுத்தஆலா நம் மீது எல்லையில்லா அருளாளனாக நிகரில்லா கிருபையாளனாக எண்ணிலடங்கா அன்பாளனாக இருக்கிறான். தாயைவிட மேலான பாசம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ்நரகத்தின் வாசல்களை ஏழாகவும்சொர்க்கத்தின் வாயில்களை எட்டாகவும் அமைத்து தன் அருள் விசாலத்தை காட்டியுள்ளான். அல்லாஹ் நமக்கு செய்திருக்க அருள்கொடைகளை  சொல்லி முடிக்க நாவுகளில்லை. எழுதி முடிக்க வார்த்தைகளில்லை.

 

இறைவனின் பேரருள் மற்ற படைப்புகளை விட மனிதர்கள் மீது குறிப்பாக, நம் சமூகத்தின் மீது நிறைவாக சூழ்ந்திருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காருண்ய நபிகள் (ஸல்) அவர்கள் தான் என்று கூறினால் மிகையாகாது. பிற சமுதாயத்தினரைவிட நம்முடைய சமுதாயத்தினர் இறைவனாம் அல்லாஹ்விடம் மிக சிறப்பும் உயர்வும் பெற்றது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டுமென்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை செய்தியாகும்.

 

தன் வாழ்வின் முழு நேரமும் தன்னை நினைத்தும் தன் குடும்பத்தை நினைத்தும்  கவலைப்பட்டதைவிட தன் சமூகத்தை நினைத்து கவலைப்பட்டது தான் அதிகம்.

 

தன் சமூகத்தார் அனைவரும் இறைநம்பிக்கை கொள்ளவேண்டும். அவர்கள் அனைவரும் நரகில் இருந்து காப்பாற்றப்பட்டு சொர்க்கம் நுழைய வேண்டும் என்பது தான் நபியவர்களின் மிக உயர்வான ஆசையாக இருந்தது.

 

உம்மை திருப்தியடையச் செய்வோம்


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிய பிறகுதன் இரு கைகளையும் உயர்த்தியவாறு ( اَللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي ) "இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம் (இவர்களை காப்பாற்றுவாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். அழுதார்கள். அதற்கு அல்லாஹ், ( يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ فَقُلْ إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلاَ نَسُوءُكَ ) "ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று நாமும் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம். உம்மை கவலையடையச் செய்ய மாட்டோம் என்று கூறுக" என்றான். நூல்:- முஸ்லிம்-346

 

இறுதி நேரத்திற்கு முன்னர் 


அல்லாஹ்வின் தூதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வானவத்தூதர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒருநாள் வருகை தந்து,  "நாயகமே உங்களுடைய சமுதாயத்தில் எவர்தான் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுவதாக தங்களிடம் அறிவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான்" என்றார்கள். இதை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஜிப்ரயீல்! எனது சமுதாயத்தினர் மறதியில் மிகைத்தவர்கள். மேலெண்ணத்தில் மாறி திளைப்பவர்கள். ஆதலால் ஒரு ஆண்டு என்பது அவர்களது விசயத்தில் மிக பாரதூரமான கால கட்டம்" என்றார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அல்லாஹ் சொன்னதாக அறிவித்தார்கள். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை. அல்லாஹ் மீண்டும் ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒரு தினத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை.

 

அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான் இதிலும் அண்ணலாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

 

அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக "நாயகமே! உங்களது சமுதாயத்தினர் வாழ்நாள் முழுவதும் பாவமிழைத்து அதற்காக பாவமன்னிப்பு கோராமல் இருந்துவிட்டு இறுதி மூச்சு தொண்டையை அடைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, தான் செய்த அனைத்து பாவங்களையும் நினைத்து அதற்காக மனம்வருந்தி பேசுவதற்கு சக்தியற்ற அந்த நேரத்தில் ஜாடையால் மனவேதனையால் மன்னிப்புக்கோரினால் அதனையும் ஏற்றுக்கொண்டு  அத்தகையவர்களை மன்னித்துவிடுவேன்" என்று அறிவித்தான் என்றார்கள்.  அப்போது தான் கருணையே உருவான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருப்தியடைந்தார்கள். நூல். ஜுப்ததுல் வாயிலீன்.

 

தமது குடும்பத்தினரைவிட 


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فِي أُمَّتِهِ وَخَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ) ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விஷேச பிரார்த்தனை உண்டு. எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேசப்  பிரார்த்தனையை மறுமையில் என் சமூகத்திற்கு பரிந்துரை செய்ய  பத்திரப்படுத்திவிட்டேன். நூல்:- முஸ்லிம்-345


ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது பேரர் ஹசன் (ரலி) அவர்களுக்கு உதட்டிலும் இன்னொரு பேரர் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். ஹசன் (ரலி) அவர்கள் இந்த விசயத்தை தன் தாயார் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள். உடனே ஃபாத்திமா (ரலி)  அவர்கள் தனது தந்தையான நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களிடம் வந்து, "நாயகமே! பேரர்களை முத்தமிட்ட விசயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்?" என்று கேட்டார்.

