முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது.
அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம்.
நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும்,இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன்
என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி,முஸ்லிம்)
ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர். என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளூம் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு
அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்)
மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, 'அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் (1977)
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்'
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி(1592)
"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா)நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்."
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம்(1976)
ஹுசைன்(ரழி)கொலைக்கும் யஸீதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.யஸீத் ஹுசைனை அல்லாஹ்வின் தூதரின் பேரன் என்ற அடிப்படையில் கண்ணியமான முறையில் கைது பண்ணிதான் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.ஆனால் படைக்கு தளபதியாக சென்றவர்தான் ஹுசைன்(ரழி)மேல் உள்ள ஆத்திரத்தின் காரணமாக அவரைக்கொன்று தலையை கொய்து வந்து யஸீதுக்கு முன்பு கொண்டு வந்தார்.அப்போது யஸீத் கடுமையான கோபம்
அடைந்தார்"அல்லாஹ்வின் தூதரின் பேரனின் தலையைக்கண்டு கண்ணீர் வடித்தார்.இவ்வாறு கடுமையான முறையில் நடந்து கொண்டதற்காக அத்தளபதியை கைது செய்தார்.மேலும் தன் மனைவியையும்,தன் குடும்பத்தாரையும் ஹுசைன்(ரழி)யின் மரணத்திற்காக மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கச்சொன்னார்.அதுமட்டுமல்ல ஹுசைனின் எஞ்சியிருந்த குடும்பத்தாரை அழைத்து வரச்செய்து அவர்களின்
எதிர்காலத்துக்கு தானே பொருப்பேற்றுக்கொண்டார்.[அவர்களை அவரே வளர்க்க பொருப்பேற்றுக்கொண்டார்]இது தான் உண்மையான வரலாறு.
இன்னும் யஸீத் பின் முஆவியா அவருக்கு எதிராக எல்லோருடைய மனசிலும் துவேஷத்தை உண்டு பண்ணுவதற்காக வரலாற்றை திரித்து எழுதி அவரை ஒரு மோசமான கொலை காரராக சித்தரிக்க ேவண்டாம்
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
வியாழன், பிப்ரவரி 20, 2014
மலக்கு, ஜின், மனிதன்
இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன.அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால்(LIGHT/RAY)படைக்கப்பட்ட மலக்குகள்,இரண்டு சுட்டெரிக்கும் நெருப்பின் கொழுந்தினால் படைக்கப்பட்ட ஜின்கள்(FIRE - Smokeless Flame).இதனை விஞ்ஞான ஒளியின் நோக்கினால் ஜின்கள் ப்ளாஸ்மா(Plasma)வடிவில் இருப்பதாகவே எண்ணத்தோனறுகிறது.இவை இரண்டும் சக்திக்குள் அடங்குபவை.மூன்றாவது களிமண்ணால்
படைக்கப்பட்ட மனித வர்க்கம்.இது சடத்தினுள் அடங்குகின்றது.
“களிமண்ணிலிருந்து,அவன் மனிதனைப்படைத்தான். நெருப்பின் கொழுந்திலிருந்துஅவன் ஜின்களைப் படைத்தான்”(55:14,15)
மனிதன் களிமண் எனும் சடத்தினால் ஆக்கப்பட்டாலும் அவனது உடலில் ஊதப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ரூஹ்.அல்லாஹ் சக்தியின் மூலம்,அவன் அழியாதவன் என்பதால் அவனது ரூஹிலிருந்து ஊதப்பட்ட மனித ரூஹும் அழிவதில்லை.ஏனெனில் மனித ரூஹும் ஒரு சக்தியாக(Energy)இருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன்.ஜின்களும் மலக்குகளும் கூட சக்திக் கூறுகளினால் ஆக்கப்பட்டவர்கள்.எனவே ரூஹ்,ஜின்,மலக்கு
இவைகள் இவ்வுலகம் அழிந்தாலும்,அழியாது நிலைத்திருக்கும் மறுமை வாழ்வை அவற்றால் அனுபவிக்க முடிகின்றது.மலக்குகளுக்கு சுவனம் நரகம் இல்லாவிட்டாலும் அவையும் நிலைத்திருக்கக்கூடியனவே!
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் உடம்பு களி மண்ணாக இல்லை,இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும்(Minerals)மனிதஉடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்புச் சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலை(Plasma-Radiant energy)அவை கொண்டுள்ளன.அதேபோன்று ஒளியினால் படைக்கப்பட்ட
மலக்குகள் ஒளிக் கீற்றுக்களைப் பாய்ச்சுபவர்களாக இல்லை.ஆனால் ஒளியின் பண்புகளான ஒளியின் வேகத்தில் பயணித்தல்(300,000Km/h),எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்களைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர்.
இம்மூன்று படைப்புகளுக்கும் கால,சூழ,வெளி போன்றவற்றுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.மலக்குகள் அதிகூடிய வேகத்தில் விண்ணில் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.காரணம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.
அதேபோன்று மனிதர்களைப்போல் அல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் ஜின்கள் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம்,காலம்,வெளி,இவர்களுக்கு பொருட்டல்ல! ஜின்களுக்கு அல்லாஹ் இவ்வாற்றலை மட்டுப்படுத்தி கொடுத்துள்ளான்.ஏழு வானங்களைப் படைத்து அதில் தாழ்வான வானத்தில் ஒரு தடுப்பையும் அமைத்துள்ளான்.அல்குர்ஆன்
கூறுகிறது.
“ நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்)
எறியப்படுவார்கள்.” (37:6-10) (15:16-18) (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன.
“நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம்.அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9)
மனிதனை அல்லாஹ் பூமியில் படைத்து அவனுக்கான வாழ்வாதாரங்களையும் வழங்கியுள்ளான்.மனிதனால் சுயமாக பிரபஞ்ச வெளியைக் கடக்க முடியாவிட்டாலும் அதற்கான“சுல்தான்–சக்தி”இல்லாமல் செல்ல முடியாது என்று அல்குர்ஆன்(55:33)கூறுகின்றது.
மொத்தமாக நோக்கும்போது இப்பிரபஞ்ச வெளி எங்கும் மலக்குகளும்,ஜின்களும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.சிலவேளை நாம் அறியாத இன்னும் பல படைப்புகளை அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்திருக்கவும் கூடும்.இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் இறைவனின் வல்லமைகளையும் நோக்கும்போது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அல்லாஹ்வின் படைப்புகளான ஜின்களையும்,மலக்குகளையும் நமது கண்களால் காண முடியாது. நமது கண்களுக்குவெறும்400தொடக்கம்700நானோமீட்டர்(nanometer)அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியும்.மலக்குகள் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருநப்பதால்தான் அவற்றை எம்மால் காண முடியாதுள்ளது.
ஜன்ன என்ற அரபிச் சொல்லிருந்து ஜின் என்ற பதம் வந்துள்ளது.இதற்கு மறைக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம். ஜின்கள் நெருப்புச் சுவாலை வெப்பத்தால் அதாவது மின்காந்த வெப்ப அலை வடிவில்(Electromagnetic-Plasma Radiant Energy)படைக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் எம்மால் பார்க்க முடிவதில்லை.ஆனால் அவர்களால் எம்மைப் பார்க்க முடியும்.
மனிதனால் இடத்திற்கு ஏற்றவாறு தனது குணத்தை(பச்சோந்தி)மாற்றிக்கொள்ள முடியும்.ஆனால் மலக்குகளாலும் ஜின்களாலும் தமது உருவத்தையே மாற்றி பிற உருவங்களில் வர முடியும்.நபியவர்கள் கூறினார்கள்“மலக்குகள் நாய்,பன்றி தவிர்ந்த மற்ற உயிரினங்களின் உருவத்தில் வருகின்றன”.அதேபோன்று ஜின்களுக்கும் தமது உருவத்தை மாற்றி பாம்பு,நாய்,பூனை போன்ற உருவங்களில்
வருகின்றன.சைத்தான் அதிகமாக கருப்பு நிற நாய்களின் வடிவத்தில் வருவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அதேபோன்று வீட்டினுள் ஒரு ஜின் பாம்பாக உருவெடுத்து வந்தபோது அதனை அடிக்க முற்பட்ட ஒரு ஸஹாபியை அது தீண்டி அவர் மரணித்த சம்பவம் நபியவர்களுக்கு எத்திவைக்கப்பட்டமையும்,வீடுகளுக்கு பாம்பு வந்தால் மூன்று முறை அவற்றை வெளியேறுமாறு சொல்லுமாறும் வெளியேறினால் அது ஜின் என்றும் இல்லாவிட்டால் அது பாம்பு தான் அதனை அடிக்குமாறும் நபியவர்கள் கூறிய விஷயங்களை நாம்
அறிவோம்.
சனி, பிப்ரவரி 15, 2014
இஸ்லாத்தில் பெண்கள் ஆபரணங்கள்
இஸ்லாத்தில் பெண்வெளியில் செல்லும்போது
ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.
”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல் வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களை யும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக்
கூடியவர்களாக இருந்தனர்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.
இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டா லும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதை களிலும்,
கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்
ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்
இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது
தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்
வெள்ளி, பிப்ரவரி 14, 2014
இஸ்லாமியபெண்ணின் தலைமுடி அலங்காரம்
முஸ்லிம் பெண் தன் தலைமுடியை நீளமாக விட வேண்டும். காரணமின்றி தலையை மொட்டையடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
ச¥தி அரேபியாவின் மார்க்க தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷேக் அவர்கள் கூறுகிறார்கள்.
”பெண்கள் தங்கள் தலைமுடியை மளித்தல் கூடாது.”
”பெண் தன் தலைமுடியை மளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்” என அலீ ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். (நூற்கள்: நஸயீ, பஸ்ஸார் மற்றும் இப்னுஜரீர்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளதாக ஹதீஸில் ஒரு விஷயம் வருமானால் அது விலக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் குறிக்கும். அதற்கு மாற்றமமான இன்னொரு விஷயம் வந்தாலே தவிர.
முல்லா அலிகாரி அவர்கள் ‘மிஷ்காத்’ என்ற நூலின் விரிவுரையான தன்னுடைய ‘மிர்காத்’ என்ற நூலில் கூறுகிறார். ”பெண் தன் தலைமுடியை மளிப்பது கூடாது என்பது எதற்காகவென்றால் பெண்கள் கூந்தலை விடுவது தோற்றத்திலும் அழம்லும் ஆண்கள் தாடி விடுவதற்கு ஒப்பானதாகும்.” (ஷேக் முஹம்மதுபின் இப்ராஹீம் ஃபத்வா தொகுப்பு 2- 49)
ஒரு பெண் தன் தலைமுடியை நீளமாக விடுவது சிரமமானதாகவோ, அதைப் பராமரிப்பதற்கானச் செலவை மேற்கொள்வது அவளுக்கு முடியாமலோ இருக்குமானால் தேவையான அளவு அலங்காரத்தை நோக்கமாகக் கொள்ளாது. தலைமுடியை குறைத்துக் கொள்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் சில மனைவிமார்கள், அலங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட முடி வளர்க்கும்
தேவையற்று இருந்ததாலும் தங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டார்கள்.
