நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 11, 2019

குடியுரிமைத் திருத்த மசோதா (CAB)

தோழர். அ. மார்க்ஸ் பதிவு

குடியுரிமைத் திருத்த மசோதா (CAB) : முன்னுரையாகச் சில குறிப்புகள்
+++++++++++++++++++++++++++++
1.2014 தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க இதற்கு அடிக்கல் நாட்டி இருந்தது. .உலகில் எங்கிருந்து இந்துக்கள் வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதை அவர்கள் பிரகடனம் செய்திருந்தனர். இது, யூதர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது என்கிற இஸ்ரேலின் 'அலியாஹ்' (aliyah) கொள்கையின் மறுபதிப்புத்தான் என்பதை நான் அபோதே சுட்டிக்காட்டி, அது எத்தனை ஆபத்தானது என்பதையும் சொல்லி இருந்தேன்.
2. இப்போது முன்வைக்கப்படும் இச்சட்ட வரைவு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இடம்பெயரும் முஸ்லிம் அல்லாதவர்களு குடியுரிமை அளிக்க வழி செய்கிறது. பெரும்பானமை மதத்தால் துன்புறுத்தப்படும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை அளிப்பது எனும் பெயரில் இந்த மூன்று நாடுகள் தேர்வு செய்யப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மூன்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் என்கிற வகையில் இந்து எதிர் முஸ்லிம் என்கிற பகைமை கட்டமைக்கப்படுவதுதான் இதில் கவலை அளிக்கிறது.

3. முதல்முறை மோடி தலைமையில் அரசமைக்கப்பட்டபோது. "மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு" (religious persecution) இடம் பெயரும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்த வாசகம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. விளக்கம் கேட்டபோது முறையான பதில் இல்லை. இதன் பொருள் என்ன? அப்படியான் பிரச்சினைகள் இல்லாதபோதும் இந்துக்கள் மட்டும் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து குடியேரலாம். காரணம் ஏதும் தேவையில்லை என்பதை அவர்கள் உலகிற்கு அறிவிக்கிறார்கள்.. இதன் பொருள் இஸ்ரேல் ஒரு யூதர்களின் நாடாக உருப்பெற்றுள்ளதுபோல இந்தியா ஒரு இந்துக்களின் நாடாக மறைமுகமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது என்பதே.

4.ஆனால் இது நமது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிரானது. மதத்தின் பெயரால் இப்படியான வேறுபடுத்தல்களுக்கு நமது அரசியல் சட்டத்தில் இடமில்லை. அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல்தான் தொடர்ந்து இவர்கள் இப்படிச் செய்துகொண்டுள்ளனர். அரசியல் சட்ட அடிப்படைகளை எளிதாக மாற்றிவிட இயலாது. கேசவானந்தபாரதி தீர்ப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அப்படியான முயற்சியைச் சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டது. எனவே படிப்படியாக இப்படியெல்லாம் அவர்கள் அரசியல் சட்டத்தைப் பொருளற்றதாக்குகிறார்கள். நமது நீதிமன்றங்களும் இப்போது துணிச்சலாக அரசியல் சட்ட அடிப்படைகளைக் கையாள்வதில்லை.

5.இந்த மூன்று நாடுகளிலும் உள்ளவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்தக் குடியுரிமை அளிக்க இயலாது என்பதை இவர்கள் எவ்வாறு நியாயப்படுத்துகின்றனர். இவை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள். எனவே மதத்தின் பெயரால் முஸ்லிம்களுக்குப் பிரச்சினைக்கு வாய்ப்பில்லை என்பது இவர்கள் முன்வைக்கும் 'லாஜிக்'. ஆனால் 'முஸ்லிம்கள்' எனும் மத அடையாளமும் பல உள் வேறுபாடுகளைக் கொண்டதுதான். அகமதியாக்கள், ஷியாக்கள், நாத்திகர்கள் ஆகியோர் முஸ்லிம் சமுக்கங்களிலேயே துன்புறுத்தப்படுவது கண்கூடு. ஆனால் இச்சட்டம் அவர்களுக்கு இந்தக் குடியுரிமைப் பாதுகாப்பை அளிப்பதில்லை.

6. வெளிநாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதை யாரும் எதிர்க்கவில்லை. இன்றுவரை இந்திய அரசுக்கு ஒரே சீராக அகதிகள் கொள்கை கிடையாது. அந்தத் துறையில் எந்த முயற்சியும் இல்லை. திபெத்திய அகதிகளுக்குக் கூடுதல் சலுகைகள் உண்டு. இலங்கை அகதிகளை மத்திய அரசு உரிய சிறத்தையுடன் கண்டுகொள்வதில்லை. எனவே ஒரு பரந்த நோக்கில் அகதிகளாக வருபவர்களுக்கு ஏற்பு அளிப்பது எனும் நோக்கில்,செய்யப்படும் முயற்சி அல்ல இது. அப்பட்டமான ஒரு மதவாத நடவடிக்கை இது,.

7. நேபாளம், இலங்கை போன்றவை இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள நாடுகள். நேபாளமும் இந்தியாவும் ஒரே எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்ட நாடுகள். இலங்கையைப் பொருத்த மட்டில் இந்திய மொழிகளில் ஒன்றைப் பேசும் மக்களைக் கொண்ட நாடு. தமிழர்களாகிய இவர்களுக்கு இந்த உரிமையை அளிக்க பா.ஜ.க அரசு தயாராக இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

8.வடகிழக்கு மாநிலங்களில் இவ்வாறான அண்டை நாட்டு மக்களின் ஊடுருவல்களால் அம்மாநில மக்கள் கவலையுறுவது ஒரு முக்கிய பிரச்சினை என்பதில் ஐயமில்லை..ஆனால் இன்று அது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்லையோரங்களில் இரட்டை வேலிகள் போடப்பட்டு ஊடுருவல்கள் தடுக்கப்பட்டுள்ளது. இங்கு அதை யாரும் எதிர்க்கவில்லை.

