وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَاتَّقُواْ اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (القرآن 3:123) பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள். (அல்குர்ஆன் 3:123) பத்ருப்போரில் வானவர்களைக் கொண்டு உதவி حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ بَدْرٍ هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ. (بخارى-3995) இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்கள். (புகாரி-3995) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்" என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்" என்று கூறினார்கள். (முஸ்லிம்-3621) ரமளான் மாதம் பிறை 17-ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம். பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம். பத்ருப்போர் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு (கி.பி.624) ரமளான் மாதம் 17 ஆவது நான் வெள்ளிக்கிழமை நடந்தது. அது (உண்மையையும் பொய்மையையும்) பிரித்துக் காட்டிய நாள் ஆகும். அன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். அந்த நாளில் இணைவைப்பை அழித்தான். இணைவைப்புப் படையினரையும் அதன் இருப்பிடத்தையும் நிர்மூலமாக்கினான். இத்தனைக்கும் அந்நாளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை (எதிரிகளின் எண்ணிக்கையைவிடக்) குறைவாகவே இருந்தது. முஸ்லிம்கள் அன்றைய தினம் 313 பேரே இருந்தனர். அவர்களிடம் 1 குதிரைகளும், 70 ஒட்டகங்களுமே இருந்தன. எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவர். அவர்கள் அனைவரும் தேவையான (போர்த்) தளவாடங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை. அன்று எதிரிகள் தொள்ளாயிரத்திலிருந்து ஓராயிரம் (9000-1000) பேர்வரை இருந்தனர். எஃகு வாட்கள், தலைக் கவசங்கள், நிறைவான தளவாடங்கள், கண்கவர் குதிரைகள், மற்றும் அபரிதமான நகைநட்டுகள் ஆகியவற்றுடன் அவர்கள் வந்திருந்தனர். அப்போது அல்லாஹ் தன் தூதரை கண்ணியப்படுத்தினான். தனது வேத அறிவிப்பையும் வேத வசனத்தையும் வெளியிட்டு நபி (ஸல்) அவர்களின் முகத்தையும் அவர்களுடைய படையினர் முகத்தையும் ஒளிரச் செய்தான். ஸைத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும் இழிவுக்குள்ளாக்கினான். இதானலேயே இறைநம்பிக்கையுள்ள அடியார்கள் மற்றும் இறையச்சமுள்ள அந்தப் படையினர்மீது தான் செய்த உதவியை எடுத்துரைக்கின்ற அல்லாஹ், ‘’நீங்கள் சொற்பமானவர்களாக இருந்தபோது, ‘பத்ரில்’ உங்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்திருக்கிறான்’’ என்று இந்த (3:123) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். அதாவது நீங்கள் குறைந்த எண்ணிக்கையினராய் இருந்தபோது உங்களுக்கு அவன் உதவினான். ஆதலால், வெற்றி என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதுதானே ஒழிய, கூடுதல் எண்ணிக்கையாலோ கூடுதல் தளவாடங்களாலோ கிடைப்பதன்று என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள் என்று இதன் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்) எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும், இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்... மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள். பத்ரு களம் கண்ட வீரத்தியாகிகள் (ஷுஹதாக்கள்) 01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) 02. ஸஃப்வான் இப்னு வஹப் (ரலி) 03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர் (ரலி) 04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ் (ரலி) 05. ஆகில் இப்னுல் பக்ரு (ரலி) 06. உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) 07. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி) 08. யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ் (ரலி) 09. அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி) 10. மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி) 11. மஸ்அத் இப்னு ஹத்மா (ரலி) 12. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர் (ரலி) 13. ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி) 14. ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி) பத்ருப்போரை படம் பிடித்துக்காட்டும் ௲ரத்துல் அன்ஃபால் முதலாவதாக: முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும் குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே! இரண்டாவதாக: முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். மூன்றாவதாக: இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும், நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான். நான்காவதாக: இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை. ஐந்தவதாக: போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். ஆறாவதாக: போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக் கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும். முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று, குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள். ஏழாவதாக: இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது. ஹிஜ் இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’ எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது. பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு, அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)” என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன. இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்: وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. (القرآن 8:26) நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26) (ரஹீகுல் மக்தூம்) யுத்தம் ஆரம்பம்: நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடன், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர். அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர். ஹம்ஸா (ரலி) X உத்பா உபைதா (ரலி) X வலீத் அலி (ரலி) X ஷைபா இதன் பின்னர் பாரிய யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா (ரலி ) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான (புகாரி 3141) ஹதீஸ் குறிப்பு ஒன்றுள்ளது. حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: بَيْنَا أَنَا وَاقِفٌ فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ فَنَظَرْتُ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَإِذَا أَنَا بِغُلَامَيْنِ مِنْ الْأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا فَغَمَزَنِي أَحَدُهُمَا فَقَالَ يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ قُلْتُ نَعَمْ مَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لَا يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الْأَعْجَلُ مِنَّا فَتَعَجَّبْتُ لِذَلِكَ فَغَمَزَنِي الْآخَرُ فَقَالَ لِي مِثْلَهَا فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَجُولُ فِي النَّاسِ قُلْتُ أَلَا إِنَّ هَذَا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا فَضَرَبَاهُ حَتَّى قَتَلَاهُ ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَاهُ فَقَالَ أَيُّكُمَا قَتَلَهُ قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَنَا قَتَلْتُهُ فَقَالَ هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا قَالَا لَا فَنَظَرَ فِي السَّيْفَيْنِ فَقَالَ كِلَاكُمَا قَتَلَهُ سَلَبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَكَانَا مُعَاذَ بْنَ عَفْرَاءَ وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الجَمُوحِ. (بخارى-3141) அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை) நோக்கி சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி ) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர லி) அவர்களும் ஆவர். (புகாரீ 3141) அல்லாஹ்வின் உதவி: பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான். (நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன். وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (44) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ. (القرآن 8:43,44) நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44) வானவர்களின் வருகை: அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான். வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ. (القرآن 8:12) (நபியே!) உமதிரட்சகன்பால், நிச்சியமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் விசுவாசம் கொண்டோரை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டுவிடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களுக்கு மேல் வெட்டுங்கள்ளூ அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள் என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீ மூலம்) அறிவித்ததா (நினைத்துப் பார்ப்பீராக!) (அல்குர்ஆன் 08:12) பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். புறமுதுகு காட்டியும் ஓடினர். அன்ஸாரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ரளி) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத்) فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. (القرآن 8:17) (விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17) பத்ர் போரின் வெற்றியின்பின்னனியில் நபியின்துஆ இருப்பதை நாம்மறக்கமுடியாது. அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ருப்போர் நடைபெற்ற போது யுத்த களத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன். நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு ‘’யா ஹய்யு யாகய்யூம்’’ என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். (நூல்.