வரலாற்றுச் சிறப்பு மிக்க துல்கஃதா
குர்ஆனில் சரித்திரமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்துடன் ஒரே சரித்திரமே கூட மீண்டும் மீண்டும் வேறு வேறு போங்கில் கூறப்படுகிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு வரலாறும் உருவாக ஆரம்பித்தது. எனவே, வரலாற்றுக்கலை என்பது உலகில் முக்கியத்துவம் வாய்ந்த கலை. வரவலாற்றின் மூலம் மனித அறிவு வளர்ச்சியடைகிறது. மனிதனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பல படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது, சரித்திரம். ஷவ்வால், துல்கஃதா ஆகிய இரண்டு மாதங்களுக்கு மத்தியில் உள்ள மாதம் துல்கஃதா. ஆனால், இந்த மாதம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல இந்த மாதத்தில் நடந்துள்ளன. கஃபதுல்லாஹ்: ஹாஜிகள் கஃபதுல்லாஹ்வை நோக்கி லப்பைக் முழக்கத்துடன் விரைந்து செல்லும் காலமிது. ஆரம்பமாக ஆதம் (அலை) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். பிறகு நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதைந்துவிட்ட பிறகு நபி இபுறாகீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அதே இடத்தில் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். அவர்கள் கஃபதுல்லாஹ்வுக்கு அஸ்திவாரமிட்டது, துல்கஃதா ஐந்தாம் தேதியாகும். மீன் வயிற்றிலிருந்து விடுதலை: யூனுஸ் (அலை) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் வேதனை வரும், என்று எச்சரித்திருந்தார்கள். வேதனை வரத் தாமதமானதால் ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள். ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென கப்பல் நின்று விட்டது. தம்முடைய எஜமானரிடமிருந்த அனுமியின்றி யாரோ இந்த கப்பலில் இருக்கிறார், என்று கப்பல் மாலுமி கூறினார். அச்சமயம் சீட்டு குலுக்கப்பட்டதில் யூனுஸ் (அலை) அவர்களுடைய பெயர் வந்தது. கடலுக்குள் இருந்த ஒரு மீன் அவர்களை விழுங்கி விட்டது. யூனுஸ் (அலை) அவர்கள் லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக இன்னீ குன்த்து மினள்ளாலிமீன், என்று ஓதினார்கள். கடைசியாக, குறிப்பிட்ட நாட்கள் மீன் வயிற்றில் இருந்த பிறகு அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் துல்கஃதா பதினான்காம் தேதியாகும். அவர்கள் வெளியேற்றப்பட்ட சமயம் மிகவும் பலகீனமாக இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக அல்லாஹ் துல்கஃதா மாதம் பதினேழாம் தேதி ஒரு சுரைக்காய் செடியை வளரச் செய்தான். மூஸா (அலை) அவர்களின் நோன்பு: பிர்அவ்ன் அழிக்கப்பட்ட பிறகு பனூஇஸ்ரவேலர்களுக்கு ஹலால், ஹராமை விளக்கி வைக்கும் ஒரு வேதத்தை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருந்தான். எனவே, பிர்அவ்ன் மூழ்கி அழிந்த பிறகு மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தை வழங்குமாறு வேண்டினார்கள். அப்போது அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை முப்பது நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டான். அந்த மாதம் துல்கஃதா மாதமாகும். (நூல்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபஸாயிலோ அஹ்காம்) ஹிஜ்ரி - 5: இந்த ஆணடின் துல்கஃதா மாதத்தில் தான் (மார்ச் - 627) பர்தாவுடைய சட்டம் இறங்கியது. கந்தக் யுத்தம் துல்கஃதா எட்டாம் தேதி (மார்ச் - 31, 627) நடந்தது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் இநத மாதத்தில் தான். ஹிஜ்ரி - 6: இந்த ஆண்டின் துல்கஃதா மாதத்தில் (மார்ச் - 628) உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் மக்காவுக்கு புறப்பட்டார்கள். எனினும் மக்காவாசிகள் முஸ்லிம்களை வரவிடாமல் ஹுதைபியா என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வருவது தாமதமானதால் உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டுவிட்டார்கள், என்ற வதந்தி பரவியது. உடனே, எல்லா நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் கையில், சாகும் வரை போராடுவோம், என்று ஒப்பந்தம் செய்து கொண்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பைஅதுர் ரிள்வான் என்ற உடன்படிக்கை நடந்ததும் இநத மாதத்தில் தான். இந்த ஒப்பந்தம் செய்து கொண்டவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக குர்ஆன் வசனம் இறங்கியது. கடைசியாக மக்கா காஃபிர்களே இறங்கி வந்து முஸ்லிம்களிடம் செய்து ஹுதைபியா உடன்படிக்கையை தெளிவான வெற்றி - மாபெரும் வெற்றி என்று குர்ஆன் வர்ணிக்கிறது. போர்க்காலத்தில் படையை இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு ரக்அத்தாக (வித்தியாசமான முறையில்) தொழும் தொழுகை போர்த்தொழுகை. இந்த போர்க்காலத் தொழுகையின் சட்டம் இறங்கியதும், முதன் முதலாக அமுல்படுத்தப் பட்டதும் இந்த மாதததில் தான். இந்த ஆண்டு துல்கஃதா முதல் தேதி (13, மார்ச் - 628) முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களை திருமணம் முடிப்பது தடைசெய்யப்பட்டது. ஹிஜ்ரி - 7: மக்காவாசிகள் ஏற்படுத்திய தடையின் காரணமாக கடந்த வருடம் செய்ய முடியாத உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு துல்கஃதா 1- ம் தேதி (மார்ச் - 629) மக்காவுக்கு புறப்பட்டார்கள். இதே மாதத்தில் தான், மைமூனா (ரலி) அவர்களை அவர்களை நபி (ஸல்) திருமணம் முடித்துக் கொண்டார்கள். நபியவர்கள் செய்த கடைசி திருமணம் இதுதான். ஹிஜ்ரி - 8: இந்த ஆண்டின் துல்கஃதா வில் கைஸ்பின் ஸஃத் (ரலி) அவர்களின் தலைமையில் 400 பேர் கொண்ட சிறுபடையை ஸுதா என்ற கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் துல்கஃதா பதினெட்டாம் தேதி (9, மார்ச் - 630) நேரடியாக நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். .இதே மாதத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறு படையை யமன் தேசத்திலுள்ள ஹம்தான் என்ற பிரிவினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களும் ஆறு மாதமாக இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள். எனினும், அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அலீ (ரலி) அவர்களை சில தோழர்களோடு அங்கு அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்களுடைய கரத்தில் அவர்கள் அனைவருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதே மாதம் 18 ஆம் இரவு (9, மார்ச் - 630) நபி (ஸல்) அவர்கள் ஜியிர்ரானா என்ற இடத்திலிருந்து உம்ராவுக்குப் புறப்பட்டார்கள். ஹிஜ்ரி - 9: இந்த ஆண்டு துல்கஃதா மாதம் (பிப்ரவரி - 631) அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இது, ஒரு கருத்தின்படி ஹஜ் கடமையாக்கப் பட்ட பிறகு முஸ்லிம்கள் செய்யும் முதல் ஹஜ்ஜாகும். ஹிஜ்ரி - 10: இந்த ஆணடு துல்கஃதா மாதம் 25 ஆம் தி (22. பிப்ரவரி - 632) நபி (ஸல்) அவர்கள் மதீனாவலிருந்து ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்பட்டார்கள். இந்த துல்கஃதா மாதத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பல நபித்தோழர்களும் நல்லவர்களும் உலகை விட்டும் பிரிந்திருக்கிறார்கள். அபூதர் கிஃப்பாரி (ரலி) (ஹிஜ்ரி- 32; ஜூன் - 653) அபூஹுரைரா (ரலி) (ஹிஜ்ரி- 57; செப்டம்பர் - 677) பர்ரா இப்னு ஆஜிப் (ரலி), (ஹிஜ்ரி- 72; மார்ச் - 792) அலா இப்னுல் ஹள்ரமீ (ரலி) (ஹிஜ்ரி- 21; அக்டோபர் - 642) கப்பாப் பின் அரத் (ரலி) (ஹிஜ்ரி- 37; ஏப்ரல் - 658) போன்ற நபித்தோழர்களும் இமாம் தாரமீ (ரஹ்) (ஹிஜ்ரி- 255; அக்டோபர் - 869) இமாம் தாரகுத்னீ (ரஹ்) (ஹிஜ்ரி- 485; அக்டோபர் - 995) போன்ற இமாம்களும் துல்கஃதா மாதத்தில் வஃபாத்தானார்கள். மொகலாயப் பேரரசின் மிகச் சிறந்த ஆட்சியாளர் ஔரங்கசேப் (ரஹ்) அவர்களும் இம்மாதத்தில் (28, 1118; கி.பி. பிப்ரவரி - 1707) மரணித்தார்கள். விடுதலைப் போராட்டம்: வங்கதேசத்தில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய ஸிராஜுத்தௌலாவும் (ஹிஜ்ரி - 1170; கி.பி. ஜூலை - 1757) தென்னிந்தியாவில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய திப்பு சுல்தானும் இம்மாதத்தில் (ஹிஜ்ரி - 1213; கி.பி. ஏப்ரல் - 1799) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய மாபெரும் மார்க்க ரோஷமுள்ள தியாகி ஷாஹ் இஸ்மாயீல் ஷஹித், சைய்யித் அஹ்மத் ஷஹித் ஆகியோர் இம்மாதத்தில் தான் (ஹிஜ்ரி - 1246; கி.பி. - மே, 1881) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆதார நூற்கள்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபாளாயிலோ அஹ்காம், அஹ்தெ நுபுவ்வத் கே மாஹொஸால்)
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