 

அதற்கு அண்ணலார், "அருமை மகளே! இவர்கள் பெரியவர்களான பின்பு ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் உதட்டில் முத்தமிட்டேன். இளையவர் ஹுசைன் (ரலி) அவர்கள் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் கழுத்தில் முத்தமிட்டேன்" என்று விளக்கமளித்தார்கள்.

 

இச்செய்தியை கேட்ட ஃபாத்திமா (ரலி)  அவர்கள் கண்கலங்கினார்கள். பிறகு, "நாயகமே! ஒவ்வொரு இறைதூதருக்கும் ஒரு விசேசமான ஒரு பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளான். உங்களுக்கும் அந்த விசேச பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே அதை பயன்படுத்தி உங்கள் பேரக்குழந்தைகளை இக்கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், "எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேசப் பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்தினரின் நலனுக்காக பயன்படுத்துவேன். அதை எனது பேரக் குழந்தைக்காக இங்கு பயன்படுத்த முடியாது" என்று கூறினார்கள்.

 

தன் குடும்பத்தினர் ஏதேனும் துன்பத்திலோ ஆபத்திலோ  சிக்கிக்கொண்டால்   உடனே தன்னிடமுள்ள பணபலம்படைபலம்ஆட்சி அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு வழி தேடுவோரை தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது. ஆனால், தமக்கு கொடுக்கப்பட்ட விசேச உரிமையைக்கூட தனது சமுதாயத்தினரின் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். தனது குடும்பத்தினரின் நலனுக்காககூட இம்மையில் பயன்படுத்தமாட்டேன் என்றுரைத்த அண்ணல் நபி (ஸல்)  அவர்களைப் போன்று சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை. இன்மேல் காணப்போவதுமில்லை. சிறந்த தலைவருக்கு இது மிகப்பெரும் முன் மாதிரியாகும்,

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் "நாயகமே! உங்களுக்கு கஷ்டங்கள் தருகிற இணைவைப்பாளர்களுக்கு எதிராக சாபமிட்டு பிரார்த்தியுங்கள்" என கூறப்பட்டது. அதற்கு அண்ணலார், ( إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً ) “நான் சாபமிடுபவராக அனுப்பப் படவில்லை.  அருளாகவே அனுப்பபட்டுள்ளேன்” என்று கூறினார்கள். முஸ்லிம்-5065

                                        

அன்றைய மக்கள் நபியவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அதிகமதிகம் கஷ்டங்களும் சிரமங்களும்  செய்து வந்ததின் காரணமாகத் தான் அவ்வாறு சொல்லப்பட்டது. முன்சென்ற இறைதூதர்களில் சிலர் அவ்விதம் சபித்ததின் காரணமாக அவர்களின் சமூகத்தினர் அழிக்கப்பட்டனர். ஆனால், நபியவர்கள் அவ்விதம் சபிக்க எண்ணவில்லை. மாறாக, அவர்கள் எல்லோரும் இறைநம்பிக்கையாளர்களாக ஆக வேண்டும் என்ற கவலையில் பல நாட்கள் இரவு பகலாக அழுது தொழுது அவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார்கள்..

 

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آَثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا

நபியே! குர்ஆனாகிய இந்த வார்த்தையை அவர்கள் நம்பிக்கை கொள்ளாததினால் துக்கத்தால் உம்மையே நீர் அழித்து கொள்வீர் போலும். (18:16) 


மண்ணறையில் 


பக்ர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

حَيَاتِي خَيْرٌ لَكُمْ ، تُحْدِثُونَ وَيَحْدُثُ لَكُمْ ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمُ ، تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ فَمَا كَانَ مِنْ حَسَنٍ حَمِدْتُ اللَّهَ ، وَمَا كَانَ مِنْ سَيِّءٍ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ ) நான் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன். என்னுடன் நீங்கள் பேசுகிறீர்கள்; உங்களுடன் நான் பேசுகிறேன். நான் உங்களைவிட்டு மறைந்து விட்டாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன்.  (நான் மறைந்த பின்பு) உங்களின் செயல்கள் சொல், செயல், உறுதியான எண்ணங்கள் எல்லாம் எனக்கு எடுத்து காட்டப்படும். உங்களின் அந்த செயல் நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நான் நன்றி பாராட்டி கொள்வேன். தீமையாக இருந்தால் உங்களுக்காக (எனது சமுதாயத்தினர் என்பதற்காக) அல்லாஹ்விடம் பிழை பொறுத்து மன்னித்தருளும்படி மன்றாடுவேன். என்று கூறினார்கள். நூல்:- பஸ்ஸார், மிஷ்காத்

                                                

ஆக, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு மட்டுமல்ல, அவர்களின் மரணம்கூட நமக்கு மிகப்பெரும் அருள் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

 

மரண வேதனை 


நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் உலகிலிருந்து மறைந்த இரவில் மரணத்தின் வலியை உணர்ந்தபோது, ( اللَّهُمَّ ثَقِّلْ فِي سَكَرَاتِي وَخَفِّفْ عَنْ سَكَرَاتِ أُمَّتِي ) "என் இறைவா! என் உயிர் பிரியும் (ஸகராத்) நிலையைக் கடினமாக்கிவிடுஎன் சமுதாயத்தினருக்கு இலகுவாக்கிவிடு!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.


கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபிகள் (ஸல்) அவர்கள் தங்கள் சமூகத்தின் மீது எந்தளவு பரிவும் கரிசனமும் காட்டியுள்ளார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு தெளிவான சான்றாகும்.


மறுமையில்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ مَنْ وَرَدَ شَرِبَ وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا ) நான் மறுமையில் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் எனும் தடாகத்திற்கு சென்று உங்களுக்கு நீர்புகட்ட காத்திருப்பேன். எவர் என்னிடம் வருகிறாரோ அவர் அத்தடாகத்தின் நீரை அருந்துவார். எவர் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. முஸ்லிம்-4598

 

மறுமைநாளில் தன் சமுதாயத்தினரின் கடுமையான தாகத்தை போக்குபவராகவும் அவர்களில் பாவிகள் சொர்க்கம் செல்வதற்காகவும்  சொர்க்கத்தில் அவர்களின் தகுதி உயர்வதற்காகவும் பரிந்துரை செய்பவராக இருக்கிறார்கள். எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்காக பாடுபட உள்ளார்கள். இதுவெல்லாம் அண்ணலார் சமுதாயத்தினரின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை காட்டுகிறது.

 

நன்றி செலுத்துவோம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ )

பாங்கு சொல்வதை செவியுற்ற பின்பு, "பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!" என்ற இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்துவிடுகிறது. அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-614திர்மிதீ-195


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِيَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ ) தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் கூறுங்கள். ஏனெனில் எவர் ஒருமுறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்துமுறை அல்லாஹ் அருள்புரிகிறான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் 'வஸீவா'லை கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவேஎனக்காக அந்தப் பதவியை அல்லாஹ்விடம் கேட்பவருக்கு மறுமைநாளில் எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-628

 

நம் அனைவரின் மீதும் கரிசனம் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டு உள்ளார்கள் என்பதை இதுவரை பார்த்தோம். நமக்காக பாடுபட்ட அண்ணலார் நம்மிடமிருந்து இதை மட்டும் எதிர்பார்க்கிறார்கள். அதாவது மறுமைநாளில் மக்கள் "மகாமே மஹமூத்" என்ற புகழுக்குரிய இடத்திலிருந்து அவர்கள் எழுப்பப்படுவதற்கும்சொர்க்கத்தில் உயர்பதவி அவர்களுக்கு கிடைப்பதற்கும்பாங்கு கூறிய பின்பு இறைவனிடம் நாம் பிராத்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக நாம் இப்படி பிரார்த்திக்காவிட்டாலும் இறைவன் அண்ணலாருக்கு அந்த சிறப்புகள் வழங்குவது உறுதியாகும்.

 

உம்முடைய இறைவன் உம்மை (மகாமே மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம். திருக்குர்ஆன்:- 17:79

 

இத்தகைய அண்ணல் நபிகளாரை நமக்கு அருளிய அருளாளன் அல்லாஹ்விற்கு அனுதினமும் நன்றி செலுத்துவோம்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள்அந்தப் பிரார்த்தனையை எவ்வாறு அமைய வேண்டும் என்று கற்றுத்தந்துஅதை தொடர்ந்து பிரார்த்தித்தால் அதுவும் நமக்கு இலாபமாக அமையும் என்று உணர்த்தியுள்ளார்கள். ஆகவே இந்தப் பிரார்த்தனையை முறையாகக் கற்றுக் கொண்டு செயல்படுத்தி இதன் மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்மறுமையில் அண்ணலாரின் சிபாரிசுக்கு உரியவர்களாக ஆகுவோமாக! ஆமீன்

செவ்வாய், ஏப்ரல் 02, 2024

பலகீஸ் ராணி, சுலைமான் நபி,



#யார்_அந்த_பல்கீஸ்_ராணி ....??

புனிதமிக்க ரமலான் மாதத்தில் தினமும் நாம் நபிமார்கள் வாழ்க்கை வரலாறு பற்றி அல்குரான் ஹதீஸ்கள் சொல்வாதை பார்த்து வருகின்றோம் அதன் அடிப்படையில் நாம் இதற்க்கு முன்னர் செய்த பதிவினில் நபி ஸுலைமான் அலை அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தோம். அதை தொடர்ந்து அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்கிஸ் ராணி அவர்கள் பற்றியும் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த தாவுத் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள். தந்தைக்குப் பிறகு அரசனாக ஆட்சி பொறுப்பேற்றார். அவருக்கு அல்லாஹ் பல அற்புத ஆற்றல்களை வழங்கி இருந்தான். பறவைகளுடன் பேசும் திறமை அவற்றில் ஒன்று. ஏமன் நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி வந்தனர். இதை நேரடியாக பார்த்த ஒரு மரங்கொத்தி பறவை ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து சொன்னது.

Sun Temple சூரிய கோயிலின் சிதைந்த பகுதி
Queen Balkis Palace அரண்மனையின் சிதைந்து போன அஸ்திவாரத்தின் பகுதி இங்கு உள்ள படத்தில் காணலாம் 
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.

