роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், рооாро░்роЪ் 09, 2017

ро╣ைроЯ்ро░ோ роХாро░்рокрой்,


أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ (63) أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ (64) لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ -  [الواقعة: 65

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ» صحيح البخاري

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம்தான் தற்போது தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் பெரும் பிரச்சனை.

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?

ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்கள் இணைந்த கூட்டு மூலக் கூறுதான் ஹைட்ரோ கார்பன். நிலக்கரியில் கார்பன் மட்டுமே இருக்கும். ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மூலக்கூறின் எண் ணிக்கையைப் பொறுத்து, மீத்தேன், புரோபேன், பியூட்டேன் என பல விதமாக அழைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோலியம் ஆகியவை அனைத்தும் ஹைட்ரோ கார்பன் தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் அழிந்து படிமங்களாக மாறும்போது, அதிலிருந்து வெளியேறும் வாயுதான் ஹைட்ரோ கார்பன். இது அழுத்தம் காரணமாக மெல்லிய திரவமாக மாறி நிலக்கரி படிமங்கள் மீது படிந்திருக்கும். இதை வெளியில் எடுத்து உலகம் முழுக்க எரிவாயுவாக பயன்படுத்து கின்றனர்.

காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது நாட்டுக்கு அவசிய மான திட்டமா?

வீடுகள், வாகனங்களில் நாம் எரிவாயு பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் தேவையின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. எனவே, உள்நாட்டில் இதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று ஆராயும் பணி நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதுதான் நெடுவாசலில் நடந்துள்ளது. நிலக்கரிப் படிமங் களின் மீது ‘adsorption' எனப்படும் பரப்புக் கவர்ச்சி மூலம் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இந்த ஹைட்ரோ கார்பன். அங்கு கிடைக் கும் ஹைட்ரோ கார்பன் எந்த அளவுக்கு தரமானது என்பது கேள்விக்குறியானது. ஏனென்றால், நிலக்கரியின் தரத்தைப் பொறுத்து தான் இதன் தரமும் அமையும். நிலக்கரியைப் பொறுத்தமட்டில், 1. ஆந்த்ரோசைட் 2. பிட்டுமினஸ் 3. லிக்னைட் 4. பீட் என நான்கு தரம் உள்ளது. இதில், தமிழகத்தில் கிடைப்பது மூன்றாம் தரமான லிக்னைட்தான். இதிலிருந்து கிடைக்கும் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எந்த அளவுக்கு தரம் மிக்கது என்பது தெரியவில்லை. இதை எடுப்பதில் தவறில்லை. எடுக்கும் முறையில் தான் பிரச்சினை உள்ளது.

மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பனை வெளியில் எடுக்கும்போது என்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும்?

நிலக்கரியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நீரை வெளியில் எடுத்தால் மட்டுமே பரப்புக் கவர்ச்சியால் சிக்கிக் கொண்டிருக்கும் எரிவாயு வெளியேறும். தண்ணீரை வெளி யேற்றுவது மிகப்பெரிய சுற்றுச் சூழல் பிரச்சினை. பல இடங்களில் துளையிட்டு அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டியது வரும். இந்த தண்ணீர் எதற்கும் உதவாது. குடிநீராக பயன் படாது. உப்புத் தன்மை அதிகம் என்பதால் விவசாயத்துக்கும் பயன் படுத்த முடியாது. சுத்திகரிக்கவும் முடியாது. இந்த நீரை உறிஞ்சி வெளியில் விட்டால், விவசாய நிலம் பாதிப்படைந்து எதற்கும் பயன்படாது. இது மிக முக்கியமான பிரச்சினை. இதுதவிர, நிலப் பகுதியை துளையிட்டு அழுத்தம் கொடுக்கும்போதுதான் எரிவாயு வெளியேறும். இவ்வாறு துளையிடும்போது நிலத்தின் கீழ் பகுதியில் ஏற்படும் விரிசல்களால் நிலத்தடி நீரில் வேதிப் பொருட்கள் கலந்து நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகும். நன்னீர் ஆதாரங்களும் பாதிப்படையும். இது அடுத்த பிரச்சினை.

இதுதவிர, நிலத்தின் அடிமட் டத்தில் இருந்து நீரை வெளியேற்றும்போது நிலத்தில் ஏற்படும் வெற்றிடம், நில அமைப்பை மாற்றி அமைத்துவிடும். பாறை அடுக்குகளில் ஏற்படும் மாற்றம் நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில் இயற்கை எரி வாயு எடுக்கப்படுகிறது. பெரும் பாலான நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் விவசாய நிலம் இல்லை என்பதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. ஆனால், காவிரிப் படுகையில் விவசாய நிலம் இருப்பதால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.