பைஹகீ. நஸயி.) நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا مصرع فلان " ويضع يده على الأرض ههنا وههنا قا ل : فما ماط أحدهم عن موضع يد رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி (ஸல்) அவர்கள் கைவைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை. (நூல்: முஸ்லிம். மிஸ்காத். பக்கம்.531) சத்தியத்திற்கு வெற்றி: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِي طَلْحَةَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلًا مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ فَقُذِفُوا فِي طَوِيٍّ مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيثٍ مُخْبِثٍ وَكَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلَاثَ لَيَالٍ فَلَمَّا كَانَ بِبَدْرٍ الْيَوْمَ الثَّالِثَ أَمَرَ بِرَاحِلَتِهِ فَشُدَّ عَلَيْهَا رَحْلُهَا ثُمَّ مَشَى وَاتَّبَعَهُ أَصْحَابُهُ وَقَالُوا مَا نُرَى يَنْطَلِقُ إِلَّا لِبَعْضِ حَاجَتِهِ حَتَّى قَامَ عَلَى شَفَةِ الرَّكِيِّ فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ يَا فُلَانُ بْنَ فُلَانٍ وَيَا فُلَانُ بْنَ فُلَانٍ أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمْ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ مَا تُكَلِّمُ مِنْ أَجْسَادٍ لَا أَرْوَاحَ لَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ. (بخارى-3976) போரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். (புகாரி 3976,) மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களில் 14 போர் ஷஹீதாகினர். அவர்களில் அறுவர் குறைஷியர் (முஹாஜிர்கள்), எண்மர் அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது. وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. (القرآن 3:123) பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123) வெற்றிக்கான காரணிகள்: · ஈமானிய பலம் அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும். · முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை. · நபி (ஸல்) அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும். புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும். · காபிர்களின் லோகாயத இலக்கும், ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும். விளைவுகள்: · முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்: · முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல். · இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல். · நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல். · மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை. · ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும். இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது. உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக. பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்! சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சுத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது. பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய அணியை எதிர்கொள்ள, ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக இருந்தனர். முஸ்லிம்களை விட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் அனைத்தையும் மிகைத்து, வெற்றிவாகை சூடினர். உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத் தொடர்புடையதாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ர் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர். உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான். ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள் காரண காரியவாத தொடர்பில் மட்டுமல்லாது, இறை நாட்டத்தினூடாகவும் நிகழ்வுகளை நோக்கும் போது, வெற்றிக்கனிகள் கண்ணில்பட்டு மின்னுகின்றன. அத்தகைய மன உணர்வோடு பத்ர் யுத்தம் தொடர்பான சுருக்கமான வரலாற்றைப் பின்னணியுடன், அதன் மூலம் நாம் எத்தகைய படிப்பினை பெறவேண்டும் என்பதையும் நோக்குவோம். பின்னணி: நபி (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ர) தலைமையில் எண்மர் (8) கொண்ட குழுவை (12 பேர் என்ற குறிப்பும் உண்டு) உளவாளிகளாக, உறையிட்ட கடிதமொன்றைக் கொடுத்து, இரண்டு நாட்கள் பயணித்த பின்னர், அதைப் பிரித்துப் பார்க்கப் பணித்து அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் நீங்கள் மக்காவிற்கும் தாயிபிற்குமிடையிலுள்ள நக்லா