“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் மரங் கொத்தி பறவை (ஹுது ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?

“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).

(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).

(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).

எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீ;ங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.

“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.

“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”

அவ்வாறே (தூதர்கள்) நபி ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!

“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று நபி ஸுலைமான் அலை கூறினார்).

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அலை அவர்களிடம்) கேட்டார்.

ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று நபி (ஸுலைமான்) அலை கூறினார்.

(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”

ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; 

இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று நபி ஸுலைமான் அலை கூறினார்).

அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.

அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; 

(இதைக் கண்ணுற்ற நபி ஸுலைமான்) அலை , “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். அல்குர்ஆன் 27:20-44

கீழே படத்தில் கான்பிக்கப்பட்டு இருப்பது பல்கீஸ் ராணியின் அரண்மனையாகும் . அனைத்தையும் அறைந்தவன் அல்லாஹ். ஒருவனே

நபி மூஸா அலை அவர்களின் வாழ்க்கை வரலாறு,

 ஹல்ரத் நபி மூஸா (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறை இன்ஷா அல்லாஹ் காண்போம்.

எகிப்தில் கிப்திகள், பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்தனர். இவர்களில் கிப்திகள் நன்றாக வசதியாக வாழ்ந்தனர். ஏழ்மையாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை அவர்கள் அடக்கி ஆண்டு வந்தனர். இந்த கிப்திகளின் வம்சத்தைச் சார்ந்தவன்தான் அந்நாட்டின் அரசன் பிர்அவ்ன். பிர்அவ்ன் என்றால் சூரிய புத்திரன் என்றும் பொருள் கொள்ளலாம். எகிப்தை ஆண்ட அரசர்களுக்கு பிர்அவ்ன் என்று பெயர் சொல்லப்படுவது உண்டு.

மூஸா நபி காலத்திலிருந்த பிர்அவ்னின் இயற்பெயர் காபூஸ் இப்னு வலீத் இப்னு முஸ்அப் இப்னு ரியான் என்பதாகும். இவன் 600 வருடங்கள் வாழ்ந்திருந்தான். இதில் 400 வருடங்கள் அரசாட்சி செய்வதில் காலம் கழித்தான்.

இந்த பிர்அவ்ன் தன்னைப் போல் ஒரு சிலையை வடித்து அதனையே மக்களை வணங்கி வருமாறு உத்திரவு பிறப்பித்தான். எப்போது தன்னை இறைவன் என்று இவன் வாதித்தானோ அப்போதெ இவனது முகம் விகாரமாகிவிட்டது. நைல் நதி வற்றி விட்டது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் வந்து நீதான் இறைவன் என்று சொல்கிறாயே! நதியில் தண்ணீர் ஓடச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். பிர்அவன் முதலில் திகைத்து> பின்பு சமாளித்துக் கொண்டு அவசியம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மக்களை சமாளித்துவிட்டு ஒரு மலைக்குச் சென்று இறைவனிடம், ‘இறைவனே! நீதான் உண்மையாக வணங்கத் தகுதியுடையவன். நான் பொய்மையிலிருக்கிறேன். மறுமையில் எனக்கு எந்த நலவும் வேண்டாம். இம்மையிலேயே எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடு. வற்றிவிட்ட நைல்நதி மீது மீண்டும் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்’ என்று கேட்டு பிரார்த்தித்தான்.

அச்சமயத்தில் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்ன் முன் மனித உருவில் தோன்றி, தன் எஜமானின் அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடக்கும் மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு பிர்அவ்ன், அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும்’ என்று ஆத்திரம் பொங்க கூறினான். பிர்அவ்னிடமிருந்து அதை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார்கள். பிர்அவ்ன் இவ்வாறு எழுதிக் கொடுத்த சமயத்தில் ‘ஓ! பிர்அவ்னே! உனக்கு நைல்நதி மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆற்றலைத் தந்தோம்’ என்று அசரீரி கேட்டது. இந்த சப்தத்தை எகிப்து வாசிகள் அனைவரும் கேட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

பனூ இஸ்ரவேலர்களில் இம்ரான் இப்னு எங்கா என்பவரின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்த பிர்அவ்ன் அவரை தம் அவையில் ஒரு பெரும் பதவி தந்து அமர்த்திக் கொண்டான். அவருக்கு முராஹூம் என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவரின் மகள்தான் ஆசியா அம்மையார். இந்த அம்மையார் மிகவும் அழகானவர்கள். இறைதியானத்தில் சிறந்து விளங்கினார். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு (அத்தை) மாமி முறையாக இருந்தார்கள். இவரது பேரழகைக் கேள்விப்பட்ட பிர்அவ்ன் இவரை தம் மனைவியாக்க விருப்பப்பட்டான். ஆனால் ஆசியா அம்மையாருக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு மாறாக பிர்அவ்னுடன் திருமணம் நடந்தேறியது.

பிர்அவ்னுக்கும், ஆசியா அம்மையாருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் நோயாளியாகவே இருந்து பெரியவளானதும் குஷ்டரோகியாக மாறிவிட்டது.