அதேநேரத்தில் இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயவர் களுக்கு ஒப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, ஆண்களுக்கு ஒப்பாக தோற்றமளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு பெண் தன் தலைமுடியைக் குறைப் பாளானால் அது தடை செய்யப்பட்டதாகும். பொதுவா கவே இதைத் தடை செய்வதற்குண்டான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அலங்காரத் திற்காக அவ்வாறு செய்வாளானால் நாம் அறிந்தவரை அது
அனுமதிக்கப் படாததாகும்.
முஹம்மத் அமீன் சின்கீதீ ‘அள்வாஉல் பயான்’ எனும் குர்ஆன் விளக்கவுரை நூலில் குறிப்பிடுகிறார்.
”தற்போது அதிமான நாடுகளில் பழக்கத்தில் காணப்படுகின்ற பெண்கள் தங்கள் தலைமுடியை முழுமையாக வெட்டிக் கொள்வது என்பது இஸ்லாமிய பெண்களும் இஸ்லாத்திற்கு முற்காலத்திலுள்ள அரபியப் பெண்களும் செய்துவந்த பழக்கத்திற்கு நேர் மாற்றமான கலாச்சாரமாகும். இது மார்க்கத்திலும் பண்பாட்டிலும் பரந்து விட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் தங்கள் தலை முடியைக் குறைத்து குட்டையாக ஆக்கிக் கொள்வார்கள். என ஹதீஸில் வந்ததன் விளக்கம் என்னவென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர் களின் மனைவிமார்கள் அவர்களுக்காக தங்களை அலங்க ரித்துக் கொள்வார்கள். அவர்களின் தலை முடிதான் மிக வும் அழகானதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர் களின் மனைவிமார்களுக்கென தனிச்சட்டங்கள் உள் ளன. இந்த சட்டங்களில் ப+மியில் உள்ள எந்த ஒருபெண் ணும் கூட்டாக முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத் திற்குப்பின் அவர்களின் மனைவிமார்களை வேறு யாரும் திருமணம் செய்யமுடியாது. ஆசையில்லாத அளவிற்கு அவர்கள் திருமணத்திலிருந்து
நிராசையாகிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என்ற காரணத்தினால் அப்பெண்களின் மரணம் வரை இத்தாவில் இருக்கின்ற பெண்களைப் போன்றிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு உகந்ததல்ல, மேலும் அவருடைய மனைவி களை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமான காரியமாகும்.” (அல்குர்ஆன் 33:53)
ஆண்களிலிருந்து முழுமையாகவே அவர்கள் நிரா சையாகிவிட்டதால் மற்ற பெண்களுக்கு அனுமதிக்கப் படாத சில விஷயங்கள் இவர்களுக்கு சலுகை வழங்கப் படுவதற்கு காரணமாக இருக்கலாம். (அல்வாஉல் பயான் 5: 598 – 601)
பெண்கள் தன் தலை முடியைப் பாதுகாக்க வேண்டும், அதை கண்காணிக்கவேண்டும் அதை கோர்வையாகப் பிண்ணிப்போடவேண்டும். முடியை தலைக்கு மேலோ அல்லது தலைக்குப் பின் பக்கமோ கொண்டை போன்று குவித்து வைப்பது கூடாது.
மேலும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் கூறுகிறார்கள். சில மோசமான பெண்கள் தங்கள் தலைமுடியை ஒன்றாகச் சேர்த்து ஒரே கூந்தலாக்கி தங்கள் இரண்டு புஜத்திற்கிடையில் தொங்கவிடுகின்றனர். (பக்கம் 22ழூ ழூ பக்கம் 145)
ச¥தி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் அவர்கள் கூறுகிறார்கள்: இக்காலத்தில் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடியை ஒரு ஓரத்திலிருந்து சீவி முடியை ஒன்று சேர்த்து தலைக்குப் பின் பக்கமாக விடுவதும் அல்லது தலைக்கு மேலே சேர்த்துவைப்பதும் ஃபிரஞ்ச் கலாச்சாரமாகும், இவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு செய்வது
இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
”என் சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தினர் நரக வாசிகளாக இருக்கின்றனர். அவர்களை நான் பார்த்ததில்லை (அதாவது அவர்கள் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்). ஒரு சாரார் மாட்டு வாலைப் போன்ற சாட்டையை தங்களின் கையில் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமானவர்களாகக் காட்சியளிக்கும் பெண்கள்; அவர்கள் ஆடிஆடி
நடப்பார்கள் பிறரையும் அவர்கள் பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை சாய்ந்த ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும் அவர்கள் சுவர்க்கம் செல்லவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் நீண்ட தூரத் திலிருந்து வீசும்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் றார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்:
முஸ்லிம்)
ஆடிஆடி நடப்பார்கள் என்பதன் பொருள், தவறான விபச்சாரிகள்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு – உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு – போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு – மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன. A. பாபிலோனிய நாகரீகம்: பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது. B. கிரேக்க நாகரீகம்: பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி ‘பெருமைக்குரிய’ நாகரீக காலத்தில் – பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘பண்டோரா’ என்றழைக்கப்பட்ட ‘கற்பனைப் பெண்மணி’ யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் – ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் – உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் – ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் – பாலியியல் பலாத்காரங்களுக்கும் – பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் – விபச்சாரம் பரவலாக காணப்பட்டது. C. ரோமானிய நாகரீகம்: ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் – பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் – ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது. D. எகிப்திய நாகரீகம்: எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் – சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள். E. இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்: அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு – அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள். 2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது. ஆண்களுக்குரிய ‘ஹிஜாப்’ வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் ‘ஹிஜாப்’ முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் ‘(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.‘ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.
பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’
அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.
இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.
2)அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.
3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்
4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.
6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் – பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.
மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் – இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு – தனது கண்களிலும் – தனது உள்ளத்திலும் – தனது எண்ணத்திலும் – இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது – ஒருவர் நடக்கும் விதத்திலும் – அவர் பேசும் விதத்திலும் – அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.
5. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.
பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் – அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் – ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்:
இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?.
கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.
7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
வியாழன், பிப்ரவரி 13, 2014
ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகையின் போது என்னஓதுவது
என்று நம்மில்
சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....
அவர்களுக்க
ஜனாஸா தொழுகை
=>முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை(அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....)ஓத வேண்டும்.
=>இரண்டாவது தக்பீருக்கு பின்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். (புகாரி)
=>மூன்றாவது தக்பீருக்கு பின்
மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்
அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் (முஸ்லிம், நஸயி)
=>அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா, அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். (நஸயி, அஹ்மத்)
=>நான்காவதுதக்பீருக்கு பின்
ஸலாம் கூறவேண்டும்
ஞாயிறு, பிப்ரவரி 09, 2014
இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.’ (அல்குர்ஆன் 17:32)
இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை அணி கலன்கள் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர் ஏனைய சமுதாயங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று ஆராய்வோம்.
கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகக்கருத,
ரோமானியர்களோ பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதிவந்தனர்.
மேலும், பிரெஞ்சுக்காரார்கள் கி.பி. 586ல் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளா? இல்லையா? என முடிவெடுக்க ஒரு ஆய்வு சபையை அமைத்தனர். இவ்வாறாக, பிறசமுதாயங்களில் பெண்கள் மிகவும் இழிநிலைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
ஆனால், சத்திய இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுக்குரிய உரிமையையும் அந்தஸ்த்தையும் வழங்கி சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது பற்றி அருள்மறையாம் திருமறை குறிப்பிடுகையில்,
‘சிலரை விட மற்றும்சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 04:32)
‘குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அப்பங்கீடு கட்டாயக் கடமை.’ (அல்குர்ஆன் 04:07) என்று கூறுகின்றது.
பெண்ணின் பெருமைகளைப் போற்றி, பெண்ணுக்குரிய கண்ணியத்தினை வழங்கிய வாழ்வியல் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கத்தின் ஆடை அணிகலன்கள் தொடர்பான வழிகாட்டலும் மிக உன்னத மானதாகும். ஆடை அணிவதன் நோக்கம் அதன் பயன்கள் தொடர்பாக அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)
இஸ்லாத்தின் எதிரிகள் நமக்கு எதிராக செய்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நாகரீக ஆடைகள் என்ற பெயரில் பெண்களின் உடல் அவயங்கள் தெரியக்கூடிய வகையில் மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை பெண்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அதில் அவர்களை ஆர்வம் கொள்ளச்செய்ததாகும். அவ்வாறான ஆடைகளில் பெரும்பாலான ஆடைகள் தமது வீடுகளில், சக பெண்களுக்கு மத்தியில் கூட அணிய முடியாதவைகளாகும்.
உத்தம நபித்தோழியரின் வாழ்வினை படிப்பினையாகக் கொண்டு செயற்பட வேண்டிய பெண்கள்
சீரழிந்த கலாசாரத்தின் சொந்தக்காரர்களான ஒழுக்க வாழ்வில் நெறியீழந்த சினிமா நடிகையர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படு கின்றார்கள். இவர்களைப் பார்த்து அனுதாபம் கொள்வதா? ஆத்திரப்படுவதா?
மேலும், மாலை நேர பிரத்தியேக வகுப்புக் களுக்குச் செல்லக்கூடிய எமது மாணவிகள் முகத்தை மூடி, மார்க்கம் மறைக்கச் சொன்ன முழங்கையை வெளிப்படுத்துவதுடன்; மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு செல்கின்றனர். அதுமாத்திர மன்றி, நாகரீக ஆடை என்ற பெயரில் தமது கால்பகுதியில் வெட்டு வைத்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். இவ்வாறு ஆடை அணிபவர்களைப் பற்றி அல்லாஹ்வின்
திருத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கையில்:
‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களை தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை
ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)
இந்த நபிமொழியைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுமாத்திரமன்றி, நாகரீகம் என்று மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக்கின்ற சகோதரிகள் கீழ்வரும் நபிமொழியையும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின் றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)
இறுதியாக, ஒழுக்கம் மிக்க ஆடையாக திகழ்வதுடன் மிகச்சிறந்த நாகரீக ஆடையாகவும் விளங்குகின்ற ‘ஹிஜாபை’ பேணுவதன் மூலம் நாம் கொடிய நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, அருளாளன் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவோமாக!
ஆடை அணிந்தும் நிர்வாணம் அழிவு நாளின் அடையாளம்
அழிவு நாளின் அடையாளங்கள்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும்(புகாரி 80,
ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
நூல்: அஹ்மத் 1511
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது(புகாரி 7115, 7121)
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்ப பொய்யர்கள தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது( புகாரி 3609, 7121)
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456)
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926)
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'( புகாரி 5179)
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119)
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது
(புகாரி 3517, 7117)
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 1036, 1412, 7121)
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான்.( புகாரி 1424)
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936)
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)க ளுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
(நூல் : முஸ்லிம் 2451)
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும(முஸ்லிம் 3546)
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது
நூல்: முஸ்லிம் 5162.
அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!
இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இஸ்லாத்தில்பெண்ணை கண்ணியப்படுத்தி அவளுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவித்து அவளுக்கு, சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.
கல்வி
மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது.
*."கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்."(பைஹகி'') என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பெண்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மேலேயுள்ள நபி மொழி அமைந்து காணப்படுகின்றது
இன்னும் பெண்ணுக்கு மணமுடிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் "மஹர்" கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள்.
