நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், பிப்ரவரி 20, 2014

ஆஷுராவின் சிறப்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம். நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும்,இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி,முஸ்லிம்) ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர். என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளூம் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்) மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, 'அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்' என்றார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம் (1977) ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி(1592) "முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா)நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்." அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்(1976) ஹுசைன்(ரழி)கொலைக்கும் யஸீதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.யஸீத் ஹுசைனை அல்லாஹ்வின் தூதரின் பேரன் என்ற அடிப்படையில் கண்ணியமான முறையில் கைது பண்ணிதான் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.ஆனால் படைக்கு தளபதியாக சென்றவர்தான் ஹுசைன்(ரழி)மேல் உள்ள ஆத்திரத்தின் காரணமாக அவரைக்கொன்று தலையை கொய்து வந்து யஸீதுக்கு முன்பு கொண்டு வந்தார்.அப்போது யஸீத் கடுமையான கோபம் அடைந்தார்"அல்லாஹ்வின் தூதரின் பேரனின் தலையைக்கண்டு கண்ணீர் வடித்தார்.இவ்வாறு கடுமையான முறையில் நடந்து கொண்டதற்காக அத்தளபதியை கைது செய்தார்.மேலும் தன் மனைவியையும்,தன் குடும்பத்தாரையும் ஹுசைன்(ரழி)யின் மரணத்திற்காக மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கச்சொன்னார்.அதுமட்டுமல்ல ஹுசைனின் எஞ்சியிருந்த குடும்பத்தாரை அழைத்து வரச்செய்து அவர்களின் எதிர்காலத்துக்கு தானே பொருப்பேற்றுக்கொண்டார்.[அவர்களை அவரே வளர்க்க பொருப்பேற்றுக்கொண்டார்]இது தான் உண்மையான வரலாறு. இன்னும் யஸீத் பின் முஆவியா அவருக்கு எதிராக எல்லோருடைய மனசிலும் துவேஷத்தை உண்டு பண்ணுவதற்காக வரலாற்றை திரித்து எழுதி அவரை ஒரு மோசமான கொலை காரராக சித்தரிக்க ேவண்டாம்

பிரபல்யமான பதிவுகள்