இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன.அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால்(LIGHT/RAY)படைக்கப்பட்ட மலக்குகள்,இரண்டு சுட்டெரிக்கும் நெருப்பின் கொழுந்தினால் படைக்கப்பட்ட ஜின்கள்(FIRE - Smokeless Flame).இதனை விஞ்ஞான ஒளியின் நோக்கினால் ஜின்கள் ப்ளாஸ்மா(Plasma)வடிவில் இருப்பதாகவே எண்ணத்தோனறுகிறது.இவை இரண்டும் சக்திக்குள் அடங்குபவை.மூன்றாவது களிமண்ணால்
படைக்கப்பட்ட மனித வர்க்கம்.இது சடத்தினுள் அடங்குகின்றது.
“களிமண்ணிலிருந்து,அவன் மனிதனைப்படைத்தான். நெருப்பின் கொழுந்திலிருந்துஅவன் ஜின்களைப் படைத்தான்”(55:14,15)
மனிதன் களிமண் எனும் சடத்தினால் ஆக்கப்பட்டாலும் அவனது உடலில் ஊதப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ரூஹ்.அல்லாஹ் சக்தியின் மூலம்,அவன் அழியாதவன் என்பதால் அவனது ரூஹிலிருந்து ஊதப்பட்ட மனித ரூஹும் அழிவதில்லை.ஏனெனில் மனித ரூஹும் ஒரு சக்தியாக(Energy)இருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன்.ஜின்களும் மலக்குகளும் கூட சக்திக் கூறுகளினால் ஆக்கப்பட்டவர்கள்.எனவே ரூஹ்,ஜின்,மலக்கு
இவைகள் இவ்வுலகம் அழிந்தாலும்,அழியாது நிலைத்திருக்கும் மறுமை வாழ்வை அவற்றால் அனுபவிக்க முடிகின்றது.மலக்குகளுக்கு சுவனம் நரகம் இல்லாவிட்டாலும் அவையும் நிலைத்திருக்கக்கூடியனவே!
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் உடம்பு களி மண்ணாக இல்லை,இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும்(Minerals)மனிதஉடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்புச் சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலை(Plasma-Radiant energy)அவை கொண்டுள்ளன.அதேபோன்று ஒளியினால் படைக்கப்பட்ட
மலக்குகள் ஒளிக் கீற்றுக்களைப் பாய்ச்சுபவர்களாக இல்லை.ஆனால் ஒளியின் பண்புகளான ஒளியின் வேகத்தில் பயணித்தல்(300,000Km/h),எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்களைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர்.
இம்மூன்று படைப்புகளுக்கும் கால,சூழ,வெளி போன்றவற்றுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.மலக்குகள் அதிகூடிய வேகத்தில் விண்ணில் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.காரணம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.
அதேபோன்று மனிதர்களைப்போல் அல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் ஜின்கள் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம்,காலம்,வெளி,இவர்களுக்கு பொருட்டல்ல! ஜின்களுக்கு அல்லாஹ் இவ்வாற்றலை மட்டுப்படுத்தி கொடுத்துள்ளான்.ஏழு வானங்களைப் படைத்து அதில் தாழ்வான வானத்தில் ஒரு தடுப்பையும் அமைத்துள்ளான்.அல்குர்ஆன்
கூறுகிறது.
“ நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்)
எறியப்படுவார்கள்.” (37:6-10) (15:16-18) (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன.
“நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம்.அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9)
மனிதனை அல்லாஹ் பூமியில் படைத்து அவனுக்கான வாழ்வாதாரங்களையும் வழங்கியுள்ளான்.மனிதனால் சுயமாக பிரபஞ்ச வெளியைக் கடக்க முடியாவிட்டாலும் அதற்கான“சுல்தான்–சக்தி”இல்லாமல் செல்ல முடியாது என்று அல்குர்ஆன்(55:33)கூறுகின்றது.
மொத்தமாக நோக்கும்போது இப்பிரபஞ்ச வெளி எங்கும் மலக்குகளும்,ஜின்களும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.சிலவேளை நாம் அறியாத இன்னும் பல படைப்புகளை அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்திருக்கவும் கூடும்.இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் இறைவனின் வல்லமைகளையும் நோக்கும்போது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அல்லாஹ்வின் படைப்புகளான ஜின்களையும்,மலக்குகளையும் நமது கண்களால் காண முடியாது. நமது கண்களுக்குவெறும்400தொடக்கம்700நானோமீட்டர்(nanometer)அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியும்.மலக்குகள் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருநப்பதால்தான் அவற்றை எம்மால் காண முடியாதுள்ளது.
ஜன்ன என்ற அரபிச் சொல்லிருந்து ஜின் என்ற பதம் வந்துள்ளது.இதற்கு மறைக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம். ஜின்கள் நெருப்புச் சுவாலை வெப்பத்தால் அதாவது மின்காந்த வெப்ப அலை வடிவில்(Electromagnetic-Plasma Radiant Energy)படைக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் எம்மால் பார்க்க முடிவதில்லை.ஆனால் அவர்களால் எம்மைப் பார்க்க முடியும்.
மனிதனால் இடத்திற்கு ஏற்றவாறு தனது குணத்தை(பச்சோந்தி)மாற்றிக்கொள்ள முடியும்.ஆனால் மலக்குகளாலும் ஜின்களாலும் தமது உருவத்தையே மாற்றி பிற உருவங்களில் வர முடியும்.நபியவர்கள் கூறினார்கள்“மலக்குகள் நாய்,பன்றி தவிர்ந்த மற்ற உயிரினங்களின் உருவத்தில் வருகின்றன”.அதேபோன்று ஜின்களுக்கும் தமது உருவத்தை மாற்றி பாம்பு,நாய்,பூனை போன்ற உருவங்களில்
வருகின்றன.சைத்தான் அதிகமாக கருப்பு நிற நாய்களின் வடிவத்தில் வருவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அதேபோன்று வீட்டினுள் ஒரு ஜின் பாம்பாக உருவெடுத்து வந்தபோது அதனை அடிக்க முற்பட்ட ஒரு ஸஹாபியை அது தீண்டி அவர் மரணித்த சம்பவம் நபியவர்களுக்கு எத்திவைக்கப்பட்டமையும்,வீடுகளுக்கு பாம்பு வந்தால் மூன்று முறை அவற்றை வெளியேறுமாறு சொல்லுமாறும் வெளியேறினால் அது ஜின் என்றும் இல்லாவிட்டால் அது பாம்பு தான் அதனை அடிக்குமாறும் நபியவர்கள் கூறிய விஷயங்களை நாம்
அறிவோம்.
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
வியாழன், பிப்ரவரி 20, 2014
மலக்கு, ஜின், மனிதன்
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...