விவசாய நிலத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அளவுக்கு இது முக்கியமான வளர்ச்சி திட்டமா?

நிச்சயமாக இல்லை. விவசாயம் தான் நாட்டுக்கு முக்கியம். நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பது விவசாயம். காவிரிப் படுகையில் உள்ள விவசாய நிலம் தமிழகத்தின் வளம். எனவே, விவசாயத்துக்குதான் முதல் மரியாதை அளிக்க வேண்டும். எந்த திட்டத்துக்காகவும் விவசாயத்தை அழிக்கக்கூடாது. http://tamil.thehindu.com/tamilnadu/

[நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியையாக பணியாற்றிவரும் ஜே.மார்கரட் மரி ‘தி இந்து’-வுக்கு அளித்த சிறப்பு பேட்டிதான் நாம் மேலே படித்த்து.]

ஆயிரம்  அடிகளுக்குக் குறையாமல்பூமியில் துளையிட்டு, அதே ஆயிரம் அடிகளுக்கு மேல் பூமியின் உள்ளே ஊடுருவித்தான் மீத்தேன் எடுக்க முடியும். மீத்தேன்  எடுக்கும்போது, நிலத்தடி நீர் மொத்தமும்  வெளியில் போய்விடும்என்பதுதான் விவசாயம் சார்ந்த, சாராத அனைத்து மக்களின் கவலையுமே. துளைகளின் வழியே முதலில் நீரையும்,ஐநூறுக்கும்  மேற்பட்ட  அதிகநச்சுத்தன்மைகொண்ட வேதிப்பொருட்களையும் பூமிக்கடியில் அழுத்தமாகச் செலுத்தி, பாறைகளை வெடிக்கச்செய்வதன் மூலமாகத்தான் மீத்தேனை அடைய முடியும். அப்படியானநிகழ்வுக்குப் பின்,வேதிப்பொருள்களோடு வெளியே  வரும்மீத்தேனை மட்டும் தனியாகப் பிரித்துஎடுத்துக் கொண்டு, நச்சு மிகுந்த வேதிப்பொருள்களைக் கீழே  (பூமியின்மேற்பரப்பில்) கொட்டிவிடுவதுஇன்னொரு ஆபத்து. "நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்துவிட்ட பின்,அழுத்தக் குறைவு காரணமாக கடல்நீர் நிலத்துக்குள்  தஞ்சம் புகுவதைத் தடுக்கமுடியாது. நிலம் உள் வாங்கிக்கொள்ளும்ஆபத்தும் உள்ளது. பசுமைவயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.மீத்தேனை எடுக்க பூவோடு சேர்ந்தநாறாய் உள்ளே போனவேதிப்பொருட்களால் நிலம் நச்சுத்தன்மைகொண்டதாக மாறிவிடும். நிலமே விஷமாகும்போது நிலத்தடி நீர் அமிர்தமாகவா இருக்கும்? அதுவும் நஞ்சுதான்" என்கின்றனர் விவசாயிகள்.

http://www.vikatan.com/news/tamilnadu/82564-one-and-a-half-million-acres-and-hydrocarbon-project.html

மனித வாழ்வின் பல்வேறு தேவைகளின் ஆணிவேர் விவசாயம். உணவு, உடை, உறைவிடம், சுவாசம் என மிக அவசியமான தேவைகள் மனிதனுக்கு விவசாயமின்றி அமைய முடியாது.

உழவு இல்லையேல்.. உணவு இல்லை. என்று கூறும் அளவுக்கு விவசாயத்தின் பலனை அனுபவிக்கச் செய்திருக்கிறான் இறைவன்.

أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ (63) أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ (64) لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ - الواقعة: 65

 (இப்பூமியில்) விதைப்பதைநீங்கள் கவனித்தீர்களா? அதனைநீங்கள் முளைக்கச்செய்கின்றீர்களா? அல்லது நாம்முளைக்கச் செய்கின்றோமா? நாம்நாடினால் திட்டமாக அதனைக்கூளமாய் ஆக்கிவிடுவோம் -அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள். அல்-குர்ஆன் 56:63, 64, 65.