எனுமிடத்திற்குச் சென்று, அங்கிருந்தவாறு குறைஷிகளின் நடவடிக்கையை உளவு பார்த்து, செய்திகளை அனுப்ப வேண்டும் எனவும், இதற்காக உமது தோழர்கள் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது. இரண்டில் ஒன்று: அபூ ஸுப்யானின் தலைமையில் சிரியாவுக்குச் சென்ற வாணிபக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இதை முற்றுகையிடவே விரும்பினர். இதற்குத் தயாரானபோது, மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது. எனவே, நபியவர்கள் போர் புரிவதையே விரும்பினார்கள். வாணிபக் கூட்டத்தை இடைமறித்தால், அதிக செல்வம் கிடைத்துவிடும் என்றாலும் மக்கா காபிர்கள் மதீனா எல்லைக்குள் பிரவேசித்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்ற நபியவர்களின் தூர நோக்கு சிந்தனை இதில் வெளிப்படுகிறது. எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ (5) يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُونَ (6) وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ (7) لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (8) إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ. (القرآن 8: 5-9) (நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விசயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் (ஷபத்ர் யுத்தத்தின் போது உம்முடன் வருவதை) வெறுக்கக் கூடியவர்களாக இருக்க, நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:05-09) உறுதிவெளிப்பாடு: நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் (ரளி), அபூபக்கர் (ரளி) போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே பிரயத்தனப்பட்டார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாத (ரளி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்) அதேபோல் மிக்தாம் (ர) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஷநீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி) மழை பொழிந்தது மனம் குளிர்ந்தது அமைதித் தூக்கம்: முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான். إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ. (القرآن 8:11) (விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11) மழை மூலம் தூய்மையாக்கல்: அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி பாதங்களை உறுதிப்படுத்தினான். إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ. (القرآن 8:11) (அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11) நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை: யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள். இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான். (சீரத் இப்னு ஹிஷாம்) நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09) வெற்றிக்கான காரணிகள்: · ஈமானிய பலம். · அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும். · முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை. · நபி (ஸல் ) அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும். · புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும். காபிர்களின் லோகாயத இலக்கும், · ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும். விளைவுகள்: முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்: · முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல். · இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல். · நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல். · மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை. · ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும். இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது. உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக. நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையாளர் என நம்பினோம் நீங்கள் கொண்டுவந்த இஸ்லாம் தான் சத்தியமென்று முழங்கினோம். எனவே, உங்களது கட்டளைகளை செவிமடுத்தோம.; எந்நேரத்திலும் உங்களுக்கு கட்டுப்படுவோம் என உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொண்டோம். எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினாலும் நாங்களும் மூழ்குவோம் எங்களில் எவரும் பின்நிற்க மாட்டார். எதிரிகளோடு போராடுவதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக நாங்கள் போர் புரிவதில் உறுதியாக இருப்போம் உங்களுக்கு கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வின் அருளைப் பெற எங்களை அழைத்துச் செல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்" நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போரை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் அசத்தியத்தை தோற்கடிக்க வேண்டும் வேறு