மணமுறிவு
*."நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹர்களை" கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்.(அல்குர்ஆன் 4:4)
தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண்தன் கணவனிடமிருந்து மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை.
சொத்துரிமை
பெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7)என அல்குர்ஆன்கூறுகின்றது.
எனவே ஒரு பெண் தனது பெற்றோரிடம்,கணவனிடம்,சகோதரர்களிடம் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்களைப் பெறத் தகுதியுடையவர்களாகின்றாள். மேலும் சொத்துக்களைத் திரட்டவும், பாதுகாக்கவும், வியாபார முயற்சிகளில் ஈடுபடவும் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது
இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும்
வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.
”தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.” (அல்குர்ஆன் 4:27)
இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ் லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல் படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என
விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங் களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி
வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத் திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளி யிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ் தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும்,
விற்பனையை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன் படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் ‘ஷோகேஸ்’ பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத் தில்தான் அமைத்துள்ளனர்.
பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ”நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்” என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின்
கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன
இஸ்லாம்
இஸ்லாம்
அரபு: ; al-'islām, என்பது ஒரிறைக் கொள்கையைகொண்ட ஒரு மார்க்கமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிர்க்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது
இஸ்லாதின் நம்பிக்கை.
இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாதின் கட்டாயக் கடமைகளாகும்.
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபிகள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார்கள். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாதின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்
1.
இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்
2.
சொல்-வேர்
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இதுஇ-ஸ்-ல்-ம்என்ற நான்கு அரபிவேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிப்படுவது என்பதாகும்.
நம்பிக்கைகwள்
குர்ஆன்-இஸ்லாமிய வாழவியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை
இஸ்லாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விஷயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது
3
இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.
கடவுள்
“கடவுள் ஒருவனே. அவனே அல்லா. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இஸ்லாதின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லா என்ற அரபுச் சொல் பால்வேறுபாடுகாட்டாத ஒரு படர்க்கைச் சொல். இதன் மூலம் “இல்லா” எனப்படும் சொல் ஆகும். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.
4.
வானவர்கள்
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல்
ஒரு இஸ்லாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது
5. இறைவனை தொழுதவன்னம் இருப்பது, இறைதூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புன்னிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது.யிப்ரீல், இந்த வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்கள்
வேதங்கள்
முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள்கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இஸ்லாமிய கடமையாகும்.தவ்ராத்,சபூர், இஞ்சில்,ஆகியவை முறையே மூசா,தாவூத், ஈசா,ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டது,
இன்னும் இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குர்ஆன் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைதூதர்கள் எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெர்வு செய்யப்பட்டவர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களில் கடமை . முகம்மது நபி. இவர்களில் இறுதியானவராக குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறுதித் தீர்ப்பு நாள்
ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புன்னியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும்.கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது.
விதி
விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இஸ்லாதின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குர்ஆன் தடுக்கின்றது
சனி, பிப்ரவரி 08, 2014
இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:1.கணவனுக்கு கட்டுப்படுதல்:எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர்நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.5.ரகசியம் காத்தல்:கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.விருந்தோம்பல்:யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும்உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.அப்போது அல்லாஹ் ‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.
தர்மம் செய்தல்:
‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி
உண்மை பேசுதல்:
உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.
மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:
சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:
கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை வளர்ப்பு:
குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
பலதார மணம்
=>
1.ஒரு சில திருமணங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சமுதாய மற்றும் அரசியல் காரணங்களுக்காக செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இஸ்லாத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுடன் தமது நிலைமையைப் பல்வேறு முயற்சிகளின் மூலம் வலுப்படுத்திட முனைந்தார்கள். இதனால்தான் அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறிய வயதுடைய மகளை
மணந்து கொண்டார்கள். அபூபக்கர் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அடுத்தப்படியாகப் பொறுப்பேற்றவர்கள். அதேபோல்தான் அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளை மணந்து கொண்டதும். உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப்பின் பொறுப்பேற்றவர்கள். ஜுபைரியா (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் தான் ‘பனீ அல்-முஸ்தலிக்’ என்ற குலத்தவரின் ஆதரவை திரட்ட முடிந்தது.
பெருமானார் (ஸல்) அவர்களால் ஸபியா (ரலி) அவர்களை மணமுடித்துத்தான் கடின சித்தமுடன் அரபு நாட்டில் வாழ்ந்த யூதர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடிந்தது. எகிப்திலிருந்து வந்த மேரி என்ற பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம் அவர்கள் எகிப்து அரசரருடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஆரம்ப நாட்களில் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம்தந்த நாடு அபிசீனியா. இந்த அபிசீனியா நாட்டைச் சார்ந்த ‘நிகஸ்’ அவர்களால் அளிக்கப்பட்ட ’ஜைனப்’ அவர்களை மணந்து கொண்டது, அபிசீனிய மன்னரிடத்திலும் மக்களிடத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய நட்பின், நன்றியின் வெளிப்பாடேயாகும்.
=> 2.இந்தத் திருமணங்களில் சிலவற்றைச் செய்து கொண்டதன் மூலம் பெருமானார் (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், ஜாதி, மதமாச்சரியங்கள், தேசியம் என்ற குறுகிய கண்ணோட்டங்களை ஒழித்தார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர் நிராதரவானவர்கள், ஏழைகள், அவர்கள் எகிப்திலிருந்து வந்த கிறிஸ்துவப் பெண்மணியை மணந்திருந்தார்கள், வேற்றுச் சமயத்தைச் சேர்ந்திருந்த ஒரு யூதப்
பெண்மணியை மணந்திருந்தார்கள், அபிசீனியாவிலிருந்து வந்த ஒரு நீக்ரோ பெண்மணியை மணந்திருந்தார்கள். சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வாயளவில் பேசிவிட்டு வாளாதிருந்திடுபவர்களல்ல பெருமானார் (ஸல்) அவர்கள், அதனை செயல்படுத்திக் காட்டிடவும் செய்தார்கள்.