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ (24) أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا (25) ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا (26) فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا (27) وَعِنَبًا وَقَضْبًا (28) وَزَيْتُونًا وَنَخْلًا (29) وَحَدَائِقَ غُلْبًا (30) وَفَاكِهَةً وَأَبًّا (31) مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ -عبس: 32

 எனவே, மனிதன் தன் உணவின்பக்கமே (அது எவ்வாறுபெறப்படுகிறது) என்பதைநோட்டமிட்டுப் பார்க்கட்டும்.நிச்சயமாக நாமே மழையை நன்குபொழியச் செய்கிறோம். பின்,பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-பின் அதிலிருந்து வித்தைமுளைப்பிக்கிறோம்.திராட்சைகளையும்,புற்பூண்டுகளையும்- ஒலிவமரத்தையும், பேரீச்சையையும் –அடர்ந்ததோட்டங்களையும்,பழங்களையும்,தீவனங்களையும்- அல்-குர்ஆன்80:24,25,26,27,28,29,30,31.

هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُشَجَرٌ فِيهِ تُسِيمُونَ (10) يُنْبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَوَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ إِنَّفِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ - النحل: 11

அவனே வானத்திலிருந்துமழையைப் பொழியச்செய்கிறான்; அதிலிருந்துஉங்களுக்கு அருந்தும் நீரும்இருக்கிறது; அதிலிருந்து (உங்கள்கால்நடைகளை) மேய்ப்பதற்கானமரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும்உண்டாகி) அதில் இருக்கின்றன.

அதனைக் கொண்டே, (விவசாயப்)பயிர்களையும்,ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும்,பேரீத்த மரங்களையும், திராட்சைக்கொடிகளையும், இன்னும்எல்லாவகைக்கனிவர்க்கங்களிலிருந்தும் அவன்உங்களுக்காக விளைவிக்கிறான் -நிச்சயமாக இதில் சிந்திக்கும்மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க)அத்தாட்சி இருக்கிறது. அல்-குர்ஆன் 16:10,11.

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ (18) فَأَنْشَأْنَا لَكُمْ بِهِ جَنَّاتٍ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ لَكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ (19) وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورِ سَيْنَاءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِلْآكِلِينَ- المؤمنون 20

மேலும், வானத்திலிருந்து நாம்திட்டமான அளவில் (மழை) நீரைஇறக்கி, அப்பால் அதனைப்பூமியில் தங்க வைக்கிறோம்;நிச்சயமாக அதனைப்போக்கிவிடவும் நாம்சக்தியுடையோம்.

அதனைக் கொண்டு, நாம்உங்களுக்கு பேரீச்சை திராட்சைதோட்டங்களைஉண்டாக்கியிருக்கின்றோம்;அவற்றில் உங்களுக்கு ஏராளமானகனிவகைகள் இருக்கின்றன;அவற்றிலிருந்து நீங்கள்புசிக்கின்றீர்கள்.

இன்னும் தூர் ஸினாய்மலைக்கருகே உற்பத்தியாகும்மரத்தையும் (உங்களுக்காக நாம்உண்டாக்கினோம்) அதுஎண்ணெயை உற்பத்திசெய்கிறது. மேலும் (ரொட்டிபோன்றவற்றை)சாப்பிடுவோருக்கு தொட்டுசாப்பிடும் பொருளாகவும் (அதுஅமைந்துள்ளது). அல்-குர்ஆன்23:18,19,20. 

விவசாயத்திற்கு நபி [ஸல்]கொடுத்த முக்கியத்துவம்

2499 - عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَعْطَىرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ، أَنْيَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا»صحيح البخاري

2499. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு,அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும்,அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் 'பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது)'என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்துவிட்டார்கள். ஸஹீஹுல்புஹாரீ

விவசாயத்தை ஊக்கப்படுத்திய நபி [ஸல்]

2335 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ» ، قَالَ عُرْوَةُ: «قَضَى بِهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي خِلاَفَتِهِ» صحيح البخاري

2335. அன்னை ஆயிஷா (ரலி)கூறினார். 
'யாருக்கும் சொந்தமில்லாத ஒருநிலத்தைப் பயிரிடுகிறவரேஅதைச் சொந்தமாக்கிக் கொள்ளஅதிக உரிமையுள்ளவராவார்'என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். 'உமர்(ரலி) தம் ஆட்சிக் காலத்தின்போதுஇதை ஆதாரமாகக் கொண்டேதீர்ப்பளித்தார்கள்' என்று உர்வா(ரஹ்) கூறினார்கள். ஸஹீஹுல்புஹாரீ

2320 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ» صحيح البخاري

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ,ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 2320.

