நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஜனவரி 07, 2017

ஜூம்ஆ தினம்,

*அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

*மறந்து விட*
          *வேண்டாம் !*

*மறந்து விட*
          *வேண்டாம்* !!

*மறந்து விட*
          *வேண்டாம் !!!*

                   
*ஒட்டகம் *

                 
*மாடு       *

                 
*ஆடு        *

                   
*கோழி      *

                
*முட்டை  ⚪*

ஆகியவற்றை செலவில்லாமல்  குர்பானி கொடுத்த நன்மை பெற வேண்டிய நாள்.

இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள்‼

"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
        அல்குர்ஆன்:62:09
➖➖➖➖➖➖➖➖➖➖
" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "
  ஷஹீஹ் புகாரி:881
➖➖➖➖➖➖➖➖➖➖
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ ”மௌனமாக இரு” என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "
ஸஹீஹ் முஸ்லிம்:1541
➖➖➖➖➖➖➖➖➖

*விரைந்து செல்லுவோம் நன்மைகளை அள்ளிக்கொள்ள...

இன் ஷா அல்லாஹ்!!!

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும்
    
       ஜூம்ஆ நாள்                   
         (வெள்ளிக் கிழமை)
      
          சிறப்புக்கள் 

அன்பான இஸ்லாமிய
உறவுகளே!

சூரியன் உதிக்கும் நாட்களில்

வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த
நாளாகும்.

அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்;அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்;
அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்;
அன்று தான் யுக
முடிவு நிகழும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : #முஸ்லிம் 1548

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள்
(ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில்
ஒவ்வொரு வாசலிலும்
(இருந்த வண்ணம்)

முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள்

இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால்
(பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச்
செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: #புகாரி3211

1   பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று

ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர்
ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

2 இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக்
குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

3மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

4 நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.☑

5 ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ☑

இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால்
வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்)
உபதேசத்தை செவியேற்கிறார்கள்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    வெள்ளிக்கிழமை
யன்று ஒரு நேரம் உண்டு.
சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த நேரம் மிகவும் குறைவான. என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: #புகாரி 6400.

ஒரு ஜும்ஆ விலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ
தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.

ஆனால் பெரும் பாவங்களாக
அவை இருக்கலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார்
விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி),

இந்த ஜும்ஆவுடைய முழு நன்மையும் அல்லாஹ்! நாம் அனைவருக்கும் கிடைக்க செய்வானாக!
எல்லாப் புகழும்
         அல்லாஹூவுக்கே

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்