роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЬройро╡ро░ி 07, 2017

роЪெро▓்рокோройிро▓் роЕродிро░்роЪ்роЪி,

செல்போனில் அந்தரங்கத்தை எடுக்காதீர்கள்: அதிர்ச்சி !
நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம்
பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க
வீடியோ இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக ்கலாம். என்னடா இது
ஆச்சரியம் என்று யோசிக்கவேண்டாம் ! முதலில் உண்மைச் சம்பவம் 2 டைப்
பார்ப்போம். பின்னர் விடையத்துக்கு வரலாம் !
அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து
வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா … வெயிட்… உங்களுக்காகவே
சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெய ர்கள் மாற்றப்பட்டிருக ்கின்றன.
அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளானஇவர்கள்
ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால்
மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிரு ந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ
இணைக்கப்பட்டிரு ந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு
அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ
மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா
ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து
ரசித்துவிட்டு, செல்போனிலிருந்த ு அப்போதே அதை அழித்தும் விட்டார்கள்.
ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது .
‘செல்போனில் இருந்து டிலீட்(delete) செய்த ஒரு வீடியோ எப்படி
இண்டர்நெட்டுக்க ுப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான
விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச்
சம்பவங்களையும் பார்த்துவிடுவோம ்.
அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித்
திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும்
மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார ்கள் என அப்பாவை நச்சரிக்கவே,
அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள்
பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக ்கு,
செல்போனில் தன் உடலை அரை நிர்வாணமாகப் படம் பிடித்தால் எப்படி இருக்கும்
என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம்,
அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு போனில் அந்த வீடியோவை
அழித்துவிட்டாள் . ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து
கொண்டிருக்கிறது . டிலீட் செய்த ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது
என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.
அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் !
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும், ஒன்றுபோல் ஒரு விஷயம்
நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள்
பழுதடைந்தது. அவற்றைச் சரிசெய்ய கடைகளில் கொடுத்திருந்தார ்கள்.
அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டத ு.
செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த
முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட
ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் அதைப்
பார்க்க முடியும் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உங்கள் மோபைல்
போனை, சிம்பிளாக அதன் சார்ஜர் வயரைப் பாவித்து கணணியில்இணைத்தால் போதும்.
இந்த ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலமாக, அழிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும்
புகைப்படங்களை மட்டும் உடனே எடுத்துவிட முடியும்.எனவே இனிமேல்,
ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ! உங்கள் மோபைல் போனை யாரிடமாவது
கொடுப்பதோ, இல்லை திருத்த வேலைகளுக்காகக் கொடுப்பதையோ, உங்களுக்குத்
தெரிந்தவர்கள் மற்றும் நம்பிக்கையானவர் களிடம் கொடுப்பது நல்லது

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்