நபி [ஸல்] அவர்கள் பெற்றிருந்த விவசாய அறிவு

79 - عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الهُدَى وَالعِلْمِ، كَمَثَلِ الغَيْثِ الكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ، قَبِلَتِ المَاءَ، فَأَنْبَتَتِ الكَلَأَ وَالعُشْبَ الكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ، أَمْسَكَتِ المَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً وَلاَ تُنْبِتُ كَلَأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ، وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ -صحيح البخاري

79. 'அல்லாஹ் என்னை நேர்வழிமற்றும் ஞானத்துடன்அனுப்பியதற்கு உவமையாவது,நிலத்தில் விழுந்த பெருமழைபோன்றதாகும். அவற்றில் சிலநிலங்கள் நீரை ஏற்று ஏராளமானபுற்களையும் செடி, கொடிகளையும்முளைக்கச் செய்தன. வேறு சிலதண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும்.அதனை இறைவன் மக்களுக்குப்பயன்படச் செய்தான். அதனைமக்கள் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினார்;விவசாயமும் செய்தனர். அந்தப்பெருமழை இன்னொரு வகைநிலத்திலும் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும்கட்டாந்தரை. அது தண்ணீரைத்தேக்கி வைத்துக் கொள்ளவும்இல்லை; புற்பூண்டுகளைமுளைக்க விடவுமில்லை.இதுதான் அல்லாஹ்வின்மார்க்கத்தில் விளக்கம் பெற்றுநான் கொண்டு வந்த தூதினால்பயனடைந்து, கற்றுத் தெரிந்துபிறருக்கும் கற்றுக்கொடுத்தவருக்கும் நான்கொண்டு வந்த தூதை ஏறிட்டுப்பாராமலும் நான் கொண்டு வந்தஅல்லாஹ்வின் நேர் வழியைஏற்றுக் கொள்ளாமலும்வாழ்கிறவனுக்கும் உவமையாகும்'என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என அபூமூஸா(ரலி)அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ

5020 - عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَثَلُ الَّذِي يَقْرَأُ القُرْآنَ: كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ، وَرِيحُهَا طَيِّبٌ، وَالَّذِي لاَ يَقْرَأُ [ص:191] القُرْآنَ: كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ: كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ، وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ: كَمَثَلِ الحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ، وَلاَ رِيحَ لَهَا " صحيح البخاري

5020. இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்' 
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின்நிலையானது எலுமிச்சைபோன்றதாகும். அதன் சுவையும்நன்று; வாசனையும் நன்று. மற்றநற்செயல்கள் புரிந்துகொண்டு)குர்ஆன் ஓதாமலிருப்பவர்,பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவைநன்று; (ஆனால்) அதற்கு வாசனைகிடையாது. தீயவனாக(நயவஞ்சகனாக)வும்இருந்துகொண்டு, குர்ஆனையும்ஓதிவருகிறவனின் நிலையானது,துளசிச் செடியின் நிலையைஒத்திருக்கிறது. அதன் வாசனைநன்று; சுவையோ கசப்பு. தீமையும்செய்துகொண்டு, குர்ஆனையும்ஓதாமலிருப்பவனின்நிலையானது, குமட்டிக்காயின்நிலையை ஒத்திருக்கிறது. அதன்சுவையும் கசப்பு; அதற்குவாசனையும் கிடையாது. 
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி)அறிவித்தார் ஸஹீஹுல் புஹாரீ

2332 عَنْ رَافِعٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا أَكْثَرَ أَهْلِ المَدِينَةِ حَقْلًا، وَكَانَ أَحَدُنَا يُكْرِي أَرْضَهُ، فَيَقُولُ: هَذِهِ القِطْعَةُ لِي وَهَذِهِ لَكَ، فَرُبَّمَا أَخْرَجَتْ ذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ، «فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»صحيح البخاري

2332. ராஃபிஉ(ரலி) அறிவித்தார். 
நாங்கள் மதீனாவாசிகளிலேயேஅதிகமாகப் பண்ணைவயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள்நிலத்தைக் குத்தகைக்குஎடுக்கும்போது நிலத்தின்உரிமையாளரிடம், '(நிலத்தின்)இந்தத் துண்டு(டைய விளைச்சல்)எங்களுக்குரியது' என்றுசொல்வது வழக்கம். சிலவேளைகளில், நிலத்தின் ஒருபகுதி விளைச்சல் தரும்;இன்னொரு பகுதி விளைச்சல்தராது. எனவே, நபி(ஸல்) அவர்கள்இவ்வாறு நிபந்தனையிடவேண்டாமென்று எங்களைத்தடுத்துவிட்டார்கள். ஸஹீஹுல்புஹாரீ

5644 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ المُؤْمِنِ كَمَثَلِ الخَامَةِ مِنَ الزَّرْعِ، مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ كَفَأَتْهَا، فَإِذَا اعْتَدَلَتْ تَكَفَّأُ بِالْبَلاَءِ، وَالفَاجِرُ كَالأَرْزَةِ، صَمَّاءَ مُعْتَدِلَةً، حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ» صحيح البخاري