=> 3.சில சட்டப் பிரச்சினைகளுள் தெளிவினைத் தருவதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தைச் செய்தார்கள்.
1)>அன்றைய நாட்களில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. இந்தப் பழக்கத்திற்கு உட்பட்டுத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஜைத்’ என்ற அடிமையை தத்தெடுத்து இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் இந்தப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை, தடை செய்தது. இந்தப் பழக்கத்திற்கு நடைமுறையில் முதல் மரணஅடி தந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களே ஆவார்கள்.
’ஜைத்’ அவர்களால் மணவிலக்கு செய்யப்பட்டிருந்த ஜைனப் அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். இதன் மூலம் தான் ஜைத் அவர்களின் உண்மையான ததை ஆகிவிடவில்லை என்பதையும், தத்தெடுக்கும் முறை தத்தெடுப்பவரைத் தந்தையாகவும் தத்தெடுக்கப்பட்டவரை மகனாகவும் ஆக்கி விடுவதில்லை என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
2)>அன்று மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்வதை அரபு மக்கள் அனுமதிக்கவில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் மணவிலக்குச் செய்யப்பட்ட அப்பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம், அதுபோன்ற பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.
வியத்தகு முறையில் இந்த ‘ஜைனப்’ அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் முறைப் பெண்ணுமாவார்கள். முதலில் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ‘ஜைனப்’ அவர்களை மணமுடிக்கும் பேச்சு ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அப்போது மறுத்து விட்டார்கள். அதன் பின்னர்தான் ‘ஜைத்’ அவர்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டது. ‘ஜைத்’ அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட
பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதன் காரணம், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்து மறுவாழ்வளிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டவேயாகும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில், (அதற்கு மாறாக வேறு) அபிப்ராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யாரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
………..’ஜைத்’ அவளை தலாக்கு கூறிவிட்ட பின்னர், நாம் அவளை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், விசுவாசிகளால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தங்கள் மனைவிகளைத் தலாக்கு கூறிவிட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளையாக இருந்தது.
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே அவர் ‘ஜைதுக்கு’ எவ்வாறு தந்தையாக ஆகிவிடுவார்?) ஆனால் அவரோ, அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அணுப்பவில்லை) அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக
இருக்கின்றான்.(திருக்குர்ஆன்: 33:36,37,40)
இந்த உண்மைகளை மனதில் கொண்டே பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட திருமணங்களை அணுகிட வேண்டும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் மனதில் எந்தத் தடுமாற்றமுமில்லை. முஸ்லிமல்லாதவர்கள் நாம் இங்கே தந்திருக்கின்ற உண்மைகளை அவசியம் ஆராய்ந்து தங்களது முடிவுகளை வரையட்டும் என வேண்டுகிறேன்
புதன், பிப்ரவரி 05, 2014
இஸ்லாம் கூறும் வாரிசுரிமை பெறுவோர்
வாரிசுரிமை பெறுவோர்
ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்,
1. மகன்
2. மகனின் மகன்
3. தந்தை
4. தந்தை வழிப் பாட்டன்
5. தாய் வழிச் சகோதரன்
6. தந்தை வழிச் சகோதரன்
7. தாய் தந்தை வழிச் சகோதரன்
8. தந்தை வழிச் சகோதரனின் மகன்
9. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரனின் மகன்
10. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தகப்பனார்
11. தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை
12. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
13. தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
14. கணவன்
15. அடிமையாயிருந்து விடுதலை பெற்றவன்
இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துவாரிசுதாரர்களாக வந்தால் இவர்களில் மூவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர்.
1. மகன்
2. தந்தை
3. கணவன்
இவர்கள் தவிர ஏனையோர் மகன் அல்லது தந்தை இருப்பதால் வாரிசுரிமையை விட்டும் தடுக்கப்படுவர். சொத்துரிமை பெறக்கூடியவர்களில் தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தை, தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை என்று குறிப்பிடப்படுகிறது.
பெண்களில் வாரிசுரிமை பெறுவோர் எழுவர் ஆவர். விரிவாகச் சொன்னால்பத்துப் பேர் வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,
1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. தாய் வழிப் பாட்டி
5. தந்தை வழிப் பாட்டி
6. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி
7. தந்தை வழிச் சகோதரி
8. தாய் வழிச் சகோதரி
9. மனைவி
10. அடிமையாயிருந்து விடுதலை பெற்ற பெண்
வாரிசுரிமை பெறும் பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் இவர்களில் ஐவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,
1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. மனைவி
5. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி
ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை பெறத் தடை செய்யப்படுவர். மேற்கூறப்பட்டவர்களில் ஆண்களும், பெண்களும் ஆகிய அனைவரும் வாரிசுரிமை பெறு வோ ரில் இடம் பெற்றால், மொத்தத்தில்ஐவர் மட்டுமே வாரிசுரிமைப் பங்கீடு பெறுவர். அவர்கள்,
1. தந்தை
2. தாய்
3. மகன்
4. மகள்
5. கணவன் அல்லது மனைவி
ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை இழப்பர்.
சொத்துரிமை கணக்குகளில் பெரும்பாலும் ஆண்களில் 4 பேரும்,பெண்களில் 8 பேரும் மட்டுமே வாரிசுகளாக வருவர்.