ஆசியா அம்மையார் பிர்அவ்னின் உறவிலிருந்து விலகியிருக்க விரும்பி ஆண்டவிடம் துஆ கேட்டார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். அவன் ஆசியா அம்மையாரை உறவு கொள்ள நினைக்கும்போது அவனுக்கு ஆண்மை இழந்து விடும். எனவே அந்த அம்மையாரை கண்களால் பார்த்து ரசித்தவாறே காலம் கடத்தி வந்தான்.

பிர்அவ்னுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்து கொண்டிருந்தன. தம் நாட்டிலுள்ள ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் கலந்து இதற்கு விளக்கம் கேட்டான். அவர்கள் தங்கள் தேவதைகளிடம் கேட்டதில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் ஓர்ஆண் குழந்தை தரிக்கப் போகிறது. அந்தக் குழந்தை பெரியவனாகி பிர்அவ்னையும், அவனது ஆட்சியையும், கிப்தி சமுதாயத்தையும் பூண்டோடு அழித்து விடும். கர்ப்பம் தரிக்கப்படும் இரவு வெள்ளி இரவாகும் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட பிர்அவன் நிலை குலைந்து போனான். இறுதியாக பனீ இஸ்ராயீல்களுக்கு பிறக்கு ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கும் முடிவுக்கு வந்தான். இதன் காரணமாக 12000 நிறைமாத கர்ப்பிணிகள் கொல்லப்பட்டனரென்றும்> சுமார் 90000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. இச்சமயத்தில் பிளேக் நோய் ஏற்பட்டு பனீ இஸ்ராயீல்கள் அழிந்து போயினர். இவ்வாறு அவர்கள் அழிந்து பட்டால் தங்களுக்கு ஊழியம் செய்ய யாருமில்லாமல் போய் விடுவார்கள் என்று எண்ணி கிப்தியர்கள், பிர்அவ்னிடம் முறையிட்டார்கள். அவனும் ஜோசியர்களை கலந்து ஆலோசித்து குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டான். அவர்களும் கணக்குப் போட்டு பார்த்து விட்டு சுமார் 3 ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்கலாம் என்றனர். இதனால் 6 மாத காலத்;தில் ;பிறக்கும் ஆண் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்றும்> அடுத்த 6 ஆறுமாத காலத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை விட்டு வைக்க வேண்டும் என்று பிர்அவ்ன் உத்தரவிட்டான்.

இவ்வாறு விட்டு வைக்கப்பட்ட ஆறு மாத காலக் கெடுவில்தான் இம்ரானுக்கு ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. இம்ரானுக்கு மர்யம் எள்ற பெயருடன் ஒரு பெண் மகவும் இருந்தார். பிர்அவ்னுடைய விசேச பணியாளர்களில் இம்ரானும் ஒருவராக இருந்தார். இம்ரான் பனீஇஸ்ராயீலைச் சார்ந்தவர் என்பது பிர்அவ்னுக்குத் தெரியாது.

இம்ரான் ஹழ்ரத் யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரர் லாவாவின் வழிவந்தவர் என்றும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஏழாவது தலைமுறையில் வந்தவர்கள் என்றும் தெரிகிறது.

ஃபிர்அவ்னையும், அவனது ஆட்சியையும் ஒழித்துக் கட்டப்போகும் குழந்தை இன்று இரவு தரிக்கப் போகிறது என்ற செய்தி குறிகாரர்கள் மூலம் பிர்அவ்னுக்குத் தெரியவந்தபோது, அன்றிரவு நகரிலுள்ள அத்தனை ஆண்களையும் நகரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும், யாராவது ஒரு ஆண் வீட்டில் தங்கினாலும் கூட சிரச் சேதம் செய்யப்படுவார் என்றும் நகரெங்கும் பறைசாற்றி அறிவிக்க கட்டளையிட்டான். இம்ரானை அழைத்து> அவரை அரண்மனையின் பிரதான வாயில்படி முன் காவல் காக்க கட்டளையிட்டான் பிர்அவ்ன்.

தம் கணவரிடம் முக்கியமான விசயத்தை தெரிவிக்க இம்ரானின் மனைவி யூகானிதா அவரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்கு வந்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையால் இருவருக்கும் விரகதாபம் ஏற்பட்டு உறவு வைத்தனர் அல்லாஹ்வின் நாட்டப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாயின் கர்ப்பத்தில் வந்து விட்டார்கள்.

குறிகாரர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் தாயின் வயிற்றில் மூஸா அலைஹிஸ்ஸலாம் வந்தது தெரியவந்தது. அதை பிர்அவ்னிடம் சொன்னார்கள். கோபத்தின் உச்சிக்கே சென்ற அவன் அன்றிலிருந்து ஒருவருடம் பிறக்கும் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டான். வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் கட்டளையிட்டான். இம்ரான் பிர்அவ்னின் ஊழியராக இருந்ததால் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. அவர் வீட்டை சோதிக்கவும் இல்லை.