வழி முறையில் அதனை எதிர்கொள்ள முடியாது என்று உணர்ந்த பின் முஹாஜிர், அன்ஸார் ஸஹாபாத் தோழர்களில் இராணுவ உயர் மட்ட குழுவில் இருந்த சிலரை அழைத்து அது தொடர்பாக ஆலோசனை கேட்ட போது, அன்ஸாரி ஸஹாபி ஸஅத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உதிர்த்த வார்த்தைகளே இவை. மறு பக்கம் முஹாஜிர்களில் அபூபக்கர், உமர் பின் மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹும்) அவர்கள் தமது கருத்துக்களை உறுதியாகத் தெரிவித்திருந்தார்கள். "இஸ்ரவேலர்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறியதைப் போல் நாம் உங்களிடம் கூற மாட்டோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு 'ஷபர்குல் ஃகிமாத்' (மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாமும் உங்களுடன் சேர்ந்து வருவோம்" என மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய கருத்தைச் செவியுற்ற நபிகளார் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அசத்தியம் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்து ஸஹாபிகளும் உணர்ந்து கொண்டார்கள் எவரும் பின் வாங்கவில்லை. எனவே தான் மக்கா வியாபார குழுவின் பொருளாதாரத்தை மாத்திரம் இலக்காக கொண்டு வெளியேறிய 313 ஸஹாபிகளுக்கு பெரும் குறைஷி படையை எதிர்கொள்வது சிரமமாக இருக்கவில்லை முஸ்லிம் தரப்பிடம் இரண்டு குதிரைகள் 70 ஒட்டகங்கள் மாத்திரமே இருந்தன. ஓர் ஒட்டகத்தில் ஒருவர், இருவர் அல்லது மூவராக மாறி மாறி பிரயாணம் செய்து "பத்ர்" பள்ளதாக்கை சென்றடைந்தனர். மறுபக்கம் குறைஷியரின் படை பதறியடித்துக் கொண்டு தம்மை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1,300 வீரர்கள், 100 போர் குதிரைகள், எண்ணிலடங்காத ஒட்டகங்கள் மற்றும் 600 போர் கவச அங்கிகள் என போருக்கான அத்தனை ஆயத்தங்களுடனும் அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாமின் தலைமையில் குறைஷியர் படை தயாராகியது. பத்ருப் போரில் மக்கா குறைஷிகள் வெற்றியீட்டினால் இஸ்லாத்தை புதைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஷைத்தான் மனித உருதரித்து குறைஷிகளை தூண்டி விட்டான். எனினும், முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆட்சி புரியும் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி ஷைத்தானையும் அவனின் வாரிசுகiயும் அடக்கினான். இதனால், அசத்தியத்தின் முதுகெலும்பு உடைத்தெறியப்பட்டது. குறைஷியர் போர் வெறியுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கையில் வியாபாரக் குழுவின் தலைவரான அபூ ஸுப்யான் (அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை), மதீனா முஸ்லிம்களிடம் அகப்படாமல் தான் வேறாரு பாதையால் வியாபார குழுவை செலுத்தி தப்பித்து விட்டதாகவும் வியாபாரக் கூட்டம் மற்றும் அதன் செல்வங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் குறைஷியரை திரும்பி சென்று விடுமாறும் செய்தி அனுப்பினார். இச்செய்தியை கேள்விப்பட்ட குறைஷியருள் சிலர் திரும்பி விடலாம் என கருத்துத் தெரிவித்தனர். எனினும், தலைவன் அபூ ஜஹ்ல், "இறைவன் மீதாணையாக! நாம் திரும்ப மாட்டோம் பத்ருக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடுவோம் மது அருந்துவோம் பெண்கள் பாடலிசைப்பர் எமது சக்தியை, வல்லமையை மதீனா அரேபியர் அறிந்து எமக்கு அஞ்சி வாழ வேண்டும்" எனக் கர்ஜித்தான். எனினும், இச்சந்தர்ப்பத்தில் ஜுஹ்ரா கிளையினர் சார்பாக வந்திருந்த 300 பேர் திரும்பிச் செல்லவே 1000 பேருடன் குறைஷிப் படை பத்ர் பள்த்தாக்கு நோக்கிச் சென்று ‘ஷஅல்உத்வதுல் குஸ்வா’ எனும் மேட்டு பகுதிக்கு பின்னால் தங்கியது. அன்றிரவு மழை பொழிந்தது. அம்மழை குரைஷியருக்கு அடை மழையாகவும் முஸ்லிம்களுக்கு சாந்தமான தூறலாகவும் அமைந்தது. அதன் மூலம் அல்லாஹ் ஷைத்தான்களின் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தினான். முஸ்லிம்கள் தங்கியிருந்த மணற் பாங்கான பூமியை தங்குவதற்கு வசதியாக ஆக்கிக் கொடுத்தான். உள்ளங்களையும் பாதங்கiயும் ஸ்திரப்படுத்தினான். நபியவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17, வெள்ளிக்கிழமை பத்ர் மைதானத்தில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இறைவா இதோ குறைஷிகள் மமதையுடனும் கர்வத்துடனும் உன்னோடு போர் புரிய வந்துள்னர். உன் தூதரை பொய்ப்பித்தவர்களாக வந்திருக்கும் இவர்களைத் தோற்கடிப்பதற்காக எனக்கு வாக்களித்த உதவியை தந்தருள்வாயாக, இக்காலை பொழுதிலேயே அவர்களை அழித்து விடுவாயாக!" என பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்கள் படையினருக்கு போர் ஒழுக்கங்களை அழகுற விக்கிவிட்டு தலைமைக்கு கட்டுப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள். எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாது இப்போரில் வெற்றி பெற நபியவர்கள் எண்ணவில்லை. போருக்கான உடல், உள, இராணுவ ரீதியாக அத்தனை