பெண் பங்குதாரர்கள்
1. மனைவி
2. தாய்
3. பாட்டி
4. மகள்
5. மகனின் மகள்
6. தாய் வழிச் சகோதரி
7. உடன் பிறந்த சகோதரி
8. தந்தை வழிச் சகோதரி
ஆண் பங்குதாரர்கள்
1. கணவன்
2. தந்தை
3. பாட்டன்
4. தாய் வழிச் சகோதரன்
இவர்கள் தவிர மகன், மகனின் மகன், சிறிய தந்தை, உரிமை விடப்பட்ட அடிமை போன்றோர் அஸபாக்களாக வருவர்.
வாரிசுரிமை ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று ஆகும்.
1. வம்சா வழித் தொடர்பு
2. திருமணத் தொடர்பு
3. ஒப்பந்த அடிப்படையான தொடர்பு (அடிமை-எஜமான் என்ற தொடர்பு)
3 வது வகையான ஒப்பந்த அடிப்படையிலான தொடர்பு இரு வகைப்படும்.
1. நண்பர்கள், கூட்டாக வியாபாரம் செய்வோர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உடன்படிக்கை
2. அடிமை உரிமை விடப்பட்டதால் ஏற்படும் தொடர்பு
வாரிசுரிமையைத் தடுப்பவை மூன்றுநிலைகள் ஆகும். அவை,
1. அடிமைத்தனம்
2. கொலை செய்தல்:- கொன்றவன் கொல்லப்பட்டவனிடமிருந்து எதையும் வாரிசாகப் பெற மாட்டான்.
3. மதமாற்றம் – முஸ்லிமுக்கு காஃபிர் (இறை நிராகரிப்பாள ன் ) வாரிசாக மாட்டான். அதுபோல , காஃபிருக்கு (இறை நிராகரிப்பாளனுக்கு) ஒரு முஸ்லிம் வாரிசுரிமை பெற மாட்டான்
இஸ்லாம் கூறும்கடனும் வஸிய்யத்தும்
கடனும் வஸிய்யத்தும்
ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,
. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தா ன். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன்கடன் அடைக்கப்பட வேண்டும்.
"மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860;
திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156
மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட
வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர்விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்.
சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது. அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம்.அல்லது கடன்
கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்துவிடலாம்.
கடன் என்பதில் மக்களிடம் வாங்கிய கடன் மட்டுமின்றி, இறந்தவர் செலுத்த வேண்டிய ஸகாத்,நஷ்ட ஈட்டுத் தொகை முதலியவையும் அடங்கும் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மஹர் கூட கடன் தான் என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னர் அல்லாஹ்வுக்காக செலுத்தவேண்டிய ஸகாத் போன்றவற்றைச் செலுத்தத்
தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அம்மய்யித்தை அடக்கம் செய்வதற்கான செலவினங்களுக்கும்,கஃபன் ஆடை போன்றவற்றிற்கும் அவரது சொத்தில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அவரது உறவினர்களில் மகன், மகள் போன்றவர்கள் தமது சொந்தப் பணத்தில் செலவு செய்தால் அது குற்றமாகாது. எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதைக் கொடுத்த பின்னர் தான் அவரது சொத்து வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
வஸிய்யத் (உயில்) அவசியமா?
வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடுபெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.
வஸிய்யத் செய்யத்தக்க பொருள்வளம் பெற்றவராக ஒருவர் இருந்தால், அப்பொருள் அவருக்குக் கிடைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வஸிய்யத்து எழுதப்பட்டு விட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ர ஸு ல் (ஸல்) அவர்களிடம் "நான் இதைக் கேள்விப்பட்ட பின்னர், எனது வஸிய்யத்தை நான் எழுதி வைத்து விட்டேன். எழுதி வைக்காமல் ஓர் இரவு கூடக் கழித்ததில்லை!" எனவும் குறிப்பிடுகிறார்கள்.
"வஸிய்யத்து செய்யத்தக்க பொருளாதாரம் ஒரு முஸ்லிமிடம் இருக்க இரண்டு இரவுகள் கடக்கலாகாது!" என நபி (ஸல்) குறிப்பிட்டதாக அஹ்மதில் பதிவாகியுள்ளது,
"உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர், ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது. இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர் எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகாவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
ஆனால் வஸிய்யத் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ, அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து அந்த (வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
(அல்குர் ஆன்: 2:180,181,182)
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வஸிய்யத் செய்வது அவசியம் என்கின்றனர் சிலர். ஒவ்வொரு வாரிசுகளுக்கும் உரிய பங்கு இவ்வளவுதான் எனக் கூறும் 4:11,12மற்றும் 4:176வது வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னருள்ள நிலையாகும் இது. வாரிசுகளின் பாகங்கள் இவ்வளவு என இறைவன் வரையறுத்து விட்டதால் வஸிய்யத் செய்வது அவசியமானது அல்ல. ஒருவர்விரும்பினால் வஸிய்யத் செய்யத் தடை ஏதும் இல்லை
உண்பதற்கு தடுக்கப்பட்டவை
உண்பதற்கு தடுக்கப்பட்டவை -10
1. தாமாகச் செத்தது .