இறுதியாக யூகானிதா ரமலான் பிறை 22 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். யூகானிதாவின் சகோதரியே அருகிலிருந்து அவருக்கு உதவி செய்தார். குழந்தையின் அழகு காண்போரை சொக்க வைத்தது. அது பிறந்ததேதி பிர்அவ்னுக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கும்போது அவருக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

இம்ரானுடைய மனைவிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்ற செய்தி எப்படியோ பிர்அவ்னுடைய சிப்பாய்களுக்கு தெரிந்து அவர் வீட்டை சோதனையிட உள்ளே நுழைந்தனர்.

இதற்கிடையில் தம் வீட்டை சோதனையிடப் போகிறார்கள் என்றதும்> அந்த குழந்தையை ஒரு பானைக்குள் போட்டு வைத்தார்கள். அப்பானை தீப்பற்றி எரியும் அடுப்பில் இருந்தது. சிப்பாய்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டு குழந்தை இல்லை என்றதும் போய் விட்டார்கள். பின்னர் குழந்தை இருந்த பானையை பார்த்தபோது குழந்தை கை, கால்கைள ஆட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்து கண்டு மிகவும் சந்தோசமுற்றார்கள். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்து 40 நாட்கள் ஆயின. யூகானிதாவுக்கு வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. ‘குழந்தையை பாலூட்டி நல்லவிதமாக வளர்த்து வரவும். அதன் உயிருக்கு யாராலும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. அவ்வாறு குழந்தையை பாதுகாப்பதில் அச்சம் ஏற்பட்டால் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடவும். சில நாட்களுக்குப் பின் அக்குழந்தை உம்மிடமே வந்து சேரும்’ என்று.

யூகானிதா கிஜ்பீலு என்ற தச்சரை அணுகி ஒரு பெட்டி தயார் செய்து அதில் குழந்தையை வைத்து நைல்நதியில் விட்டாள். இந்த கிஜ்பீலு மூஸா நபியை விசுவாசித்த முதல் முஸ்லிம் ஆவார். அந்த பெட்டி போகும் திசையை தம் மகள் மர்யம் மூலம் அறிய ஏற்பாடு செய்தாள். அப்பெட்டி மிதந்து கொண்டு சென்று பிர்அவ்னின் அரண்மனைக்கு அருகிலிருந்த கரையில் ஒதுங்கியது. அச்சமயம் பிர்அவ்ன், ஆசியா அம்மையார், அவள் மகள் ஆகியோர் அங்கிருந்தனர். மரப்பெட்டியைக் கண்ட அவள் மகள் அதிலிருந்த குழந்தையை எடுத்து தம் மார்போடு அணைத்துக் கொண்டாள். அதனால் அவளைப் பீடித்துக் கொண்டிருந்த குஷ்ட நோய் முற்றிலும் குணமானது.

இந்த அற்புதத்தைக் கண்ட பிர்அவ்னும், ஆசியாவும் மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். குழந்தை பிர்அவ்னிடம் சேர்ந்ததும் அதை யூகானிதாவின் மகள் மர்யம் தம் தாயிடம் சொன்னாள். அதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

அல்லாஹ் இதைத் தன் திருமறையில்…

28:8. (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும்,ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.

28:9. இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.

28:10. மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால்> அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.

28:11. இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.

28:12. நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”

என்று அல்-குர்ஆன் 28: 8-12 ல் குறிப்பிட்டுள்ளான்.

குழந்தை மரப்பெட்டியில் வைத்து வந்ததால் மூஷா என்று பெயர் வைத்தார்கள் ஆசியா அம்மையார். ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். அறபி மொழியில் மூஷா என்ற பெயர் மருவி மூஸா என்று ஆகிவிட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

குழந்தைக்குப் பாலூட்ட செவிலித்தாயை ஏற்பாடு செய்ய நினைத்தான் பிர்அவ்ன். இறுதியில் மூஸா நபியின் தாயாரே அந்த செவிலித்தாயாக வந்து சேர்ந்தார்கள்.

20:38. “உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!

20:39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.

இதை அல்லாஹ் அல்குர்ஆன் 20:38-40 ல் கூறுகிறான்.

இரண்டு வருடங்கள் போனபின், பிர்அவ்னின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிர்அவ்னின் தாடியைப் பிடித்து இழுத்ததோடு, அவனது கன்னத்தில் அறைந்தும் விட்டது. இதனால் கடும் கோபம் கொண்டான். குழந்தையை கொல்ல நினைத்தான். ஆனால் குழந்தைதானே. அதற்கு என்ன தெரியப் போகிறது என்று சொல்லி மின்னும் மாணிக்கத்தையும், ஜொலிக்கும் நெருப்புக் கங்குகளையும் அருகருகே குழந்தை முன் வைத்தாள். அக்குழந்தை தவழ்ந்து சென்று தனது கையை மாணிக்கம் வைக்கப்பட்டிருந்த பக்கம் கொண்டு சென்றது. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் கையை நெருப்புக் கங்கின் மீது திருப்பிவிட்டார்கள். குழந்தை அதை எடுத்து தம் வாயில் போட்டு விட்டது. கையும் வெந்து, நாக்கும் வெந்து போனது. அதனால்தான் மூஸா நபி அவர்களுக்கு கொன்னல் ஏற்பட்டது. பிர்அவ்ன் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அவனால் அந்த நோயைக் குணமாக்க முடியவில்லை.