முஸ்தீபுகiயும் முன்னெடுத்து விட்டு புனித ரமழான் நோன்பை நோற்றவர்களாகவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் உதவியை நாடினார்கள். "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்தையும் இராணுவ உத்தியையும் கச்சிதமாக நிறைவேற்றியமையும் பத்ரின் வெற்றிக்கு வழிவகுத்தது என அறிஞர் ‘ஸய்யித் அஸ்ஸாத்’ குறிப்பிடுகின்றார்கள். தவிரவும் எதிரணிப் படையினரை உளவு பார்த்து அவர்களது பலம், பலவீனங்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப தமது படையினரை பலப்படுத்துகின்ற பணியையும் நபிகளார் திறம்படச் செய்தார்கள். தெய்வாதீனமாக வெற்றி கிடைக்க வேண்டுமென ஸஹாபிகள் எதிர்பார்க்கவில்லை. அல்லாஹ்வும் அவர்களின் முயற்சிக்குத் தக்க கூலியாக மலக்குகளை இறக்கி மாபெரும் உதவி செய்தான். "அஹத்! அஹத்! " என்று கோஷமெழுப்பியவர்களாக எதிரிகளை அகோரமாகத் தாக்கி களத்தில் முன்னேறினார்கள் ஸஹாபிகள். உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனிடம் மனம் உருகப் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ் பதிலளிக்கின்றான். "(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் இறைவனிடம் வேண்டிய போது அணி அணியாக உங்களை பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்." ஸஹாபிகளோடு சேர்ந்து மலக்குகளும் போராடினார்கள். மலக்குகள் பக்கத்தில் நின்று போராடுவதைக் கண்ட சுராகா இப்னு மாலிக்கின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் போர் களத்தை விட்டு வெருண்டோடி கடலில் குதித்து விட்டான். தமது படை பலவீனப்பட்ட போதும் திமிருடன் தம்பட்டமடித்து முன்னேறி வந்த அபூ ஜஹ்லை இரண்டு ஸஹாபா சிறுவர்களின் வாள் முனை பதம் பார்க்கிறது. முஆத் இப்னு அம்ர் இப்னு ஜமூஹ் (ரழியல்லாஹு அன்ஹு), முஅவ்வித் இப்னு அஃப்ரா ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரே இவ்விரு இளம் தியாகிகள் இப்போரில் முஅவ்வித் இப்னு அஃப்ரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதானார்கள். கொல்லப்பட்ட அபூ ஜஹ்லுக்கு "இந்த சமுதாயத்தின் பிர்அவ்ன்" என்ற பட்டமும் சூட்டப்பட்டது. இப்போர் நிராகரிப்பார்களுக்கு பெரும் தோல்வியாகவும் இறை விசுவாசிகளுக்கு மகத்தான வெற்றியாகவும் முடிவடைகிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் முடிந்த பிறகு பத்ரு மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கி மதீனா சென்றடைகின்றார்கள். நோன்பு நோற்ற நாளின் பெரும் பகுதியை தூக்கத்திலும் பொழுதுபோக்குகளிலும் கழிப்பவர்கள், பத்ரு களம் புனித ரமழானில் நோன்பாளிகளின் வாள் வீச்சில் வெற்றி கொள்ளப்பட்டதை மறந்து விடுகின்றார்கள். எனவே, ரமழான் மாதம் சோம்பேறிகளின் மாதமல்ல அது வீர வரலாற்று பெட்டகங்களின் திறவுகோல் அல்லாஹ்வுக்காக உயிரைத் துச்சமாக மதித்து களமிறங்கிய தியாகிகளின் மாதம் என்பதையே பத்ரு களம் எமக்கு கற்றுத் தருகிறது. உலகில் அராஜக சக்திகள், அநியாய அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும், சமாதானமும் நிலவச் செய்து அல்லாஹ்வின் சட்டம் அகிலத்தை அரவணைக்கும் வரை பத்ருகள் ஓய்வதில்லை. நிச்சியம் அந்த பத்ரின் போது, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், இன்னும் கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)
роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்
роЗродро▒்роХு роХுро┤ுроЪேро░்:
роХро░ுрод்родுро░ைроХро│ை роЗроЯு (Atom)
рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்
-
рокрод்ро░ு ро╕ро╣ாрокாроХ்роХро│ ் роЗро░ро╡ு роироороХ்роХு ро░рооро▓ாрой் рокிро▒ை 17 роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் роХிро░ுрокைропாро▓் роЗро╕்ро▓ாрод்родிройb் рооுродро▓் рокோро░் роироЯрои்род роиாро│்.. рокрод்ро░ு рокோро░் 313 ро╕ро╣ாрокாроХ்роХро│் ...
-
роЗро╕்ро▓ாрооிроп роХேро│்ро╡ிроХро│ுроо் роЕродро▒்роХாрой рокродிро▓்роХро│ுроо் ро╕ро╣ாрокாроХ்роХро│ிро▓் роЗро░рог்роЯு роЪிро▒роХுроЯைропро╡ро░் роОрой்ро▒ роЪிро▒рок்рокு рокெро▒்ро▒ роирокிрод்родோро┤ро░் ропாро░்? ро╡ிроЯை: роЬроГрокро░் рокிрой் роЕрокீродாро▓ிрок்(ро░ро▓ி)...
-
роЗро╕்ро▓ாрооிроп роХேро│்ро╡ி рокродிро▓்* 1. роиாроо் ропாро░்? *роиாроо் рооுро╕்ро▓ிроо்роХро│்.* 2. роироо் рооாро░்роХ்роХроо் роОродு? *роироо் рооாро░்роХ்роХроо் роЗро╕்ро▓ாроо்.* 3. роЗро╕்ро▓ாроо் роОрой்ро▒ாро▓் роОрой்рой? *роЕро▓்...
-
https://youtu.be/CuQi6wXI9uo роиோроХ்роХроЩ்роХро│ிро▓் роТрой்ро▒ு, роТро░ுро╡ро░் родрой் рокாро▓ிропро▓் родேро╡ைроХро│ை роЕройுроородிроХ்роХрок்рокроЯ்роЯ ро╡ро┤ிроХро│ிро▓் роиிро▒ைро╡ு роЪெроп்родுроХொро│்ро│ ро╡ேрог்роЯுроо் роОрой்рокродாроХுроо்...
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