2, இரத்தம் ,
3, பன்றியின் இறைச்சி ,
4. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது ,
5. கழுத்து நெறித்துச் செத்தது ,
6. அடிப்பட்டுச் செத்தது ,
7. கீழே விழுந்துச் செத்தது ,
8. கொம்பால் முட்டப்பட்டு செத்தது ,
9. விலங்குகள் கடித்துச் செத்தது ,
10. இணைக கற்பிக்கப்படும்இடங்களில் அறுக்கப்பது ,
-அல்-குர்ஆன்:-5:3
திங்கள், பிப்ரவரி 03, 2014
ஹஜ் கடமை, துஆ,
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயீப் நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், நஸயீ, ஹாகீம்)
கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன”(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ)
துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்
*.திருக்கஃபா வை முதலில் காணும் போது
*.தவாஃபிலும் தவாஃப் சுற்ரும் இடத்தில்
*.முல்தசிம் (ஹஜறுல் அஸ்வதுக்கும், திருகஃபாவின் நுழைவாயிலுக்கும் இடைப்பாட்ட இடம்)
*.ஹஜறுல் அஸ்வதுக்கும் ருக்னல் யமானிக்கும் இடையில் உள்ள பகுதியில்
*.திருக்கஃபாவின் உள்ளே
*.ஹதீமின் உள்ளே
*.மீஜாபுர் ரஹ்மத் (திருக்கஃபாவின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் விழும் குழாயின் அருகே
*.மகாமு இப்ராஹிமிற்கு அருகே
*.சம்சம் கிணற்றருகே; நீர் அருந்திய பின்னும்
*.ஸஃபாவிலும், ம்ர்வாஅவிலும்
*.ஸயீ செய்யும் இடங்களில் (ஸஃபா-மர்வாவிற்கு இடையில் உள்ள பகுதி)
*.அறஃபாத்தில்
*.முஸ்தலிஃபாவில்
*.மினாவில் 2 சைத்தன்களுக்குக் கல்லெறிந்த பிறகு
*. இஹ்றாமின்தொழுகைக்குப் பின்
ஆகிய இடங்களில் அவரவர்களின் பாவச் செயலுகளையும் தவறுகளையும் நினைத்து வருந்தி இறைவனிடம் மன்றாடி மண்ணிப்பு கேட்டும், அல்லாஹ் வின் கருணையும் அருளும் வேண்டி துஆ செய்வர்.
சடங்குகள்
தவாஃப்
தவாஃபின் பொழுது சுற்றிவரும் முறை
தவாஃப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம். [10]இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.
தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டுரக்அத்கள்தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.
கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.
புனித நீர் பருகுதல
தவாஃப் செய்து முடித்த உடன் அன்றே ஹாஜிகள் 'சஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓட வேண்டும். அதாவது இப்ராகீமின் மனைவி ஹாஜர் தன குழந்தைக்காக தண்ணீர் தேடி ஓடியதை போன்றே ஹாஜிகளும் ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓட வேண்டும். அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம். [12]ஹாஜிகளின் வசதிக்காக தற்பொழுது இந்த நீர் குளிர்ந்த நீராக குளிராக்கிகளில் அங்கேயே கிடைக்கிறது.
ஞாயிறு, பிப்ரவரி 02, 2014
ஜக்காத்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல் குர்ஆன் 2:261)
இறைவனின் பாதையில் தங்கள் செல்வங்களை செலவு செய்த எந்த ஒரு நபித்தோழரும் ‘இதனால் எங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டது’ என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு’ (அல் குர்ஆன் 9:34) என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவர்கள் ்உங்கள் சிரமத்தை நான் நீக்குகிறேன்’ என்று கூறி விட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பாரமாகத் தெரிகிறது’ என்றுக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்தவதற்கே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை’ என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 1417)
ஜக்காத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவேண்டும்.
ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசணத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும்.
ஜக்காத்தை பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது பெற்றோர்களுக்கோ, அல்லது பெற்றோர்களின் பெற்றோருக்கோ அல்லது தமது வாரிசுகளுக்கோ கொடுக்கக் கூடாது.
ஜக்காத்தை இறை நிராகரிப்பாளர்களுக்கோ அல்லது இணை வைப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு அனுமதியில்லை.
சனி, பிப்ரவரி 01, 2014
ரமலான் நோன்பு,(Sawm, அரபு மொழி:) என்பது இசுலாமிய நாட்காட்டியின்ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால்நோற்கப்படும் நோன்புஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர் [1].இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும். ரமலான் மாதச் சிறப்பு *.ரமலான் மாதம்அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். *.இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார். நோன்பின் முக்கியத்துவம் *.வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். *.இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது. *.எல்லா வணக்கங்களும் அல்லாவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். ரமலான் நோன்பு உண்மையான இறையச்சத்தோடும் மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோன்பை ஒரு சடங்காகச் செய்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஒருவர் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடாமல் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் மட்டும் ஆர்வம் கொள்வதால் பயனை அடைய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பும் விதிவிலக்கும் பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. *.முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். *.பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை. *.சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். *.பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். *.கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். *.மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். *."தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும். நோன்பை முறிக்கும் செயல்கள் 1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும். 2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது. 3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது. 4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும். 5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
நோன்பின் அனுமதிகள்
1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது.
2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது.
7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும்.
நோன்பின் ஒழுங்குகள்
1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3. ஸ ஹர்நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர்நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4. ஹலால்என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்.
5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல்,ஹராமானவழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர்இரவை தேடிக்கொள்ள வேண்டும்.
7.பெருநாள் தொழுகைக்குமுன்பு ஸ தகத்துல் ஃபித்ர்எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
தொழுகை என்பதுமுஸ்லிம்களின்மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும்.இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் மறைக்க வேண்டும். எந்த எந்தத் தொழுகையை எந்த எந்தநபி முதலில் தொழுதார்கள்: 1.பஜ்ர் - ஆதம் (அலை) 2.ளுஹர் - இப்ராஹீம் (அலை) 3.அஸர் - யாகூப் (அலை) 4.மஃரிப் - தாவூது (அலை) 5.இஷா - யூனுஸ் (அலை) பாங்கின் பொருள்தொகு அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள் ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் லா இலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி) நூல் : முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி) நூல் : இப்னுமாஜா,அபூதாவூத் ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9 இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58 தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72 எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170 “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14 “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43 உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்d
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழி) நூல் : அஹ்மத்
சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.
பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழி) நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78
இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...