9. முஸ்லிம் அல்லாத சிறுபான்மைகளுக்குப் பிரச்சினை இல்லை எனச் சொல்வது ஒரு அப்பட்டமான எரெமாற்று. முதலில் நமது அரசியல் சட்டத்தின் 14ம் பிரிவின்படி அப்படி மதவேறுபாடு காட்ட முடியாது. அடுத்டு அப்படி ஒன்றும் இவர்களுக்கு கிறிஸ்துவர்கள் போன்ற பிற மதத்தவர் மீது கரிசனம் கொண்டவர்கள் இல்லை. முதலில் முஸ்லிம்களை ஒதுக்கி வெற்றிபெற்றுவிட்டால் பின் அடுத்தடுத்து மற்ற இந்து அல்லாதவர்களையும் ஒதுக்கி இறுதியாக இந்து நாடாக இதை முன்னிறுத்தலாம் என்பதே ஆட்சியாளர்களின் திட்டம்.

10. இச்சட்டம் பிரிவு 4(6பி) யில் அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம் முதலான வடகிழக்கு மாநிலங்களைக் குறிப்பிட்டு சில விலக்குகள் குறிப்பிடப்படுகின்றன. அவை தெளிவாக இல்லை என்பதோடு ஏன் மணிப்பூர் மட்டும் இப்பட்டியலில் விலக்கப்பட்டுள்லது என்பதும் தெரியவில்லை.

- Marx Anthonisamy


*ஒருவரின் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லை என்றால் அவ்வளவு தான்*,

தன்னை இந்திய குடிமகன் தான் என்பதை நிரூபிக்க குடியுரிமை தீர்ப்பாயத்திற்கு செல்ல வேண்டும்.

கோடிக்கணக்கான மக்களை குடியுரிமை பதிவேட்டில் இருந்து திட்டம் போட்டு நீக்கினால் அது பெரும் ஆபத்தாகும் வாழ்வுரிமையை நசுக்க கூடியதாகவும் மாறி விடும்.

குடியுரிமை ஒருவனுக்கு மறுக்கப்பட்டால், அவனுக்கு எந்த ஆவணமும் கிடைக்காது,

வங்கி கணக்கு, கல்வியறிவு, ஓட்டுநர் உரிமை, அரசு பணி, தனி நபர் குறுந்தொழில் எதையும் செய்ய இயலாது,

அன்றைய ஆப்ரிக்கா ஐரோப்பிய போல் லட்சணக்கான மக்களை முள்வேளிகளுக்கு அப்பால் வதைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

யார் யாரையும் அணுகவோ கேள்வி கேட்க்கவோ அடிப்படை உரிமைகளை பேணவோ, போராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

அசாமில் இருபது லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு உள்ளது, 

காலம் காலமாக இந்த நாட்டில்  வாழ்ந்தவர்கள், ஊடுருவியவர்கள் என்று முத்திரை குத்தி செல்வங்களையும் வளங்களையும் அவர்கள் ஈட்டிய பொருளாதாரத்தையும் அபகரித்துக்கொள்வார்கள். 

மதம் மற்றும் இனவெறி அடிப்படையில் பிரிக்கப்பட்ட  இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டதிற்கே எதிரானது. 

ஒரு பக்கம் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்படும் அதே வேளையில் இன்னொரு பக்கம் ஈழ தமிழர்களுக்கு இன அடிப்படையில் குடியுரிமை மறுக்கப்படுகிறது. 

2014- க்கு முன்பில் இருந்து இந்தியாவில் இருப்போருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதில் முஸ்லிம்களையும்  அசாம் இந்துக்களையும் ஈழ தமிழர்களையும் திட்டமிட்டு குடியுரிமை வழங்கப்படாது என மறுத்துள்ளார்கள். 

மாட்டுக்கும் மாட்டு மூத்திரத்திற்கும் மாட்டு சாணிக்கும் மட்டுமே அரசியல் செய்யும் அறிவீனர்களின் கையில் தீபகற்ப இந்தியா சிக்குண்டுள்ளது. 

 மழை  வெள்ளத்திலும்,  பூகம்பத்திலும், தீயிலும்  ஆவணங்கள் இழந்தவர்களும்  வீடு வாசல் இன்றி கோடிக்கணக்கான மக்கள் நாடோடிகளாகவும் ப்ளாட்பாரவாசிகளாகவும் எந்த ஆவணங்கள் இன்றி வாழும் தேசத்தில் தன்னை இந்தியன் என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அவர்களின் கதி என்னாவது? 

குடியுரிமை தீர்பாயத்திற்கும் வதை முகாம்களும் அலைந்து அலைந்து வாழ்வியலை தொலைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகி விடும்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகள் ... வரலாறு உங்களை மன்னிக்காது 
- BJP👎
- BJD
- YSRCP
- JDU
- AIADMK 👎
- PMK👎
- TDP
- SAD
- LJP

 எதிர்த்து வாக்களித்தவார்கள் 
- INC👍
- DMK 👍
- MDMK👍
- VCK 👍
- CPM👍
- AIMIM
- AAP
- TRS
- NCP
- SP
- TMC
- RJD
- IUML

#தமிழினதுரோகிADMKபிஜேபிPMK


கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்