இருபது வயது கொண்ட வாலிபராக மூஸா நபி இருக்கும்போது ஒரு வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிப்தி இனத்தைச் சார்ந்த கலான் என்பவனுக்கும், பனீ இஸ்ராயீல் இனத்தைச் சார்ந்த ஸாமிரிக்கும் வாய்ச்சண்டை ஆரம்பமாகி கைச் சண்டையாக மாறிக் கொண்டிருந்தது.

இருவரின் சண்டடை அவ்வழியே சென்று கொண்டிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் வந்தது. கலான் பனீ இஸ்ராயீலுக்காக பரிந்து பேச வந்துவிட்டதாக சொல்லி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தள்ளி விட்டான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. அந்தக் கலானை நோக்கி ஒரு குத்து விட்டார்கள். அவ்வளவுதான். அந்தக் குத்தை தாங்கமாட்டாது அவன் அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனான். இதை சற்றும் எதிர்பாராத மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டார்கள். இவ்விஷயம் யாருக்கும் தெரியாது.

மறுநாள் வேறொரு வழியாக மூஸா நபி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்படிப் போகும்போது ஸாமிரி மற்றொரு கிப்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அதை விலக்கப் போன மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஸாமிரி அலறி அடித்துக் கொண்டு நேற்று நடந்த விபரீதம் யாரால் நடந்தது என்பதை சப்தமிட்டுக் கொண்டே தெரியப்படுத்திக் கொண்டு ஓடஆரம்பித்தான். இது பிர்அவ்னுக்கும் தெரியவந்தது.

இதனைக் குறித்து அல்லாஹ் தனது திருமறையில்…

28:15. (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் – மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.

28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் – நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

28:17. “என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.

28:19. பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.

28:20. பின்னர்> நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.

28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.

-அல்குர்ஆன் 28:15-21

பிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைப் பருவம் முதல் என்னென்ன செய்தார்கள் என்பதை தொகுத்துப் பார்த்து> மற்ற பிரதானிகளையும் கலந்து ஆலோசித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சிரச்சேதம் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான். இதை கிஜ்பீலுதான் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முதன்முதலில் தகவல் அறிவித்தார்.

ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அவர்கள் முன் தோன்றி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மத்யன் செல்லுமாறு சொன்னார்கள். உடனே எகிப்து நாட்டிலிருந்து மத்யனுக்கு கால்நடைப் பயணமாக புறப்பட்டார்கள். ஒன்பதாம் நாள் மத்யன் நகரின் எல்லையை அவர்கள் தொட்டார்கள். அங்கு ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, இரு பெண்களுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்தார்கள்.

அந்த இருப் பெண்களின் பெயர்கள் ஸயா, ஸபூரா ஆகும். அவர்கள் இருவர்களும் ஹழ்ரத் ஷுஹைப் நபி அவர்களின் மக்களாவார்கள். சுஹைப் நபி அவர்கள் கண் பார்வையை இழந்திருந்தார்கள். தம் மக்கள் வழக்கத்திற்கு மாறாக முற்கூட்டியே வீடு வந்து சேர்ந்ததற்கு காரணம் கேட்டார்கள். அங்கு நடைபெற்றதை தம் தந்தையிடம் அவ்விருவரும் சொன்னார்கள். உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வரும்படி தம் மக்களிடம் சுஐப் நபி அவர்கள் சொன்னார்கள்.

மக்கள் மூஸா நபி அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். ஷுஹைப் நபி அவர்கள் மூஸா நபியை விசாரித்தார்கள். மூஸா நபி அவர்கள் தங்களுடைய விசயங்களை ஆரம்பம் முதல் விவரித்து சொன்னார்கள்.

தங்களுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை நியமித்து, தம் மகளில் ஒருவரை திருமணம் முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு மகராக எட்டாண்டுகள் ஆடுகளை மேய்க்கும்படி சொன்னார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்…

28:22. பின்னர்> அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.

28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர,பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது – மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

28:24. ஆகையால்> அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.

28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.

28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”

28:27. (அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் – ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”

28:28. (அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை – நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.

-அல்-குர்ஆன் 28:22-28

தப்ஸீர் ஐனுல் மஆனி யில், கஸஸ் அத்தியாயத்தின் விளக்கவுரையில், ‘ஆடுகளை மேய்ப்பதற்காக ஹழ்ரத் ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுத்தார்கள். இந்தக் கைத்தடி ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயரத்திற்குச் சமமாகப் பத்தடி நீட்டமிருந்தது. அதன் மேல் பாகத்தின் நுனியில் இரு கிளையாகப் பிரிந்திருந்தது. இக்கைத்தடிக்கு 18 விசேச சிறப்புகளிருந்தன. இதை ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு நபியின் கைக்கும் மாறிமாறி இறுதியாக இது ஹழ்ரத் ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, இப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசம் வந்து விட்டது.’