5644. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்' 
இறைநம்பிக்கையாளரின்நிலையானது,இளம் பயிர் போன்றதாகும்.காற்றடிக்கும்போது அதைக்காற்று (தன் திசையில்)சாய்த்துவிடும். காற்றுநின்றுவிட்டால், அது நேராகநிற்கும். சோதனையின்போது(இறை நம்பிக்கையாளரின்நிலையும் அவ்வாறே). தீயவன்,உறுதியாக நிமிர்ந்து நிற்கும்தேவதாரு மரத்தைப் போன்றவன்.அல்லாஹ், தான் நாடும்போதுஅதை (ஒரேடியாக) உடைத்து(சாய்த்து) விடுகிறான். 
என அபூ ஹுரைரா(ரலி)அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ

விவசாயம் செய்து மற்றவர்களுக்கு உதவிய பெண் ஸஹாபி

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُعَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَيَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ، فَتَجْعَلُهُ فِي قِدْرٍ، ثُمَّتَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا، فَتَكُونُ أُصُولُالسِّلْقِ عَرْقَهُ، وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلاَةِ الجُمُعَةِ،فَنُسَلِّمُ عَلَيْهَا، فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا، فَنَلْعَقُهُ وَكُنَّانَتَمَنَّى يَوْمَ الجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ» صحيح البخاري

938. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி)அறிவித்தார். 
எங்களில் ஒரு பெண்மணிஇருந்தார். அவர் தம் விளைநிலத்தின் வாய்க்கால் ஓரத்தில்ஒரு வகை கீரைச் செடியைப்பயிரிடுவார். வெள்ளிக்கிழமைவந்துவிட்டால் வேருடன்அச்செடியைப் பிடிங்கி வந்துஅதை ஒரு பாத்திரத்தில்போடுவார். பிறகு அதன் மீதுகோதுமையில் ஒரு கைப்பிடிஅளவு போட்டு அரைப்பார் அந்தக்கீரைச் செடியின் தண்டுப்பகுதிதான் அந்த உணவுக்கேமாமிசம் போல் அமையும். நாங்கள்ஜும்ஆத் தொழுதுவிட்டுத் திரும்பிஅவருக்கு ஸலாம் கூறுவோம்.அவர் எங்களுக்கு உணவுவழங்குவார். அதை நாங்கள்சாப்பிடுவோம். அவரின் இந்தஉணவுக்காக நாங்கள் ஜும்ஆநாளை விரும்புவோம். ஸஹீஹுல்புஹாரீ

ஒருமரத்திலிருந்து  மட்டும் நமக்குகிடைக்கும் பலன்கள்!

மலர்கள், காய், கனிகள்கிடைக்கிறது

நிழல், குளிர்ச்சி, மழைகிடைக்கிறது

காற்றைசுத்தப்படுத்துகிறது

நாம் வெளியிடும் கார்பன்டைஆக்சைடை கிரகித்துக்கொண்டு,நமக்குத்தேவையான ஆக்சிஜனைவெளியிடுகிறது.

கார்பன் டைஆக்சைடைகிரகித்துக் கொள்வதால்புவி வெப்பமடையும்விளைவை குறைக்கிறது.

மண்ணில் வேரோடிஇருப்பதால், மண்அரிப்பைத் தடுக்கிறது.நிலச்சரிவுகளைதடுக்கிறது.

மரத்தைச் சுற்றி நீர்சேகரமாகவதால், நிலத்தடிநீர் அதிகரிக்கிறது.

காய்ந்த சருகு இலைகள்மண்ணுக்குஉரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம்பல லட்சம் ரூபாய்க்குச் சமமானநன்மைகளைத் தருகிறது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.

ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டி யிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது.

ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை. இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2.75லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம்.

மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட ஆராய்ச்சிகளை ஒப்பு நோக்கும்போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.http://tamil.thehindu.com/general/environment/

v மரங்களுடன் மனிதனுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கார்பன் டைஆக்சைடை (நச்சு வாயுவை) உட்கொள்வதும், ஆக்சிஜனை (பிராண வாயுவை)வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.

v எனவே மனிதனின் வெளிமூச்சு,தாவரங்களின் உள்மூச்சாகிறது. தாவரங்களின் வெளிமூச்சு,மனிதனின் உள்மூச்சாகிறது என்றால் அது மிகையல்ல.

v மனிதனுக்கும் மனித வாழ்க்கைக்கும் ஆணிவேரான விவசாயத்தை பெரிதும் பாதிக்கும் எந்த நவீன திட்டத்தையும் முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள்,

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்