தொப்பியும் தாடியும் புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிம்களின் முன்மாதிரி
திருடக்கூடாது.
பொய் சொல்லக் கூடாது.
லஞ்சம், ஊழல் கூடாது.
கடத்தல் கூடாது.
வட்டி கூடாது.
பதுக்கல் வியாபாரம் கூடாது.
பிற மதத்தை நிபந்தனை செய்யக் கூடாது.
நம்பிக்கைத் துரோகம் கூடாது.
பிறரை ஏமாற்றக் கூடாது.
பிறர் குறை பேசக் கூடாது.
பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
அனாதைகளை விரட்டக் கூடாது.
ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
பிறரை வம்பிழுக்கக் கூடாது.
எவரையும் அநியாயமாக கொல்லக் கூடாது.
எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
எவரையும் துன்புறுத்தக் கூடாது.
பெரும் சிரிப்புக் கூடாது.
பெருமை கூடாது.
பேராசை கூடாது.
ஆடம்பரம் கூடாது.
ஆணவம், அகம்பாவம் கூடாது.
ஆட்டம் போடக் கூடாது.
எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
பிறர் விசயத்தில் நுழையக் கூடாது.
அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
கோபம் கூடாது.
பொறுமை இழக்கக் கூடாது.
கஞ்சத்தனம் கூடாது.
எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
அபயமளிக்க மறுக்கக் கூடாது.
பிறர் உரிமை மீறக் கூடாது.
நடிக்கக் கூடாது.
வேடம் போடக் கூடாது.
ஒழுக்கம் தவறக் கூடாது.
அசுத்தமாக இருக்கக் கூடாது.
உறவுகளை துண்டிக்கக் கூடாது.
வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
நன்நம்பிக்கை நன்னடத்தை போன்ற நல்லவைகள் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்
இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விசயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.
எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக
1 கருத்து:
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மனிதப் படைப்பின் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்: – இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) மனிதப் படைப்பின் நோக்கமே வணக்கம் என்றால் நாம் வணக்கம் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும். வணக்கம் என்பதற்கு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில் ‘இறைகட்டளைகள் அனைத்துமே வணக்கமாகும்’ என்பதாகும். அதாவது இறைவனுடைய மற்றும் அவனுடைய தூதருடைய ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே வணக்கமாகும் என்பதாகும். இந்த வகையில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதும் சிறந்த வணக்கமாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த சிறிய தொகுப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகளின் பட்டியலைக் காண்போம். இவைகளை பேணி நடக்கும் ஒரு முஃமின் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சிறந்த நற்பேறுகளையுடைவராக விளங்கலாம். இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்! 1) அறிந்தவனுக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுதல். இது நேசத்தை உண்டாக்கும். வெறுப்பையும் பிரிவையும் அகற்றும். 2) பிறரிடம் முகமலர்ச்சியுடன் புன்முறுவல் பூத்தல். இது அன்பையும் நேசத்தையும் வளர்க்கும். 3) வலது கரத்தால் உண்ணுதல் மற்றும் குடித்தல். இடது கரத்தால் குடிப்பது iஷத்தானின் செயலாகும். 4) உண்ண மற்றும் குடிக்க ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல். இந்த செயல்கள் முடிவுற்ற பிறகு ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல் 5) ‘தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல்; அதைக் கேட்டவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுதல். 6) நோயாளியிடம் சென்று நோய் விசாரித்தல் 7) ஜானாஸாவை பின்தொடர்ந்து சென்று தொழுகையிலும் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்ளுதல் 8.) பள்ளிவாசலில் நுழையும் போது வலது காலை முன்வைத்து நுழைந்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதுதல். 9) பள்ளியிலிருந்து வெயியேறும் போது இடது காலை முற்படுத்துதல் 10) வீடு மற்றும் பிற இடங்களில் நுழையும் போதும் அல்லது அதிலிருந்து வெளியேறும் போதும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறைகளைப் பேணி அதற்குரிய துஆக்களை ஓதுதல் 11)) பயணத்தின் போது அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுதல் 12) பெற்றோருக்கு உபகாரம் செய்து அவர்களிடம் நன்முறையில் நடந்து கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்தல். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இதில் கவன் குறைவாக இருந்து விட்டால் மறுமை நாளில் மிகவும் கைசேதப் பட வேண்டியதிருக்கும். 13) உறவினர், அண்டை வீட்டார், மற்றும் சிறுவர், சிறுமியரிடம் நன்முறையில் நடந்து கொள்ளுதல். 14) குழந்தைப் பெற்றவர்களுக்கு வாழ்துக் கூறுதல் 15) திருமணம் செய்தவர்களுக்கு பரக்கத்திற்காக துஆச் செய்தல் 16) சோதனைக் குள்ளாக்கப்பட்டவனுக்கு ஆறுதல் கூறுதல். 17) ஆடை, காலணிகள் போன்றவற்றை அணியும் போதும் கழற்றும் போதும் இஸ்லாம் கற்றுத் தந்த முறையில் செய்தல் 18) கொடுக்கல் வாங்கலின் போது நீதமாக நடந்துக் கொள்ளுதல் 19) சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்தல் 20) செய்வதிலும் விடுவதிலும் நம்பிக்கையைக் கடைபிடித்தல் 21) கற்பை பேணி பாதுக் காத்துக்கொள்ளுதல் 22) இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல் 23) வெட்கம், வீரம், தர்மமம், தூய்மை, வாக்கு மாறாமை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல் 24) தாழ்ந்த குணங்களை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுதல். 25) தேவையுடையவருக்கு உதவி செய்தல். அடியான் அவனது சகோதரனுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் உபகாரம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உபகாரம் செய்பவர்களை நேசிக்கின்றான்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக நீங்கள் மக்களுக்கு உங்களின் பொருள்களைக் கொண்டு விசாலமாக நடந்துக் கொள்ள முடியாது. எனினும் உங்களின் முகமலர்ச்சியும், அழகிய குணமும் அவர்களிடம் தாராளமாக ஆகிவிடும்’ முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! ஒரு தீமைக்கு நன்மையை துயர்த்தி வைத்துக் கொள்! அது அத்தீமையை அழத்து விடும்’ எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! அல்லாஹ் நம்மனைவருக்கும் தாழ்ந்த குணங்களைத் தவிர்ந்தவர்களாக இஸ்லாம் கூறும் அனைத்து ஒழுக்கமாண்புகளையும் நற்குணங்களையும் பேணியவர்களாக நடந்திட அருள்பாலிப்பானாகவும்.
கருத்துரையிடுக