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இக்கைத்தடி மிகவும் உதவி புரிந்ததாக வரலாற்றில் காணக்கிடக்கிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யன் வந்து 8 வருடங்கள் கழித்து ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த மகளான ஹழ்ரத் ஸபூராவுடன் ஒரு வெள்ளிக்கிமை திருமணம் நடைபெற்றது.

தங்கள் குடும்பத்தாரை எகிப்து சென்று பார்க்கும் ஆசை மூஸா நபி அவர்களுக்கு ஏற்பட்டது. ஹழ்ரத் சுஐபு நபி அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். சுகைப் நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை அறிந்து தம்முடைய கண் பார்வைக்காக துஆ செய்யும்படி கேட்டார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் துஆ செய்யுங்கள். நான் ஆமீன் கூறுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வாறு ஷுஹைப் நபி அவர்கள் துஆ கேட்க மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆமீன் கூற ஷுஹைப் நபி அவர்களுக்கு பார்வை கிடைத்து விட்டது. அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டார்கள் நபி சுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸபூரா அம்மையாருடன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்து புறப்பட்டார்கள். துவா என்ற பள்ளத்தாக்கை கடந்து கொண்டிருக்கும்போது ஸஃபூரா அம்மையாருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. அன்று துல்கஃதா பிறை 18 வெள்ளிக்கிழமை இரவு எங்கும் ஒரே இருட்டு. மழையும் பெய்து கொண்டிருந்தது. ஸபூரா அம்மையார் குளிரில் நடுங்க ஆரம்பித்தார்கள். சக்கிமுக்கி கல்லை எடுத்து நெருப்பை மூட்ட முயற்சித்தார்கள். அதிலிருந்து தீ வரவில்லை. வேறெங்கும் வெளிச்சம் தெரிகிறதா?என்று பார்து வர சென்றார்கள். தூர்ஸீனாய் மலைப்பக்கம் அவர்களுக்கு நெருப்பு காணப்பட்டது. மனைவியையும், பணியாட்களையும் அங்கேயே வைத்துவிட்டு தாம் மட்டும் விரைந்து சென்றார்கள்.

அங்கு அல்லாஹ்வுடன் மூஸா அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் வசனித்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது…

20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).

20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.

20:12. “நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

20:13. இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.

20:14. “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.

20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.

20:16. “ஆகவே> அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.

20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.

20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.

20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”

20:22. “இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.

20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.

20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).

20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

20:29. “என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

20:31. “அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

20:32. “என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

அல்-குர்ஆன் 20:10-32

எகிப்து சென்று பிர்அவ்னுக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் படி சொன்னான். அதேபோல் அவர்கள் வைத்திருந்த கைத்தடியை கொண்டு அற்புதம் நிகழ்த்தும் சக்தியை அல்லாஹ் கொடுத்தான். மலையிலிருந்து திரும்பி வந்தபோது மலையில் நடந்த விசயத்தை தம் மனைவியிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னபோது, ‘என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து உடனே எகிப்து செல்ல ஆயத்தமாகுங்கள்’ என்று விடைகொடுத்து அனுப்பினார்கள்.

மிகவும் சிரமப்பட்டு தங்கள் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை இம்ரான் காலமாகிவிட்டிருந்தார்கள். சில நேரம் கழித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து வந்தவர் தமது மகன் மூஸாதான் என்று அவரது தாயார் யூகானிதா அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் சகோதரரை அறிந்து கொண்டார்கள். அவர்களிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொன்னார்கள்.

அல்லாஹ் தமக்கு நபித்துவம் அளித்து பிர்அவ்னை சந்தித்து உபதேசிக்க சொன்னதையும் விபரமாக சொன்னார்கள். இதைக் கேட்ட தாயாருக்கு சந்தோஷம் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு பலமுறை சஜ்தா செய்தார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்தி நன்றி செலுத்திக் கொண்டார்கள்.

தற்போதைய பிர்அவ்னின் கொடுங்கோன்மையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்> மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பிர்அவ்னுடைய அரண்மனையைச் சென்றடையும் போது, இரவு நேரமாயிருந்தது. தாங்கள் வந்திருப்பதை வாயிற்காவலனிடம் சொல்லி அனுப்பினார்கள். நீண்ட நேரம் கழித்தபின் ஒரு சேவகன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான்.

அங்கு அவர்களிருவரும் ‘நாங்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள். உமக்கு புத்திக் கூறி நேர்வழிப்படுத்துமாறு அல்லாஹ் எங்களிருவரையும் ஏவியுள்ளான். நீர் உம்மை இறைவன் என்று கூறுவதைவிட்டு> அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி> உம்மையும் எங்களையும்> அண்டசாரங்களையும் அத்தனையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்தச் சர்வலோக இரட்சகன்பால் உமது முகத்தை திருப்பிக் கொள்ளும். எங்களுடைய இந்த நல்லுபதேசத்தை செயல்படுத்தவில்லையானால் இம்மை> மறுமையில் கடுமையான தண்டனையை அல்லாஹ் கொடுத்து விடுவான்’ என்று கூறினார்கள்.

இங்கு படத்தில் காண்பது நபி மூஸா அலை அவர்களின் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்த சில இடங்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே♥️☝️

பிரபல்யமான பதிவுகள்