роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், роЬூро▓ை 02, 2019

роЗрооாрооிрой் роХро╡ро▓ை,

இமாம்களின் ஆலிம்களின் மனக்கவலையை நீங்களே கொஞ்சம் படித்துப் பாருங்களேன்

ஆக பல வருடங்கள் பணியில் இருந்தாலும் இமாம்கள் பணியிலிருந்து நீக்கப்பட அந்த  நிர்வாகத்திற்கு நியாயமான காரணம் எதுவும் தேவையில்லை என்பதே சமூகத்தின் பார்வையில் இமாம்களின் அந்தஸ்து என்ன ..? என்பதை  வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது ....

*பார்வைக் கோளாறு.....*

நம் கண்களால் நாம் பிறரை பார்க்கிறோம் ... ஆனால் பிறரின் பல கண்கள் நம்மை பல்வேறு விதமாக உற்று நோக்குகின்றது என்பதற்கு சமூகம் ஆலீம்களை பார்க்கும் பார்வைகளே அதற்கு சான்று ....

ஓர் ஆலிம் தன் கண்களால் மஹல்லா மக்களை ஒரே பார்வையோடு பார்க்கிறார் .. ஆனால் அந்த மஹல்லா மக்களின் பார்வைகளோ அந்த ஆலிமை பல் வேறு பார்வைகளோடும் , பல்வேறு விமர்சனங்களோடும் எப்படியெல்லாம் பார்க்கிறது ....? இதோ கேளுங்கள் ....!

*பார்வை 1 :* "என்னப்பா அப்துல்காதரு நம்ம ஊருல புதுசா ஒரு ஆலீம் வந்திருக்காரே ....அவர் யாரிடமும் பேச மாட்டார் போலே"... ?
"நாளு நபர்களிடம் பேசினா தானே நாளு பேர் பள்ளிக்கு வருவாங்க... இந்த நாலேஜ் கூட தெரியாத இமாமா இருக்காருப்பா அவரு"...

*பார்வை 2 :* "என்னப்பா ராவுத்தர் இமாம்னா இமாம் மாறி இருக்க வேணாமா ?
யாரை பார்த்தாலும் நம்ம இமாம் அரட்டை அடிச்சுகிட்டே இருக்காரே..."

*பார்வை 3:* "என்னப்பா பீர் முஹம்மது ... நம்ம இமாம் பேப்பர் செய்தியோ அல்லது  டீவி செய்தியவோ பார்க்கவே மாட்டார் போலே"... ?
"எப்ப பார்த்தாலும் தொழுகை நோன்பு மறுமைன்னே பேசீட்டு இருக்காரு .. காலத்துக்கு தகுந்த மாறி பேச வேணாமா"... ?

*பார்வை 4:* "ஏம்பா ராவுத்தரு நம்ம இமாம் இமாமுக்கு படிச்சாரா இல்லை வேற ஏதாவது படிச்சாரா"... ?
"எப்ப பேசினாலும் உலகத்தை தொட்டு பேசாமே போகவே மாட்டேன்குறாரே... தக்வாவை எப்பவுமே சொல்லனுமா இல்லையா"...  ?

*பார்வை 5:* "ஏன் தொப்பியும் வெள்ளை ஜிப்பாவும் போட்டாதான் இமாமா? நம்மளை போல டிரஸ் போட்டா இமாம் இல்லேன்னு ஆயிருமா"... !

*பார்வை 6:* "அடச்சே இவர் இமாமா.. ?
இல்லே வேற ஏதாவதுமா.." ?
ஒரே மாடல் மாடலா டிரஸ் போட்டே சுத்துறாரே..."

*பார்வை 7:* "இமாம்களை குறை சொல்லியும் பலன் இல்லை...
ஏனா என்னதான் இமாமா இருந்தாலும் அவரும் மனிதர் தானே? சின்ன சின்ன விசயத்தை எல்லாம் பெருசாக்க கூடாது மாப்பிள்ளை புரியுதா "...?

*பார்வை 8:* "கொஞ்சமாவது சிந்திச்சு பாரு பாரூகு"....
நம்மளுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் வேணாமா"...?
இமாம்னா அதுக்குன்னு சில தகுதிகள் இருக்கா இல்லையா..." ?
"இவங்களெல்லாம் என்னத்த மதராஸாவில  ஒதினாங்களோ... அல்லாஹ் ! அல்லாஹ்...!

இப்படி இமாம்கள் மீதான சமூக பார்வைகள் பலவிதம்...
ஆலிம்களின் உலகம் எவ்வளவு மன அழுத்தத்திற்குறியது , எத்தனை போராட்டத்திற்கு மத்தியில் அவர்களின் வாழ்க்கை கழிகிறது என்பது புரிகிறதா...?

நின்றாலும் குற்றம்... படுத்தாலும் குற்றம்... சிரித்தாலும் குற்றம்.... அழுதாலும் குற்றம் ....

*இமாமாக பணியாற்றும் ஓர் ஆலிமின் வாழ்க்கைப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அதில் அவர் வாழ்ந்த பக்கங்கள் வாசம் மிகுந்தவை அல்ல ... வலிகளும் நிறைந்தவை என்பதே உண்மை ...*

அவரின் வாழ்க்கை போராட்டத்தில்
பாசமுள்ள உறவுகள் சில...
வேசமுள்ள நெஞ்சங்கள் பல....
ஓர் மஹல்லாவில் இமாமை
தூற்றும் ஆயிரம் பேரிருக்க...
போற்ற ஒரு சிலர்தானுண்டு!
கஷ்டத்தில் கைகழுவ ஆயிரம் பேரிருக்க ...
கைகொடுக்க ஒரு சிலர்தானுண்டு!

இமாமை
பார்க்கும் போது பவ்யமாய் கைகுலுக்குபவர்கள்
தள்ளி நின்று கை நீட்டி குறை கூறியதும் உண்டு ...

*குலுக்கும் கைகளுக்குள் பொய் குலுங்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளாத அப்பாவி இமாம்களும் உண்டு...*

சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம் உண்டு .. ஆனால் வாழ்க்கையே போராட்டமாய் இருப்பது இமாம்களின் வாழ்க்கைதான் ...
எப்படி என்கிறீர்களா ...?
அடுத்த பதிவில் கூறுகிறேன் இன்ஷா அல்லாஹ்...

*செய்யது அஹமது அலி . பாகவி*

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்